பருவமழை காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் பயிர் உற்பத்தி குறித்த கவலைகளை எழுப்புகின்றன.
காரீஃப் விதைப்பு (Kharif sowing) விரைவில் அதிகரிக்கும் என்பதால், காலநிலையைப் பொறுத்தவரையில் பல 'புதிய இயல்புகள்' (new normals) பரிசீலிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் நீண்டதாகவும் வெப்பமாகவும் மாறி வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அதே சமயம், பருவமழை இப்போது அதிக வறண்ட காலங்களையும், அதிக மழைப்பொழிவு காலங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, குறிப்பாக அரிசி (ஆனால் பருப்பு வகைகள் அல்ல), காலநிலை மாற்றங்கள் இருந்தபோதிலும் வலுவாக உள்ளது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த போக்கு யதார்த்தத்தை மிகைப்படுத்துகிறது.
வறட்சி போன்ற சூழ்நிலைகள் மற்றும் அதிகப்படியான மழைப்பொழிவை எதிர்கொள்ளும் பெரிய பகுதிகள் காரணமாக விவசாய துயரங்களை இது பதிவு செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை, பயிர்களில் அதிகப்படியான மழையின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. அதிக மழையை எதிர்கொள்ள முடியாத பயிர்களுக்கு புதிய பயிர் சாகுபடிக்கான உத்திகளையும் அது பரிந்துரைத்துள்ளது. ஏனெனில், பொதுவாக வறட்சி போன்ற நிலைமைகளுக்கு ஏற்ப சாகுபடிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மார்ச் புல்லட்டினில் வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையானது, 2023 உடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில், குறைவான மாவட்டங்கள் சாதாரண அல்லது பற்றாக்குறையான மழையைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், சில பருப்பு வகைகள் மற்றும் மக்காச்சோள சாகுபடியானது, மழை பற்றாக்குறையைவிட அதிகப்படியான மழையானது அதிகமாக பாதிப்படையச் செய்கிறது. மறுபுறம், நெல் மழைப் பற்றாக்குறையை (நீர்ப்பாசனம் காரணமாக, பெரும்பாலும் நிலத்தடி நீரிலிருந்து) மற்றும் அதிக மழைப்பொழிவை (தேங்கி நிற்கும் நீர் தேவைப்படுவதால்) தாங்கும் திறன் கொண்டது. பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, விதைப்புக் காலத்தில் பற்றாக்குறையான மழையும், பூக்கும் போது அதிகப்படியான மழையும் பாதிப்பை ஏற்படுத்தும். பற்றாக்குறையான மழையானது பருப்பு (arhar) சாகுபடியைப் பாதிக்கிறது. ஆனால், கடலைப் பருப்பு (moong) மற்றும் உளுத்தம் பருப்பு (urad) குறைவாக இருக்கும். அதிக மழையால் சோயாபீன்ஸ் தரம் குறைகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்த கனமழை எண்ணெய் வித்து பயிர்களை சேதப்படுத்தும். உதாரணமாக, மக்காச்சோளத்தின் விஷயத்தில் முன்கூட்டியே விதைப்பதற்கு இந்த பண்புகளை மனதில் கொள்ள வேண்டும். அதாவது, அதிக மழை என்பது தாமதமான பருவமழையின் நிகழ்வாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பயிர் பல்வகைப்படுத்தல் தவிர, வடிகால் வசதியை மேம்படுத்தும் மற்றும் நீர் தேங்கும் அபாயங்களைக் குறைக்கும் பயிர் முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சி நிறுவனங்கள் அதன் பசுமைப் புரட்சி அணுகுமுறையைத் தாண்டி, குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரும் தன்மைகளைக் கொண்டதாக இருந்தாலும், மீள்தன்மையை உருவாக்க வேண்டும். இதற்கிடையில், அதிக மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் பற்றாக்குறை பகுதிகளைவிட அதிகமாக இருக்கலாம். நாற்பதாண்டுகளாக மாவட்ட அளவில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (Council of Energy, Environment and Water) ஜனவரி 2024 ஆய்வு இந்தப் போக்கைச் சுட்டிக்காட்டுகிறது. 30% மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான மழைப்பொழிவு இல்லாத ஆண்டுகளைக் கண்டதாகவும், 38 விழுக்காட்டினர் அதிக எண்ணிக்கையிலான அதிக மழைப் பொழிவு ஆண்டுகளைக் கண்டதாகவும் அது குறிப்பிடுகிறது. 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆய்வு, அதிகப்படியான மழை (நேர்மறை பருவமழை அதிர்ச்சி) மழைப்பொழிவு பற்றாக்குறை (எதிர்மறை அதிர்ச்சி) தீங்கு விளைவிக்கும் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்காது என்று குறிப்பிடுகிறது. இது நிலத்தடி நீர் நெருக்கடி மற்றும் அதிகப்படியான மழையின் தாக்கம் காரணமாக இருக்கலாம்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உறுதியான மற்றும் குறைந்த வளம் மிகுந்த ரகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையில் மாற்றம் தேவை. அதனால், அவை நெல் சாகுபடியின் நன்மைகளுக்கு போட்டியாக இருக்கும். புதிய காலநிலை யதார்த்தங்களுக்கு நாம் தகவமைத்துக் கொள்ளாவிட்டால், நடுத்தர கால விளைவுகள் தீங்கு விளைவிக்கும். இது நமது குறுகியகால உற்பத்தி இலக்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.