இது இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையின் (demographic dividend) முடிவின் தொடக்கத்தைக் குறிக்கும் மற்றும் பணக்காரர்களாக மாறுவதற்கு முன்பு மக்கள்தொகையில் அதிக முதுமையைக் கொண்டிருக்கும்.
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு ஆகும். மக்கள்தொகை ஈவுத்தொகை (demographic dividend) என்று அழைக்கப்படும் அதன் வளர்ந்து வரும் இளைஞர் மக்கள்தொகையிலிருந்து பலனைப் பெற விரும்புகிறது. மக்கள்தொகை ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் எப்போதும் இந்த வாய்ப்பு என்றென்றும் நீடிக்காது என்பதை அறிந்திருந்தனர். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். கடந்த பத்தாண்டுகளில், பள்ளி சேர்க்கை குறைந்துள்ளது. இது இந்தக் கட்டத்தின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் விளைவாக, இந்தியர்கள் பணக்காரர் ஆவதற்கு முன்பு முதுமைப் பெறலாம்.
டிசம்பர் 30, 2024 அன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுக்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ் (U-DISE+) தரவு, 2018-19 முதல் பள்ளிச் சேர்க்கையில் 15.5 மில்லியன் (6%) வீழ்ச்சியைக் காட்டியதால், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிகாரப்பூர்வ கூற்று vs. யதார்த்தம்
தரவு சேகரிப்பில் ஏற்பட்ட மேம்பாடுகளே பதிவு சரிவுக்கு காரணம் என அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பதிவுசெய்தலுடன் ஆதார் எண்களை இணைப்பது பல பதிவுகளை நீக்குகிறது என்று அவர்கள் விளக்குகிறார்கள். இது நம்பத்தகுந்ததாக இருக்கலாம். ஏனெனில், சில குழந்தைகள் பல பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர் என்று நீண்டகாலமாக சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், பத்தாண்டு கால தரவுகளின் (2014-15 முதல் 2023-24 வரை) பகுப்பாய்வானது, பள்ளிப்படிப்பு தொடர்பான வயதுக் குழுக்களில் மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட, பல்வேறு காரணிகளுடன் இந்தத் தரவு ஆய்வு செய்யப்படுகிறது. உண்மையில், இது ஒரு விரும்பத்தகாத தன்மையை காட்டுகிறது. மக்கள்தொகை ஈவுத்தொகையிலிருந்து பயனடையும் காலகட்டம் முடிவுக்கு வருவதாக அவை தெரிவிக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளில் பள்ளி மாணவர் சேர்க்கை 24.51 மில்லியன் அல்லது 9.45% குறைந்துள்ளது என்பது கவலைக்குரிய விஷயம் ஆகும். தொடக்க நிலை மாணவர் சேர்க்கை 18.7 மில்லியன் (13.45%) குறைந்துள்ளது. இந்த நிலை வரை, 2009 முதல் கல்வி உரிமைச் சட்டத்தின் (Right to Education (RTE)) கீழ் கல்வி இலவசம் மற்றும் கட்டாயமாக உள்ளது என்பதன் அடிப்படையில் உள்ளது.
மாறாக, இரண்டாம் நிலை மாணவர் சேர்க்கை 1.43 மில்லியன் (3.75%) குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் மூத்த இரண்டாம் நிலை மாணவர் சேர்க்கை 3.63 மில்லியன் (15.46%) அதிகரித்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே சரிவு தொடங்கியது என்பதைக் குறிக்கிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள்
மொத்த பள்ளி சேர்க்கையில் 65%-க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தரவு காட்டுகிறது. இந்தப் பள்ளிகள் முக்கியமாக ஏழை மற்றும் பிறபடுத்தப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்கின்றன. அரசுப் பள்ளிகளில் 19.89 மில்லியன் (13.8%) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4.95 மில்லியன் (16.41%) சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகள் தொடக்க நிலை மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளன.அரசுப் பள்ளிகளில் 21.78 மில்லியன் (18.31%) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3.85 மில்லியன் (24.34%) சரிவு ஏற்பட்டுள்ளது. இடைநிலைப் பள்ளி (secondary level), மாணவர் சேர்க்கையிலும் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.
தனியார் உதவி பெறாத பள்ளிகள் விதிவிலக்காக உள்ளன. ஏனெனில், அவர்களின் மொத்த சேர்க்கை 1.61 மில்லியன் அல்லது 2.03% அதிகரித்துள்ளது. இருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மாணவர் சேர்க்கையில் ஒரு சிறிய அதிகரிப்பை மட்டுமே பதிவுசெய்தனர். இருப்பினும் அவர்களின் மூத்த இரண்டாம் நிலை மாணவர் சேர்க்கை 1.41 மில்லியன் (15.55%) அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளிகள் வெளித்தோற்றத்தில் இந்தப் போக்குக்கு எதிராகச் சென்றன. ஆனால் அவை முற்றிலும் பாதிக்கப்படவில்லை.
