PM-SHRI திட்டம் என்றால் என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்:


  • மத்தியப் பிரதேசம் 13,198 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் 12,611 ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளைக் கொண்டுள்ளது.


  • முந்தைய ஆண்டை விட 2023-24 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


  • 2023-24 கல்வியாண்டில், 12,954 பள்ளிகளில் சேர்க்கை இல்லை. 2022-23 கல்வியாண்டில் 10,294 ஆக இருந்தது. இது 2,660 பள்ளிகளின் அதிகரிப்பு ஆகும். மேற்கு வங்கத்தில் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் (3,254), அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (2,167) மற்றும் தெலுங்கானா (2,097) உள்ளன.


உங்களுக்கு தெரியுமா ?:


  • PM SHRI திட்டம், 2022 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 நடைமுறைப்படுத்தவும் மற்றும் அவர்களின் பகுதிகளில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் தற்போதைய தொடக்க, இடைநிலை மற்றும் மூத்த மேல்நிலைப் பள்ளிகளை உள்ளடக்கியது.


  • PM SHRI இனையதளத்தில் தற்போது 10,077 பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் 839 கேந்திரிய வித்யாலயாக்களும், 599 நவோதயா வித்யாலயாக்களும் ஒன்றிய அரசால் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 8,639 பள்ளிகள் மாநில அல்லது உள்ளூர் அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.


  • ஐந்து ஆண்டுகளில் (2026-27 வரை) திட்டத்திற்கான மொத்தச் செலவு 27,360 கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசு ரூ.18,128 கோடியை ஈடுகட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தப் பள்ளிகளால் செய்யப்பட்ட மேம்பாடுகளைப் பராமரிக்க வேண்டும்.




Original article:

Share: