குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. நடந்துவரும் விவசாயிகள் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு சௌஹானின் எச்சரிக்கையான பதிலானது, விவசாயப் பிரச்சினையில் அரசாங்கத்தின் மாற்றப்பட்ட அணுகுமுறையைக் காட்டுகிறது. கடந்த காலத்தில், நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இருப்பினும், அதன் தற்போதைய ஆட்சியில் (NDA அரசாங்கம் 3.0), அது விவசாயப் பிரச்சினையிலிருந்து ஒரு இடைவெளியைப் பேணுவதாகத் தோன்றுகிறது.


2. தொடர்ந்து முட்டுக்கட்டை இருந்தும், போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு ஈடுபடுவதை ஒன்றிய அரசு தவிர்த்து வருகிறது. மேலும், பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (minimum support price (MSP)) சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும். இதனுடன், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.


இம்முறை விவசாயப் போராட்டத்தின் அணுகுமுறையில் ஒன்றியத்தின் மாற்றத்தை விளக்கும் பல்வேறு காரணிகள் இருக்கலாம். முதலாவதாக, தற்போதைய மறியல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் மட்டுமே உள்ளது. எனவே, அதன் புவியியல் பரவல் 2020-21ஆம் ஆண்டில் விவசாய இயக்கத்தைப் போல பரவலாக இல்லை.


 இரண்டாவதாக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha (SKM)) (பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல விவசாய சங்கங்களின் ஒரு அமைப்பு) திட்டம் உட்பட பல முன்னணி விவசாய அமைப்புகள், அதன் கோரிக்கைகளை ஆதரித்த போதிலும், தற்போதைய போராட்டத்தில் சேரவில்லை. மூன்றாவதாக, 2020-21ஆம் ஆண்டு இயக்கம் ஒன்றியத்தின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருந்தபோதிலும், தற்போதைய எதிர்ப்பு பல கோரிக்கைகளைக் கொண்டுள்ளது. இதில் முந்தைய இயக்கங்களின் சில கோரிக்கைகளும் அடங்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


பஞ்சாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் :


டாக்டர் சுவாமிநாதன் குழுக்களின் பரிந்துரைகளின்படி பயிர்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்.


விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு முழுமையான கடன் தள்ளுபடி.


நிலம் கையகப்படுத்தும் சட்டம் (Land Acquisition Act), 2013, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலை உறுதிசெய்து, நிலம் கையகப்படுத்துவதற்கு முன் நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.


உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) இருந்து இந்தியா விலக வேண்டும். மேலும், அனைத்து விதத்திலும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களையும் (free trade agreements) நிறுத்த வேண்டும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) கீழ், 700 ரூபாய் தினசரி ஊதியத்துடன் வருடத்திற்கு 200 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து, கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்த விவசாயத்துடன் MGNREGA ஐ இணைக்கவும், போலி விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கவும், விதை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் சட்டம் உருவாக்க வேண்டும்.


மிளகாய், மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களுக்கான தேசிய ஆணையத்தை அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைக்கவும்.


அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை நடைமுறைப்படுத்துதல், பழங்குடியின சமூகங்களின் நீர், காடுகள் மற்றும் நிலத்தின் மீதான உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் பழங்குடியினரின் நிலங்களை பெருநிறுவனங்கள் சுரண்டுவதை நிறுத்துதல்.




Original article:

Share: