ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி வழக்கு மற்றும் ஷரோன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன? அவை எவ்வாறு வேறுபட்டன? மரண தண்டனை அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா? எந்த சூழ்நிலைகளில் மரண தண்டனை வழங்கப்படலாம். அதில் நீதித்துறை விருப்புரிமை (judicial discretion) பங்கை வகிக்கிறதா?
ஜனவரி 22 அன்று, இரண்டு கொலை வழக்குகளில் வெவ்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொன்றில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மாறுபட்ட தீர்ப்புகள் இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனையை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. “அரிதினும் அரிதான” கோட்பாட்டின் மீதான விவாதங்களை மீண்டும் அதிகரித்தன. இருப்பினும், அதற்கு இன்னும் தெளிவான சட்ட வரையறை இல்லை.
வழக்குகள் என்ன?
ஆகஸ்ட் 9, 2024 அன்று, இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, கருத்தரங்கு அறைக்குள் இந்தக் குற்றம் நடந்தது. சமூகத் தன்னார்வலரான சஞ்சய் ராய் இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தடயவியல் சான்றுகள் அவரை இந்த வழக்குடன் தொடர்புபடுத்தின. ஜனவரி 20 அன்று, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். தண்டனை விதிக்கும் போது, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, இந்த வழக்கு “அரிதினும் அரிதான” குற்றமாகத் தகுதி பெறவில்லை என்று கூறினார். இதன் விளைவாக, ராய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, ஷரோன் கொலை வழக்கு மரண தண்டனை தீர்ப்புக்கு வழிவகுத்தது. கேரளாவைச் சேர்ந்த 23 வயது மாணவி ஷரோன் ராஜ், அக்டோபர் 14, 2022 அன்று விஷம் வைத்து கொல்லப்பட்டார். அவரது காதலி கிரீஷ்மா, ஆயுர்வேத மருந்தில் விஷம் கலந்து அவருக்குக் கொடுத்தார். பதினொரு நாட்களுக்குப் பிறகு, பல உறுப்புகள் செயலிழப்பால் ஷரோன் இறந்தார். நெய்யாற்றின்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் இதை "அரிதினும் அரிதான" வழக்காக தீர்ப்பளித்தது. நீதிமன்றம் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது.
கோட்பாட்டின் தோற்றம் ?
நீதிபதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான விருப்புரிமை குறித்த விவாதம் 1972-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஜக்மோகன் சிங் VS உ.பி. மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை உறுதி செய்தது. மரண தண்டனை பிரிவு 19-ன் கீழ் உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக மனுதாரர் வாதிட்டார். இதன் காரணமாக, மரண தண்டனை நியாயமற்றது என்றும் பொது நலனுக்கு ஏற்றதாக இல்லை என்றும் அவர் கூறினார். மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்கும் இடையில் தேர்வு செய்வதற்கு நீதிபதிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சரியான விதிகள் இல்லாமல் இது நீதிபதிகளுக்கு அதிக அதிகாரத்தை அளித்ததாக அவர் நம்பினார். இறுதியாக, தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாதது சட்டத்தின் முன் அனைவரும் சமம் (equality before the law) என்று உறுதி செய்யும் அரசியலமைப்பின் பிரிவு 14-ஐ மீறுவதாக அவர் வாதிட்டார்.
இருப்பினும், நீதிமன்றம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனைக்கான சாத்தியக்கூறுகளை அறிந்திருக்கிறார் என்றும், விசாரணையின் போது, சூழ்நிலைகளைத் தணிப்பது உட்பட அனைத்து தொடர்புடைய உண்மைகளையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது என்று கூறி நீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்து, மரண தண்டனை பிரிவு 21-ன் கீழ் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. அந்த கட்டத்தில், மரண தண்டனை எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இது நீதிபதிகள் முடிவெடுப்பதில் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்த அனுமதித்தது.
1980ஆம் ஆண்டு, பச்சன் சிங் VS பஞ்சாப் மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் “அரிதினும் அரிதானது” கோட்பாட்டை நிறுவியது. இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து, விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், “அரிதினும் அரிதானது” என்ற அர்த்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இது குழப்பத்திற்கு வழிவகுத்தது. இறுதியாக மச்சி சிங் VS பஞ்சாப் மாநிலம் 1983-ஆம் ஆண்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் “அரிதினும் அரிதானது” கோட்பாட்டிற்கான வரைமுறையை வழங்கியது.
அத்தகைய தண்டனையை நியாயப்படுத்தும் ஐந்து வகையான குற்றங்களை நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ளது:
அளவுகோல்கள்:
அ) கொலை செய்யும் விதம் (Manner of murder)- சமூகத்திற்குள் மிகுந்த கோபத்தைத் ஏற்படுத்தும் வகையில் கொலை மிகவும் கொடூரமாக மற்றும் கொடூரமான முறையில் செய்யப்படும் போதும்,
ஆ) கொலைக்கான நோக்கம் (motive of the murder)- கொலைக்கான காரணம் முழுமையான ஒழுக்க சீர்கேட்டை வெளிப்படுத்தினாலும்,
இ) சமூக ரீதியாக வெறுக்கத்தக்க இயல்பு – பாதிக்கப்பட்டவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், கொலை தனிப்பட்டதாக இல்லாமல் சமூக சீற்றத்தை ஏற்ப்படுத்தினாலும்,
ஈ) குற்றத்தின் அளவு மற்றும்
இ) குற்றவாளியின் ஆளுமை - கொலையால் பாதிக்கப்பட்டவர் ஒரு குழந்தையாகவோ, உதவியற்ற பெண்ணாகவோ, வயதானவர் அல்லது உடல் நலக்குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்களிடம் குற்றங்களை செய்தல் அந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனைகளை நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதா?
1983-ஆம் ஆண்டு மச்சி சிங் VS பஞ்சாப் மாநிலம் வழக்கில் அமைக்கப்பட்ட கட்டமைப்பை மீறி, உச்ச நீதிமன்றம் மிது VS பஞ்சாப் மாநிலம் வழக்கில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 303-ஐ நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் போது கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்க இந்த பிரிவு கட்டாயப்படுத்தியது. இந்தச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, அனைத்து கொலை வழக்குகளும் இப்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்படும். கொலை செய்யும் எவருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும், அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இந்தப் பிரிவு கூறுகிறது.
செப்டம்பர் 2022-ல், மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் "அர்த்தமுள்ள, உண்மையான மற்றும் பயனுள்ள" சூழ்நிலைகளை எவ்வாறு சரி செய்வது என்ற கேள்வியை அரசியலமைப்பு அமர்வின் கவனத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை தானாக முன்வந்து (suo motu) தனித்தனியாக எடுத்துக் கொண்டால், அது ஒரு சீரான அணுகுமுறையை ஏற்படுத்தக்கூடும். இந்த அணுகுமுறை குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணை கட்டத்திலேயே சூழ்நிலைகளை எவ்வாறு சரி செய்வது தனது கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும். குற்றம் "அரிதினும் அரிதானது" என்று வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு இது நடக்கும்.
இந்தியாவில் மரண தண்டனை சிக்கலானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. உச்சநீதிமன்றம் அதை பயன்படுத்துவதற்கான ஒரு வரையறையை வழங்கியுள்ளது. இருப்பினும், "அரிதினும் அரிதான" குற்றங்களுக்கு தெளிவான மற்றும் உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை. இந்த வரையறையின்மை நீதிபதிகள் வழக்குகளை முடிவெடுப்பதில் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.