முக்கிய அம்சங்கள் :
1. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி சூர்யா காந்த், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை விசாரணைக்கு, கணிசமான அளவு நேரம் தேவைப்படும் என்று மனுதாரர்களிடம் கூறினார். இந்த வழக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், (Chief Election Commissioner and Other Election Commissioners Act) 2023 தொடர்பானது. இந்த வழக்கு இறுதியில் சட்டமன்ற அதிகாரங்களுக்கும், நீதிமன்றத்தின் கருத்துக்கும் இடையிலான மோதலை உள்ளடக்கும் என்று நீதிபதி சூர்யா காந்த் மேலும் கூறினார்.
2. மார்ச் 2023-ம் ஆண்டில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அத்தகைய சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை என்று கூறும் மனுக்களை விசாரித்தது. மனுதாரர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்களை (Election Commissioners (EC)) நியமிப்பதற்கு கொலீஜியம் அடிப்படையிலான முறையைக் (collegium-style system) கோரினர். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
3. இருப்பினும், அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் பிற தேர்தல் ஆணையங்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், (Chief Election Commission and Other Election Commissions (Appointment, Conditions of Service and Term of Office) Act) 2023 ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டம் இந்திய தலைமை நீதிபதியை (CJI) தேர்வுக் குழுவிலிருந்து (selection panel) நீக்கியது. மேலும், இந்த புதிய சட்டத்தின் கீழ், தேர்வுக் குழுவில் பிரதமர் அவர்களும், மத்திய அமைச்சரும் இடம்பெறுவார். கூடுதலாக, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவரும் இதில் அடங்குவர்.
4. இதை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அரசு சாரா அமைப்பு (NGO Association) மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், நீதிமன்றம் இதுவரை புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது.
5. 2023-ம் ஆண்டு இதுபோன்ற ஒரு விசாரணையின் போது, மார்ச் 2023 தீர்ப்பு நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை இயற்றும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது. அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பானது, தேர்வுக் குழுவில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
உங்களுக்கு தெரியுமா?
1. மார்ச் 2, 2023 அன்று, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) ஒரு குழுவால் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி (CJI) ஆகியோர் இடம்பெற வேண்டும்.
2. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட சட்டமன்ற செயல்முறையை வழங்கவில்லை. எனவே, இதன் அடிப்படையில் இந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமனங்களைச் செய்கிறார்.
3. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவு "நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டது" என்று தெளிவுபடுத்தியது.
4. இதன் விளைவாக, அரசாங்கம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Bill) 2023-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு அமைச்சரவையில் அமைச்சரைக் கொண்ட ஒரு குழுவை முன்மொழிந்தது.
5. இந்த மசோதா, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு (EC) அமைச்சரவை செயலாளருக்குச் சமமான சம்பளம், சலுகைகள் மற்றும் படிகளை வழங்க முன்மொழிந்தது.
6. இந்த மசோதா 1991-ம் ஆண்டு தேர்தல் ஆணையச் சட்டத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 1991 சட்டத்தின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே சம்பளம் பெறுகிறார்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தற்போது அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். இது அரசியலமைப்பின் பிரிவு 324(2)-ன் படி செய்யப்படுகிறது. "தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையரையும், குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயிக்கும் பிற தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையையும் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், நாடாளுமன்றத்தால் அதற்காக இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படும்."