2014-15 முதல், குறிப்பாக தொடக்க நிலைகளில் (elementary level) சேர்க்கை குறைந்துள்ளது மற்றும் தொடர்கிறது. அவை முறையான மாற்றங்களுக்கு காரணமாக இருக்க முடியாது அல்லது ஒரு தற்காலிக நிகழ்வாக நிராகரிக்க முடியாது. அவை முறையான மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. நாடு ஒரு முன்னுதாரண மாற்றத்தின் உச்சத்தில் உள்ளது. இந்தக் கருத்தை நிரூபிக்க அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை. கடந்த பத்தாண்டுகளில் 6-17 வயதுடைய பள்ளிச் செல்லும் மக்கள்தொகையில் 17.30 மில்லியன் (5.78%) குறைந்துள்ளது ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். தொடக்கப் பள்ளியில் சேரும் 6-13 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 18.7 மில்லியன் (9.12%) குறைந்துள்ளது. அதேபோல், இடைநிலைக் கல்விக்கு ஒத்த 14-15 வயதுக் குழு 2.17 மில்லியன் (4.35%) குறைந்துள்ளது.
ஆழமாக ஆராய்ந்தால், பள்ளி சேர்க்கைக்கும் தொடர்புடைய வயதினரிடையே மதிப்பிடப்பட்ட மக்கள்தொகைக்கும் இடையே ஒரு வலுவான நேர்மறையான தொடர்பை தரவு காட்டுகிறது. இந்த மக்கள்தொகையில் ஏற்பட்ட சரிவு சேர்க்கையில் 60.36% வீழ்ச்சியை விளக்குகிறது. நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 79,109 ஆகவும், 2017-18ல் 1.55 மில்லியனிலிருந்து 2023-14ல் 1.47 மில்லியனாகவும், 5.1% சரிவு என்பதும் இந்த கண்டுபிடிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 2022-ல் 2.01 ஆகக் குறைந்துள்ளது, இது 2.10 என்ற மாற்று அளவைவிட மிகக் குறைவாக உள்ளது என்ற உண்மையுடன் இவை ஒத்திசைகின்றன. பள்ளிச் சேர்க்கையின் தொடர்ச்சியான சரிவு முக்கியமாக மக்கள்தொகை மாற்றங்களால் ஏற்படுகிறது, இது நாட்டிற்கு நல்லதல்ல.
சமூக தாக்கம்
சேர்க்கை வளர்ச்சிக்கு வளர்ந்து வரும் இளைஞர் மக்கள் தொகை முக்கியமானது. சமீப காலம் வரை இந்தியா இந்த வளர்ச்சியை அனுபவித்து வருகிறது. இப்போது, மக்கள்தொகை அதிகரிப்பு வலதுபுறம் நகர்கிறது, அதாவது குறைவான இளம் குழந்தைகள். இந்த மாற்றம் சமீபத்தில் தொடங்கியது. இதன் விளைவாக, தொடக்கப்பள்ளி சேர்க்கையில் இது தெளிவாகக் காணப்படுகிறது. காலப்போக்கில், இது இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கையையும் பாதிக்கும். இறுதியில், இது உயர்கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான வளர்ந்த நாடுகளைப் போலவே, வேலை செய்யும் வயது மக்கள்தொகை குறைந்து வருவதை நாம் விரைவில் சந்திப்போம். இது எதிர்பார்த்ததை விட முன்னதாகவே நடப்பதால் இது கவலையளிக்கிறது.
ஒரு நாடு அதன் மக்கள்தொகை ஈவுத்தொகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது வயதான மக்கள்தொகையை ஆதரிக்கத் தேவையான வருமானத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகிறது. இருப்பினும், நாடு பணக்காரர் ஆவதற்கு முன்பே இந்தியாவின் மக்கள்தொகை முதுமை பெறும்.
பள்ளி சேர்க்கையில் ஏற்பட்ட சரிவு முக்கியமாக தரவு சேகரிப்பு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் அல்ல. மாறாக, மக்கள்தொகை முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படுகிறது. பெரிய மக்கள்தொகைக் குழு வயதான வயதிற்குச் செல்லும்போது பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்னும் தொடங்கவில்லை. இதே போக்கு தொடர்ந்தால், இந்தியாவின் மக்கள்தொகை நன்மை முடிவுக்கு வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஃபுர்கான் கமர் மேலாண்மைப் பேராசிரியர். அவர் திட்டக் கமிஷனில் ஆலோசகராக (கல்வி) பணியாற்றியுள்ளார். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். கூடுதலாக, அவர் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் (AIU) பொதுச் செயலாளராகவும் இருந்தார்.
சமீர் அகமது கான் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் மேலாண்மை ஆய்வுகள் பீடத்தில் ஒரு ஆராய்ச்சி அறிஞர் ஆவார். அவர் கல்வி நிறுவனங்களில் குடியுரிமை நடத்தையைப் படித்து வருகிறார்.