வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். அதே நேரத்தில், பயனர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, பொதுவான மோசடி முறைகள் மற்றும் ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றி கற்பிக்க வேண்டும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் நகர்வு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்ற திட்டங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய அதிகரிப்புக்கு வழிவகுத்தன. நாட்டின் டிஜிட்டல் கட்டண முறை வேகமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியை RBI-டிஜிட்டல் கட்டண குறியீடு (RBI-DPI) காட்டுகிறது. இது மார்ச் 2018ஆம் ஆண்டில் 100-ல் இருந்து செப்டம்பர் 2024-ல் 465.33 ஆக உயர்ந்தது.
டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் வளர்ச்சி, பணப்பரிமாற்ற முறைகள் மற்றும் செயல்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் காட்டுகிறது. ஆனால், இந்த முன்னேற்றத்துடன், டிஜிட்டல் பணப்பரிமாற்ற மோசடியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும், 18,461 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் ₹21,367 கோடி நிதி இழப்பை ஏற்படுத்தின. இது முந்தைய ஆண்டை விட 27% அதிகம்.
உள்நாட்டு பணப்பரிமாற்றங்களில் மோசடிகள் இன்னும் பெரிய அளவில் அதிகரித்து, 70.64% அதிகரித்துள்ளன. மார்ச் 2024 வாக்கில், இந்த மோசடிகள் ₹2,604 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி வகைகள்
சைபர் குற்றங்கள் குறித்த தரவுகள், இந்தியாவில் அடிக்கடி நிகழும் மற்றும் கடுமையான ஆன்லைன் மோசடிகளின் கவலையளிக்கும் போக்கைக் காட்டுகின்றன. 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 1,121,112 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டில் மோசடியில் ₹60 கோடியை இழந்ததாக ய பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர். அந்த ஆண்டு 1930 என்ற ஹெல்ப்லைனுக்கு 60,000 அழைப்புகள் வந்தன. மேலும், பலருக்கு உதவி தேவை என்பதைக் காட்டியது. மோசடி வழக்குகளில் சுமார் 35% ₹50 லட்சத்திற்கும் அதிகமான இழப்புகளை உள்ளடக்கியது. இது பெரிய அளவிலான சைபர் மோசடிகளின் அதிகரிப்பைக் காட்டுகிறது.
பல்வேறு வகையான சைபர் மோசடிகளைப் பார்த்தால், மோசடி செய்பவர்கள் பொதுவாக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைக் காணலாம்.
2023ஆம் ஆண்டில், பெரும்பாலான மோசடிகள் (40%) வாடிக்கையாளர் பராமரிப்பு, பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) மோசடிகளாகும். முதலீடு மற்றும் பணி அடிப்படையிலான மோசடிகளும் 40% ஆகும்.
பிற பொதுவான மோசடிகளில் பின்வருவன அடங்கும்:
- செக்ஸ்டார்ஷன்(Sextortion): 24%
- சட்டவிரோத கடன் பயன்பாடுகள்: 23%
- சட்டவிரோத கேமிங் மற்றும் கிரிப்டோ மோசடிகள்: 21%
இந்த மோசடிகள் மேலும் மேலும் முன்னேறி வருகின்றன. தொலைதூர அணுகல், போலி முதலீட்டு சலுகைகள் மற்றும் ஆன்லைன் முறையைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம்கூட மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய நபர்களை குறிவைக்கின்றனர்.
சைபர் மோசடி கட்டுப்பாடு மற்றும் மீட்பு மேலாண்மை அமைப்பு ((Cyber Fraud Control and Recovery Management System) CFCFRMS) தரவு, தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியைத் தடுப்பதிலும் மீட்டெடுப்பதிலும் மீட்பு முயற்சிகளின் செயல்திறனைக் காட்டுகிறது .
இந்த அமைப்பின் மூலம் மீட்கப்பட்ட தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இது 2021-ல் ₹36.38 கோடியிலிருந்து 2024ஆம் ஆண்டில் ₹1,361.28 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒப்புதலுக்கான தொகைகளின் சதவீதம் (மோசடியைத் தடுக்க நிறுத்தி வைக்கப்பட்ட பணம்) பெரும்பாலும் நிலையாகவே இருந்தது. இது 2021ஆம் ஆண்டில் 6.73% ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 12.32% ஆக உயர்ந்தது. 2024ஆம் ஆண்டில் இதில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது.
இந்தத் தரவு சைபர் மோசடி அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இழப்புகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் பலனளிப்பதையும் இது காட்டுகிறது.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றல்
சில நாடுகளில் டிஜிட்டல் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கு நல்ல யோசனைகளை பின்பற்றுகின்றன.
சிங்கப்பூர்: ஒரு வலுவான தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது மக்கள் ஆன்லைனில் யார் என்பதைப் பாதுகாப்பாக நிரூபிக்க உதவுகிறது மற்றும் அடையாளத் திருட்டைக் குறைக்கிறது.
இங்கிலாந்து: ‘Take Five’ பிரச்சாரத்தை நடத்துகிறது. தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு கவனமாக சிந்திக்கவும், சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகளுக்கு வேண்டாம் என்று சொல்லவும் இது மக்களுக்குக் கற்பிக்கிறது.
ஆஸ்திரேலியா: 'இனி மோசடிகள் இல்லை' (‘No More Scams’) பிரச்சாரத்தைக் கொண்டுள்ளது. விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மோசடிகளை நிறுத்துவதற்கும் இது அரசாங்கம், காவல்துறை மற்றும் வணிகங்களை ஒன்றிணைக்கிறது.
அமெரிக்காவில், நுகர்வோர் நிதி பாதுகாப்பு பணியகம் (CFPB), கல்வி வழங்குவதன் மூலமும், சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமும், மோசடிகளைத் தவிர்ப்பதற்கான கருவிகளை வழங்குவதன் மூலமும் நுகர்வோருக்கு உதவுகிறது. இது நியாயமற்ற நடைமுறைகளையும் தண்டிக்கிறது.
தென் கொரியாவின் நிதி பாதுகாப்பு நிறுவனம் (Financial Security Institute (FSI) நிதித்துறையில் இணைய அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து அவற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறது.
கனடாவின் மோசடி எதிர்ப்பு மையம், மோசடியைப் புகாரளிப்பதற்கும் தடுப்பதற்கும் ஒரு மையமாக செயல்படுகிறது. இது சட்ட அமலாக்க நிறுவனங்கள் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR கடுமையான தரவு பாதுகாப்பு விதிகளை அமைக்கிறது. இது பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இது தரவு மீறல்களைக் குறைக்க உதவுகிறது.
டிஜிட்டல் மோசடிக்கு எதிரான தனது போராட்டத்தை மேம்படுத்தவும், அதன் குடிமக்களுக்கு பாதுகாப்பான இணைய அனுபவத்தை உறுதி செய்யவும் இந்தியா இந்த உலகளாவிய உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
எதிர் நடவடிக்கைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி
இந்தியாவில் டிஜிட்டல் மோசடி என்பது விரைவான நடவடிக்கை தேவைப்படும் வளர்ந்து வரும் பிரச்சனையாகும். இதைச் சமாளிக்க, அனைவரின் கூட்டு முயற்சியும் அவசியம். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பாதுகாப்பை மேம்படுத்துதல், வலுவான மோசடி கண்டறிதல் அமைப்புகளை அமைத்தல் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளை சிறப்பாகப் பாதுகாக்க பல காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், டிஜிட்டல் பாதுகாப்பு, பொதுவான மோசடி தந்திரங்கள் மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் பற்றி பயனர்களுக்குக் கற்பிப்பது முக்கியம்.
பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பட்டறைகள் மற்றும் கல்வி வளங்கள் பயனர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகவர்களிடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு ஆகியவை மோசடியை சரியான நேரத்தில் கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் முக்கியமானதாகும்.
தரவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்புக்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் உட்பட, டிஜிட்டல் மோசடியின் வளர்ச்சியடையும் தன்மைக்கு ஏற்ப ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பானது முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (machine learning (ML)) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிகழ்நேரத்தில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிவது, செயலூக்கமான மோசடியைத் தடுக்கவும் உதவும்.
பாதுகாப்பை மேம்படுத்தவும், பயனர் விழிப்புணர்வை அதிகரிக்கவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் விரும்புகிறார். ரிசர்வ் வங்கியின் உத்கர்ஷ் 2.0 (Utkarsh 2.0) உத்தியின் ஒரு பகுதியாக, நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறை ஏப்ரல் 2024 ஆண்டு முதல் மார்ச் 2025 வரை முக்கியமான இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்குகளில் பின்வருவன அடங்கும்:
புகார் மேலாண்மை அமைப்பை மேம்படுத்துதல்.
ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான (REs) நுகர்வோர் பாதுகாப்பு மதிப்பீட்டு அணியை உருவாக்குதல்.
குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல்.
ஏன் மிகக் குறைவான புகார்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள கணக்கெடுப்புகளை நடத்துதல்.
REs மற்றும் Ombudsman அலுவலகங்களின் (ORBIOs) கருத்துக்களைப் பயன்படுத்தி ஒரு சிறந்த நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு திட்டத்தைத் தொடங்குதல்.
அனைத்து பயனர்களுக்கும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வலுவான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க ஒன்றாக வேலை செய்வது அவசியம்.
வில்லியம்ஸ், செர்னோவா பைனான்சியலில் (Sernova Financial) இந்தியாவின் தலைவராகவும், வலியாச்சி சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும், நாகராஜ் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகவும் உள்ளார்.