நோக்கம் இல்லாமல் முடிகிறது : பல்கலைக்கழக மானியக் குழு சீர்திருத்தங்கள் மற்றும் உயர்கல்வி குறித்து . . .

 பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) சீர்திருத்தங்களின் இலக்குகள் தெளிவானவை. இருப்பினும், அவைகளுக்கு ஆதரவளிக்க சரியான ஆதாரங்கள் தேவை.


வரைவு UGC (இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) விதிமுறைகள் (UGC (Minimum Standards of Instruction for the Grant of Undergraduate and Postgraduate Degree) Regulations), 2024 இந்தியாவின் உயர்கல்வி முறையில் பெரிய மாற்றங்களை பரிந்துரைக்கிறது. இளங்கலை (undergraduate (UG)) மற்றும் முதுகலை (postgraduate (PG)) படிப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சேர்க்கையில், எந்தவொரு துறையைச் சேர்ந்த மாணவர்களும் பொருத்தமான தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் UG மற்றும் PG-ல் எந்தவொரு துறைச் சார்ந்த படிப்பையும் தொடர உதவுவதும் மற்றும் படிப்புகளை நீட்டிக்க அல்லது தீவிரப்படுத்த அனுமதிப்பது ஆகியவை இதில் அடங்கும். மாணவர்கள் ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளைத் தொடரலாம். உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய வருகைக்கானத் தேவைகளை நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் இருக்கும். யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமாரின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் கடுமையான கட்டுப்பாட்டை அகற்றும், உலகளாவிய தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இதன் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், ஒரு விதிமுறையானது தேர்வுகளை ஒரு தகுதிக்கான அளவுகோலாக மையப்படுத்துகிறது. இது நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கலாம். இந்த, வரைவு விதிகள் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 உடன் ஒத்துப்போகின்றன. இது கலப்பின கற்றல் மாதிரிகள் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வியை வலியுறுத்துகிறது. வரைவு விதிகள் தேசிய கடன் கட்டமைப்பை (National Credit Framework) செயல்படுத்துவதற்கும் ஆதரவளிக்கின்றன. இது மாணவர்களுக்கு அதிகளவில் கல்வியை அணுகுவதற்கு  நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. 


எவ்வாறாயினும், இந்த சீர்திருத்தங்களின் இலக்குகள் தெளிவாக இருந்தாலும், அத்தகைய பெரும் மாற்றங்களை செயல்படுத்த போதுமான ஆதாரங்கள் உள்ளனவா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. இதில், பொருந்தக்கூடிய அளவில், போதிய ஆசிரியர்கள் இல்லாமை, நிதிப் பற்றாக்குறை மற்றும் போதுமான பயிற்சிபெற்ற அல்லது ஊக்கமளிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை போன்ற முறையான பிரச்சினைகள் மிகப்பெரிய தடைகளாக உள்ளன. மேலும், பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் இணைப்புக் கல்லூரிகளை (affiliated colleges) நிர்வகிக்கும் வகுப்புக்கான தேவைகள் போன்ற ஒழுங்குமுறை கட்டமைப்பு, தன்னாட்சி நிறுவனங்களில் மிகவும் எளிதாக செயல்படுத்தக்கூடிய இந்த புதிய விதிகளை ஆதரிக்க போதுமான வசதிகள் இல்லை. கல்வி என்பது தற்போது பொதுப்பட்டியலில் (concurrent list) இருப்பதால், மாநில அரசுகள் பெரும்பாலும் புதிய விதிமுறைகளுக்கேற்ப ஆரம்பத்தில் ஒன்றிய அரசுக்கு இணங்குவதைக் காட்டுகின்றன. 


ஆனால், பின்னர் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுகின்றன. கல்வி அமைப்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்குள் உள்ள செயலற்ற தன்மை, 'கல்வி கடன் வங்கி' (academic bank of credits) போன்ற மாற்றங்களை திறம்பட ஏற்றுக்கொள்வதை மேலும் சிக்கலாக்குகிறது. இந்த முயற்சி மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் பதிவு செய்யவும், மற்றொரு நிறுவனத்திலிருந்து படிப்புகளை எடுக்கவும், ஒரு நிறுவனத்தில் பயிற்சிகளை முடிக்கவும் அனுமதிக்கிறது. இதன் பின்னர், முதல் நிறுவனத்தால் பட்டம் வழங்கப்படுகிறது. இத்தகைய நெகிழ்வுத்தன்மை வியக்கத்தக்கது என்றாலும், இது பாரம்பரிய கல்விக் கட்டமைப்புகளிடமிருந்து கணிசமான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. மேலும், இந்த சீர்திருத்தங்களின் வெற்றியானது கல்வியில் முதலீட்டின் கணிசமான அதிகரிப்பைச் சார்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது உயர் கல்விக்கு 15% குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுஜிசி வரைவு விதிகள் ஒரு நம்பிக்கைக்குரிய விதிமுறைகளை வழங்கினாலும், அவற்றின் வெற்றி தற்போதுள்ள முறையான சவால்களை எதிர்கொள்வதிலும், போதுமான ஆதாரஙகள் இருப்பதை உறுதி செய்வதிலும் சவால்களை எதிர்கொள்கிறது. 




Original article:

Share: