பொதுச் சிவில் சட்டம் (Uniform Civil Code (UCC)) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. இம்மாதம் பொதுச் சிவில் சட்டம் (Uniform Civil Code (UCC)) நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உள்துறைச் செயலாளர் ஷைலேஷ் பகோலி, பயிற்சி அமர்வுகளுக்கு (training sessions) தங்கள் மாவட்டங்களில் உள்ள இடங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


2. அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் இருவருக்கும் வசதியை உறுதிப்படுத்த, மூன்று உதவி மையங்கள் நிறுவப்படும். தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (Information Technology Development Agency (ITDA)) தொழில்நுட்ப ஆதரவை வழங்கும், CSC பயிற்சிக்கு உதவும். மேலும், இந்த மையங்கள் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் அரசுத்தரப்பு துறைரீதியாக (Prosecution Department) சட்ட உதவியை வழங்கும்.


3. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை, குடும்ப விவகாரங்களில் சட்டங்களை உருவாக்க ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களை அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில், உத்தரகாண்ட் அரசு தனது சொந்த பொதுச் சிவில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.


4. இந்தச் சட்டம் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அனைவருக்கும் பொருந்தும். இருப்பினும், இது ஆண் அல்லது பெண் என எதிர்பாலின உறவுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பெரும்பாலான பால் புதுமையினர் (LGBT) சேர்க்கப்பட மாட்டார்கள் என்பதே இதன் பொருள்.


உங்களுக்குத் தெரியுமா?


1. ஒரு பொதுச் சிவில் சட்டம் முழு நாட்டிற்கும் ஒரு சட்டத்தை உருவாக்கும். இதில் திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களில் இது அனைத்து மத சமூகங்களுக்கும் பொருந்தும்.


2. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒரே மாதிரியான தனிநபர் சட்டங்களின் அவசியத்தை அங்கீகரித்தனர். ஆனால், அதை அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாட்டில் வைத்தனர். அரசியலமைப்பின் 44வது பிரிவு "இந்தியாவின் எல்லை முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான பொதுச் சிவில் சட்டத்தை பாதுகாக்க அரசு முயற்சி செய்யும்" என்று கூறுகிறது.


3. அரசியலமைப்புப் பிரிவு 44 என்பது அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளின் ஒரு பகுதியாகும். உத்தரவுக் கோட்பாடுகள் நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதவை. அவை நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும் வழிகாட்டவும் வேண்டும்.


Original article:


https://indianexpress.com/article/upsc-current-affairs/upsc-key-rural-poverty-farmers-protest-and-uniform-civil-code-9761041/  

Share: