மாநிலங்கள், பாம்புக்கடியை அறிவிக்கக்கூடிய நோயாக கருத ஒன்றிய அரசு ஏன் விரும்புகிறது? -அனோனா தத்

 இந்தியாவில் 310 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில், 66 வகைகள் விஷம் கொண்டதாகவும், மற்றும் 42 வகைகள் சாதாரண விஷம் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றில், 23 வகையான பாம்பின் விஷத்தால் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவையாக உள்ளன.


பாம்புக்கடியை ஒரு அறிவிக்கக்கூடிய நோயாக மாற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களை வலியுறுத்தியுள்ளது. இந்த நோயை தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் சட்டப்பூர்வமாக அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். 


பாம்புக்கடி என்பது நாட்டில் ஒரு பெரிய பொது சுகாதார சவாலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று முதல் நான்கு மில்லியன் பாம்புக்கடி பாதிப்புகள் பதிவாகின்றன. மேலும், அவற்றால் ஆண்டுதோறும் 58,000 பேர் இறக்கின்றனர் என்று இந்தியாவில் முன்கூட்டிய மரணத்திற்கான காரணங்களை ஆய்வு செய்த, 2020 இந்திய மில்லியன் இறப்பு (Indian Million Death Study) ஆய்வு தெரிவிக்கிறது. 


இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடி இறப்புகளை பாதியாகக் குறைக்கும் நோக்கத்துடன் பாம்புக்கடி விஷத்தைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் (National Action Plan for Prevention and Control of Snakebite Envenoming (NAPSE) ) தேசிய செயல் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. பாம்புக்கடியை ஒரு அறிவிக்கக்கூடிய நோயாக (notifiable disease) மாற்ற வேண்டும் என்று NAPSE பரிந்துரைத்தது. 


வழக்கமாக, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, இறப்புக்கு வழிவகுக்கும் மற்றும் தகுந்த பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க விரைவாக ஆய்வு செய்ய வேண்டிய நோய்த்தொற்றுகள் அறிவிக்கக்கூடிய நோய்களாக அறிவிக்கப்படுகின்றன.


இவ்வாறு அறிவிக்கக்கூடிய நோய்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இந்த அறிவிப்பைக் கொண்டுவருவதற்கு மாநில அரசுகளின் பொறுப்பு அதிகம்.  அவற்றில் பெரும்பாலானவை காசநோய், எச்.ஐ.வி, காலரா, மலேரியா, டெங்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் அறிவிக்கத்தக்கவை என்று கருதுகின்றன. 


பாம்புக்கடிக்கு உடனடி கடுமையான மருத்துவ அவசரநிலைகளுக்கு வழிவகுக்கும். அவை கடுமையான பக்கவாதத்தை ஏற்படுத்தும்.  மேலும், அவை சுவாச பாதிப்பு, ஆபத்தான இரத்தப்போக்குக்கு மற்றும் வெவ்வேறு திசுக்களை சேதப்படுத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.


இறப்பு மற்றும் கடுமையான அறிகுறிகளைத் தடுக்க பாம்புக்கடிக்கு விஷமுறிவு (antivenoms) மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். 


இந்தியாவில் 310 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில், 66 வகைகள் விஷம் கொண்டதாகவும், மற்றும் 42 வகைகள் சாதாரண விஷம் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றில், 23 வகையான பாம்பின் விஷத்தால் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவையாக உள்ளன. இருப்பினும், நாட்டில் கிட்டத்தட்ட 90% பாம்புக்கடிகளுக்கு நான்கு வகையான பாம்புகள் காரணமாகின்றன. அதில் இந்திய நாகப்பாம்பு, காமன் க்ரைட், ரஸ்ஸல்'ஸ் விப்பர் மற்றும் ரம்-ஸ்கேல்டு விப்பர் போன்றவை அதிக பாதிப்பை ஏற்படுத்துபவையாகும்.


வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பாலிவேலன்ட் விஷமுறிவு (polyvalent antivenom) நான்கு இனங்களிலிருந்தும் விஷத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது 80% பாம்புக்கடிக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். 


பாம்புக்கடியை அறிவிக்கக் கூடியதாகச் செய்வது முறையான கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியா முழுவதும் பாம்புக்கடி பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் துல்லியமான எண்ணிக்கையை தீர்மானிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாம்புக்கடி நிகழ்வுகளை திறம்பட நிர்வகிக்கவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இந்த தகவலைப் பயன்படுத்தலாம். பல்வேறு பகுதிகளுக்கு போதுமான விஷமுறிவு மருந்துகளை வழங்கலாம். மேலும், பாம்புக்கடி பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் முறையான பயிற்சி அளிக்கப்படலாம். 


அனைத்து மாநில சுகாதார செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் புண்யா சாலியா எழுதியுள்ள கடிதத்தில், "பாம்புக்கடி கண்காணிப்பை வலுப்படுத்த அனைத்து பாம்புக்கடி பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்த தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புக்கு காரணமான காரணிகள் போன்றவற்றை அளவிட உதவும். இது, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கு வழிவகுக்கும்.


பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மக்கள்தொகை, குறைந்த உயரம், விவசாயப் பகுதிகளில் பெரும்பாலான பாம்புக்கடி நிகழ்கிறது என்று NAPSE தெரிவித்துள்ளது. 


முக்கியமான மூன்று சவால்கள்


சிகிச்சை: பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் ஒரு சுகாதார மையத்திற்கு செல்வதில்லை. அதற்குப் பதிலாக பலர் நம்பிக்கை அடிப்படையிலான குணப்படுத்துபவர்களை அணுகுகிறார்கள். 


பல சந்தர்ப்பங்களில், சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்க போதுமான பயிற்சி இல்லை. பாம்புக்கடியை உறுதி செய்வதற்கான சோதனைகளும் இல்லை. 


விஷமுறிவு மருந்துகள்: நாட்டில் விஷமுறிவு மருந்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட அனைத்து விஷங்களும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் வாழும் இருளர் பழங்குடியினரால் பிடிக்கப்பட்ட பாம்புகளிலிருந்து வந்தவை. இது ஒரு பெரிய சவாலாகும். ஏனெனில், ஒரே பாம்பு இனத்திலிருந்து உயிர்வேதியியல் கூறுகள் மற்றும் விஷத்தின் விளைவு புவியியலின் அடிப்படையில் வேறுபடலாம். 


"இந்த வேறுபாடுகள் நாட்டின் ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்திலிருந்து விஷ மாதிரிகளுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வணிக ரீதியான ASV (anti-snake venom) மோசமான நோயெதிர்ப்பு குறுக்கு நடுநிலை மற்றும் நச்சுத்தன்மையை நடுநிலையாக்குவதைக் காட்டுகின்றன" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் (ஐ.ஜே.எம்.ஆர்) வெளியிடப்பட்ட 2020-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 


விஷத்தின் ஆற்றல் வயதுக்கு ஏற்ப மாறுகிறது என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, ரஸ்ஸலின் வைப்பர் நியோனேட்டுகளின் விஷம் பெரியவர்களை விட பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது என்று 2024-ஆம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கூடுதலாக, விஷமுறிவுகள் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன.


வடகிழக்கில் உள்ள க்ரைட், மோனோக்கிள்ட் நாகப்பாம்பு மற்றும் பச்சை குழி வைப்பர் போன்ற உள்ளூர் பாம்பு இனங்கள் உள்ளன. வணிகச் சந்தையில் கிடைக்கும் ஆன்டிவெனோம் இந்த பாம்புகளின் கடிக்கு எதிராக வேலை செய்யாது.


விஷமுறிவுகளின் இந்த வரம்புகள் காரணமாக, ஆராய்ச்சியாளர்கள் இப்போது செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளை உருவாக்கி வருகின்றனர். அவை பல்வேறு பாம்பு இனங்களில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும். நச்சுத்தன்மையை எதிர்த்துப் போராட செயற்கையாக வடிவமைக்கப்பட்ட மூலக்கூறுகளையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். 


விஷ சேகரிப்பு: பிராந்திய வேறுபாடுகளை மறைக்கக்கூடிய விஷமுறிவு மருந்துகளை உருவாக்க நாடு முழுவதும் மண்டல விஷ சேகரிப்பு வங்கிகளை (venom collection banks) அமைக்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, பாம்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இது போன்ற வங்கிகளை அமைப்பது சவாலாக உள்ளது. 




Original article:

Share: