கல்வியில் மாநிலங்களுக்கான ஒன்றிய நிதியுதவியானது தேசிய கல்விக் கொள்கையிலிருந்து (NEP) பிரிக்கப்பட வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை 2020 (NEP 2020) நிராகரித்ததற்காக, தமிழகத்தின் ஒன்றிய அரசின் பங்கான சமக்ரா சிக்ஷா நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம், மாநிலங்கள் ஒன்றியத்தின் முடிவுகளைப் பின்பற்றுமாறு அழுத்தம் கொடுப்படுகிறது. இந்த நடவடிக்கை, சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan), ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) மற்றும் ஆசிரியர் கல்வித் திட்டங்களை (Teacher Education programmes) ஒருங்கிணைத்த சமக்ரா சிக்ஷா திட்டத்தின் 2018-19 (Samagra Shiksha scheme) நோக்கத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வியை நியாயமான முறையில் அணுகுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல், தமிழ்நாடு ₹2,152 கோடி பெறாதது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்த நிதி தாமதம் அதன் பள்ளி கல்வி முறையில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசு எச்சரித்துள்ளது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட 40 லட்சம் மாணவர்களும் 32,000 ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த முட்டுக்கட்டைக்கு மாநில அரசை தெளிவாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், மாநில அரசு மும்மொழி வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதன் மூலம் பள்ளிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு பிராந்திய மொழியைக் கற்பிக்க வேண்டும். இந்த நிலைப்பாடு, 1937-ம் ஆண்டு முதல் மும்மொழி முறைக்கு தமிழகம் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையை புறக்கணிக்கிறது. 1968 முதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தி, அரசு இருமொழிக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டின் தலைமையை பிளவுபடுத்தும் மற்றும் அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம் இதை மேலும் எடுத்துச் சென்றார். மாநிலம் "இந்திய அரசியலமைப்புடன் இணங்க வேண்டும்" மற்றும் "சட்டத்தின் ஆட்சியை" பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இது, எந்தக் காரணமும் இல்லாமல், தமிழ்நாடு சட்டத்தின்படி நிர்வகிக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும்படி உள்ளது.
வியக்கத்தக்க வகையில், தமிழ்நாட்டில் இதற்கான பதில் விரைவாகவும், வலுவானதாகவும் உள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு, இந்தப் பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. அரசியலமைப்பின் எந்தப் பகுதிக்கு மும்மொழிக் கொள்கை தேவை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சரியாகவே கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற கட்டாய அமலாக்கம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் (NEP) "இந்தியைத் திணிக்கவில்லை" என்று கூறினாலும், தொடர்ந்து வந்த ஒன்றிய அரசாங்கங்கள், தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையின் மீதான சுயாட்சியை இதுவரை மதித்து வருகின்றன.
பல்வேறு பிராந்தியங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ள பாடங்களை நிர்வகிக்கும் கொள்கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் கலந்துரையாடல் தேவை. ஒரு கடினமான, ஒரே மாதிரியான அணுகுமுறையானது கூட்டுறவு கூட்டாட்சித் தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மத்திய திட்டங்களில் சம பங்குதாரர்களாக இருக்கும் மாநிலங்களுக்கு மத்தியில் வெறுப்பை உண்டாக்கும். சமக்ர சிக்ஷா மற்றும் பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (Samagra Shiksha and the Pradhan Mantri Schools for Rising India (PM SHRI)) திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையிலிருந்து (NEP) பிரிப்பது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும். அதற்குப் பதிலாக, நிதி பொது செயல்திறன் குறிகாட்டிகளுடன் இணைக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், தமிழ்நாடு அதன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்து செயல்படுத்த வேண்டும். இது தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) ஒரு வலுவான மாற்றாக செயல்படும். இது மாணவர்களுக்கு கல்வித் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும்.