மதராஸ் மாநிலத்தில் இரு மொழிக் கொள்கை எவ்வாறு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது -டி. சுரேஷ் குமார்

 1968-ஆம் ஆண்டு, நாடாளுமன்றம் அலுவல் மொழித் தீர்மானத்தை (Official Language Resolution) நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் அனைத்து மாநிலங்களுக்கும் மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக சென்னையில் மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர். சி.என். அண்ணாதுரை தலைமையிலான முதல் திராவிட முன்னேற்ற கழக அரசு, இந்தச் கொள்கையை எதிர்த்தது. ஜனவரி 26, 1968 அன்று, அரசாங்கம் அதை நிராகரித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.


தற்போது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் விவாதம்  நடந்து வருகிறது. ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இருந்து மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் வரலாற்றைப் புரிந்துகொள்வது முக்கியம். பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்க அனுமதிக்கும் இந்தக் கொள்கை 1968-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


1968-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாடாளுமன்றம் அலுவல் மொழிகள் திருத்த சட்டம், 1967-ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டம் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடர அனுமதித்தது. இது இந்தியை நாட்டின் ஒரே அலுவல் மொழியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முந்தைய கொள்கையைத் தாமதப்படுத்தியது. அதே ஆண்டில், பாராளுமன்றம் அலுவல் மொழித் தீர்மானம், 1968-ஐயும் ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்மானம் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தி பேசும் பகுதிகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, தென்னிந்திய மொழிகளில் ஒன்றான நவீன இந்திய மொழியைக் கற்றுக்கொள்வது, இந்தி பேசாத பகுதிகளில், பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்துடன் மாணவர்கள் மூன்று மொழிகளையும் படிக்க வேண்டிய சூழல் இருந்தது.


இந்த முடிவு சென்னையில் மாணவர்களிடையே போராட்டங்களுக்கு வழிவகுத்தது. போராட்டங்கள் தீவிரமாகி திமுக அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தியது. இதனால் சி.என். அண்ணாதுரை தலைமையிலான முதல் திமுக அரசுக்கு கல்வி நிறுவனங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 26, 1968 அன்று சென்னை அரசு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் மும்மொழி கொள்கையை அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது.


ஒரு பிராந்தியத்தின் ஆதிக்கம்


பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களைக் கொண்ட ஒரு நாட்டில், பிராந்திய மொழிகளில் ஒன்றை இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்வது, மற்ற பிராந்தியங்களின் மீது ஒரு பிராந்தியத்தின் ஆதிக்கத்தை விளைவிக்கும் என்று தீர்மானம் வாதிட்டது. அந்தத் தீர்மானம் ஒரு முன்மொழிவையும் முன்வைத்தது. தமிழ் மற்றும் பிற தேசிய மொழிகள் அலுவல் மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதுவரை, ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர வேண்டும் என்றும் இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானம் பரிந்துரைத்தது.


நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1967-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் திருத்த சட்டம் அதன் நோக்கத்தை அடைய உதவாது, மாறாக நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களிடையே பரஸ்பர வெறுப்பு, உராய்வு மற்றும் தவிர்க்க முடியாத குழப்பத்துடன் இரண்டு பிரிவுகளை உருவாக்கும் என்று சபை கருதியது. எனவே, மொழியியல் சமத்துவம் என்ற கூறப்பட்ட குறிக்கோளை நோக்கி தொடர்ந்து செயல்பட சபை தீர்மானித்தது. அலுவல் மொழிகள் திருத்த சட்டத்துடன் நிறைவேற்றப்பட்ட மொழிக் கொள்கை, இந்தி அல்லாத பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்றும், அது அவர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அவர்களுக்கு புதிய சுமைகளை உருவாக்கும் என்றும் தீர்மானம் கூறியது. இந்த தீர்மானத்தை அமல்படுத்துவதை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக எதிர்த்தன. ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபை வலியுறுத்தியது. 

தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இந்தி அல்லாத பிராந்தியங்களில் உள்ள மக்கள் எந்தவித விளைவுகளையும் அல்லது கூடுதல் சுமைகளையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சபை கேட்டுக்கொண்டது.


மேலும், "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்துவதன் மூலம், இந்தி அல்லாத பிராந்திய மக்கள் மீது இந்தியை திணிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக்குவதே இதன் இறுதி நோக்கமாகும்” என்று சபை கருதியது.


அப்போது, ​​மும்மொழிக் கொள்கையை நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாடத்திட்டத்திலிருந்து இந்தி முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றம் தீர்மானித்தது.


அப்போதைய துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய், மெட்ராஸ் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழி கொள்கை நாட்டின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லை என்று கருதினார். நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலித்து வந்தது. இந்த விவகாரத்தைப் பொதுவில் விவாதிக்க முடியாது" என்று துணைப் பிரதமர் கூறியதாக, பிப்ரவரி 6, 1968 அன்று தி இந்துவில் வெளியிடப்பட்ட PTI அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட திமுகவின் பிரிவினை நடவடிக்கையை மீண்டும் உயிர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சி.என். அண்ணாதுரை மறுத்தார். இந்த நடவடிக்கையை திமுக பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டது. ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அண்ணாதுரை வாதிட்டார். பிரிவினையை விரும்பியிருந்தால், மொழிப் பிரச்சினையைப் புறக்கணித்திருப்பேன் என்று அண்ணாதுரை விளக்கினார். ஆனால், அதற்குப் பதிலாக, மொழிப் பிரச்சினையைத் தீர்க்க தீவிர முயற்சிகளை அண்ணா மேற்கொண்டு வந்தார். அலுவல் மொழிகள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சவால்களையும் அவர் எதிர்கொண்டார். இது ஜனவரி 24, 1968 அன்று தி இந்துவில் செய்தியாக வெளியிடப்பட்டது.


ஜனவரி 23 அன்று சட்டமன்றத்தில் பேசிய அண்ணாதுரை, மொழிப் பிரச்சினையை விட தேசிய ஒற்றுமை முக்கியம் என்று வேண்டுகோள் விடுத்த விமர்சகர்களிடம், தானும் அதே கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறினார். தேசிய ஒற்றுமை என்பது காலத்தின் தேவையாக இருந்தால், சி. ராஜகோபாலாச்சாரி போன்ற தலைசிறந்த தலைவர்களின் அறிவுரைகளை மீறி, இப்போது மொழிப் பிரச்சினையை காங்கிரஸ் ஏன் கிளப்பியது,” என்று அவர் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை கனடாவிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துரைத்தார். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பொதுவான மொழியை அமல்படுத்தாமல் அமைதியாக ஒன்றாக வாழ்ந்து வருவதாக அவர் கூறினார். தேசிய ஒற்றுமைக்காக மக்கள் தங்கள் கோரிக்கைகளை கைவிட்டு தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கூறியதற்கு, முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை பதிலளித்தார். "ஆனால், நாம் மட்டும் தான் எப்போதும் எங்கள் கோரிக்கைகளை கைவிட்டு தியாகங்களைச் செய்ய வேண்டுமா? தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்க இந்தி பேசும் மக்கள் செய்த தியாகம் என்ன? இதை அடைய அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன?"  என்று முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை கேள்விகளை எழுப்பினர்.


காங்கிரசால் உருவாக்கப்பட்ட குழப்பம்


இணைப்பு மொழிக்கான கோரிக்கை காங்கிரசால் உருவாக்கப்பட்ட ஒரு தவறான பிரச்சினை என்று சி.என். அண்ணாதுரை நம்பினார். இந்தியா ஒரு பரந்த நாடு என்றும், எந்த ஒரு மொழியும் அதன் அனைத்து மக்களையும் இணைக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, தேசிய மொழி குறித்த ஒரு கருத்தரங்கில் அவர் பேசினார். இந்த நிகழ்வு இன்றைய தெலுங்கானாவில் உள்ள தெனாலியில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் ஒருபோதும் அதிகாரப்பூர்வ மொழியைக் கேட்டதில்லை என்று அவர் கூறினார். இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பிரச்னை என்பதை அவர் உணர்ந்தார். "நான் இந்தியாவின் இறையாண்மையை நம்புகிறேன். அதற்காக நிற்கிறேன். நான் பிரிவினையை ஆதரிக்கவில்லை. ஆனால், நாம் ஒவ்வொருவரும் எஜமானர்களாகவும், ஊழியர்களாகவும் அல்ல, சமமாக வாழ வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்" என்று முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை கூறினார்.




Original article:

Share: