முதல் மதிப்பீட்டில், தமிழ்நாட்டின் “இதயம் காப்போம்” திட்டம் நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது - செரீனா ஜோஸ்பின் எம்.

 இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க, ஆரம்ப சுகாதார மையங்கள் (primary health care (PHC)) மற்றும் துணை சுகாதார நிலையங்களில் (sub-health centers (HSC)) இதயத்திற்கு ஏற்ற மருந்துகளை (ஆஸ்பிரின், குளோபிடோக்ரல் மற்றும் அடோர்வாஸ்டாடின்) வழங்குவதற்கான ஒரு முயற்சியாக “இதயம் காப்போம் திட்டத்தை” ஜூன் 27, 2023 அன்று தமிழ்நாடு அரசு தொடங்கியது.


பொது சுகாதார இயக்குநரகம் (Directorate of Public Health (DPH)) முதல் முறையாக "இதயம் காப்போம்" திட்டத்தை மதிப்பீடு செய்தது. ஆரம்ப சுகாதார மையங்கள் (PHCs) மற்றும் சுகாதார துணை மையங்களில் (HSCs) கடுமையான கரோனரி நோய்க்குறி அறிகுறிகளைக் (Acute Coronary Syndrome) கொண்ட நோயாளிகளுக்கு இதயத்திற்கு ஏற்ற மருந்துகளை வழங்குவது உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்த உதவியது என்பதைக் கண்டறிந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் உயர் மருத்துவ வசதியை அடைந்த நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.



முதன்மை பராமரிப்பு அமைப்பில் மார்பு வலியுடன் கூடிய மற்றும் இதய துடிப்பு அளவைப் பெற்ற நோயாளிகளின் விளைவுகளை மதிப்பிடுவதற்காக, கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பொது சுகாதார இயக்குநகரத்தின் மருத்துவர்கள், இந்தத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 2024 வரையிலான திட்டத்தின் கீழ் உள்ள 6,493 நோயாளிகளின் இரண்டாம் நிலை தரவு பகுப்பாய்வை மேற்கொண்டனர். இந்த மதிப்பீடுகள் தமிழ்நாட்டில் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் முதன்மை பராமரிப்பு வசதிகளில் இதயத் துடிப்பின் அளவைப் பெற்ற கடுமையான கரோனரி நோய்க்குறி (acute coronary syndrome (ACS)) அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் மருத்துவ சுயவிவரம் குறித்த ஆய்வு" என்ற கட்டுரையில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய பதிப்பில் வெளியிடப்பட்டன.


பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் மற்றும் ஆசிரியர்களில் ஒருவரான டி.எஸ். செல்வவிநாயகம், இது ஒரு ஆரம்ப பகுப்பாய்வு என்றும், எதிர்காலத்தில் இந்த தலையீடுகளின் விளைவுகளை மேலும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.


மக்கள்தொகை ஆய்வில், பெரும்பாலான நோயாளிகள் ஆண்களாக இருந்தனர். மொத்தம் 4,248 ஆண்கள் மட்டும் இருந்தனர். இதில் பாதிப் பேர் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். இதில் 2,137 ஆண்களும் 1,148 பெண்களும் அடங்குவர்.


அறிகுறிகள் வாரியாக, 76.5% (4,964) பேர் மார்பு வலி இருப்பதாக  முதன்மை சுகாதார மையங்களுக்கு புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து 10.9% பேரில் படபடப்பும் (Alpitations), 6.6% நோயாளிகளில் கழுத்து/தாடை/கை/தோள்பட்டை வரை வலியும் ஏற்பட்டதாகக் கூறினார்.


ஒரு நோயாளிக்கு ஆரம்ப சுகாதார மையங்கள் (primary health care (PHC)) மற்றும்  துணை சுகாதார நிலையங்களில் (sub-health centers (HSC)) கரோனரி நோய்க்குறி அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் இதயத்துடிப்பலைப்பதிவுக்கு (electrocardiogram (ECG)) பரிந்துரைக்கப்படுவார்கள். ECG-க்குப் பிறகு, நோயாளி மாவட்ட இருதயநோய் நிபுணரிடம் தொலைபேசியில் ஆலோசனை பெறுவார். பின்னர், நோயாளிக்கு இதய அளவை அதிகரிப்பதற்கான அவசர டோஸ் வழங்கப்படுகிறது. மேலும், சிகிச்சைக்காக நோயாளி இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.


உயர் மையங்களில், 90% நோயாளிகளுக்கு (5,846) மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 10% நோயாளிகளுக்கு (647) இரைப்பை அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது. முடிவுகளை மதிப்பிடுகையில், 97.7% நோயாளிகள் (6,346) உயிருடன் இருந்தனர் மற்றும் நிலையானவர்களாக இருந்தனர். 2.2% நோயாளிகள் (143) இறந்தனர். 0.1% நோயாளிகள் (4) பயணத்தின் போது உயிரிழந்துள்ளனர்.


இணை நோய்கள் (Co-morbidities)


மக்கள்தொகை ஆய்வில், 43.6% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் 21.5% பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நீரிழிவு இல்லாதவர்களை விட (1.9%) நீரிழிவு நோயாளிகளுக்கு 3.2% இறப்பு விகிதம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.5% ​​இறப்பு விகிதம், ஒரு வருடத்திற்கும் குறைவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.8% இறப்பு விகிதம் இருந்தது. கரோனரி தமனி நோயின் (coronary artery disease (CAD)) முந்தைய வரலாறு, CAD வரலாறு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது 6.4% இறப்பு விகிதத்துடன் தொடர்புடையது அவர்களின் இறப்பு விகிதம் இரண்டு சதவீதமாக இருந்தது.


பரிந்துரைக்கப்பட்ட வசதியை அடைய எடுக்கப்பட்ட நேரம் ஒரு முக்கியமான காரணியாகும். கடுமையான மார்பு வலி ஏற்பட்ட 60 நிமிடங்களுக்குள் மருத்துவமனையை அடைந்தவர்களுக்கு சிறந்த உயிர்வாழும் விகிதம் இருந்தது. 60 நிமிடங்களுக்கு மேல் தாமதமானவர்களுக்கு 6.1% அதிக இறப்பு விகிதம் இருந்தது.  கடுமையான மாரடைப்பு சிகிச்சையில் "தங்க மணிநேரத்தின்" (golden hour) முக்கியத்துவத்தை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.  இதய அளவை சீராக வைப்பதற்கு சராசரியாக 13.09 நிமிடங்கள் ஆகும். நோயாளிகளை இரண்டாம் நிலை/மூன்றாம் நிலை பராமரிப்பு மையத்திற்கு மாற்றுவதற்கான சராசரி நேரம் 46.25 நிமிடங்கள் ஆகும். 




தங்க மணிநேரம் (golden hour) என்றால் என்ன?


மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம்  தங்க மணி நேரம் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்ட முதல் 60 நிமிடங்களுக்குள் சரியான முறையில் சிகிச்சை பெறுவது கடுமையான பாதிப்புகளைத் தடுக்கும்.



ஆரம்பகால இருதய அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வின் முடிவில் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் கீழ் உள்ள முதன்மை பராமரிப்பு மையங்களில் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.




Original article:

Share: