குறுகிவரும் நீர் இருப்பு: நம் காலடியில் ஒரு நெருக்கடி -ராவ் இந்தர்ஜித் சிங்

 நீர்மட்டம் குறைந்து வருவது, மண்ணின் உப்புத்தன்மையை அதிகரிப்பதற்கும், விவசாய நிலங்களின் வளத்தை குறைப்பதற்கும் மற்றும் பல்லுயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் முக்கியப் பங்களிக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 22-ம் தேதி அன்று உலக தண்ணீர் தினமானது (World Water Day), வரும் காலங்களில், உலகளாவிய தண்ணீர் நெருக்கடி குறித்த நினைவூட்டலாகக் கருத்தப்படுகிறது. 220 கோடி மக்களுக்கு இன்னும் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இதன் அடிப்படையில், மேற்பரப்பு நீரின் (surface water) இருப்பு பெரும்பாலும் மக்கள் மத்தியில் பெறும் விவாதப்பொருளாகும் அதே வேளையில், நிலத்தடி நீரும் முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. நிலத்தடி நீர் இருப்புக்கள் விரைவாகக் குறைந்து வருகின்றன. ஹரியானாவில், விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது மற்றும் அதே வேளையில், நகரமயமாக்கல் வளர்ந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைதல் நீண்டகால நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஹரியானா இந்தியாவில் மிகவும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். இதன் 60%-க்கும் அதிகமான தொகுதிகள் (blocks) மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் (Central Ground Water Board (CGWB)) தீவிரப்படுத்தப்பட்டவை அல்லது முக்கியமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய மதிப்பீடுகளின்படி, மாநிலத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்கு 1-1.2 மீட்டர் அளவில் கடுமையான விகிதத்தில் குறைந்து வருகிறது.


பசுமைப் புரட்சியானது, ஹரியானாவை இந்தியாவின் கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் முன்னணியில் ஒன்றாக மாற்றியது. இருப்பினும், இந்த சாதனைக்கு பெரும் இழப்பீடு கிடைத்தது. நெல் போன்ற நீரைச் சார்ந்த பயிர்களை பயிரிடுவதற்கு விரிவான நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. இதனால், கடுமையான நிலத்தடி நீர் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. விவசாயிகள் தங்கள் பயிர்களைத் தக்கவைக்க குழாய்க் கிணறுகளை (tube wells) நம்பியுள்ளனர். ஆனால், நிலத்தடி நீரை சரிபார்க்காமல் பிரித்தெடுப்பது மாநிலத்தின் நீர்நிலைகளில் நீடிக்க முடியாத பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.


குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பானிபட் உள்ளிட்ட ஹரியானாவின் நகர்ப்புற மையங்கள், நிலத்தடி நீருக்கு முன்னோடியில்லாத தேவையை உண்டாக்கி, வேகமாக விரிவடைந்து வருகின்றன. பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி விநியோக அமைப்புகள் (Municipal water supply systems) பூர்த்தி செய்ய முடியாது. குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்கள் நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக பிரித்தெடுக்க கட்டாயப்படுத்துகின்றன. தொழில்துறை மையங்கள், குறிப்பாக ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில், நிலத்தடி நீரை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் நெருக்கடியை அதிகரிக்கிறது.


ஹரியானா அதிக அளவு கழிவுநீரை உண்டாக்கினாலும், அதை திறம்பட பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு குறைவாகவே உள்ளது. இந்த கழிவுநீரை முறையாக சுத்திகரிக்கப்பட்டால், இந்த கழிவுநீரை பாசனம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தலாம். இது நிலத்தடி நீரின் தேவையைக் குறைக்கும். இருப்பினும், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் பயன்பாடு குறைவாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், விவசாயிகள் பாசனத்திற்கு நம்பகமான தண்ணீரைப் பெறுவது கடினமாகிறது. தண்ணீரைப் பிரித்தெடுக்க ஆழமான மற்றும் அதிக விலை கொண்ட முறைகளில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இது உற்பத்தி செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் விவசாயிகளுக்கு நிதி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் ஏற்கனவே சந்தை மாற்றங்கள் மற்றும் காலநிலை பிரச்சினைகளை கையாள்கின்றனர்.


நிலத்தடி நீர் வளங்கள் குறைந்து வருவதால், விவசாய உற்பத்தித்திறன் ஆபத்தில் உள்ளது. இந்தியாவின் உணவு விநியோகத்தில் ஹரியானா ஒரு முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. நிலத்தடி நீர் பற்றாக்குறை தொடர்ந்தால், ஹரியானா வெளிப்புற உணவு ஆதாரங்களையே அதிகம் நம்பியிருக்கக்கூடும். நிலத்தடி நீர் அதிகமாகப் பயன்படுத்துவதால் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஏரிகள் மற்றும் ஈரநிலங்கள் வறண்டு போகின்றன. நீர்மட்டம் குறைந்து வருவது மண்ணின் உப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது. இது மண் வளத்தைக் குறைத்து பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. விரைவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், மாநிலத்தின் சுற்றுச்சூழல் சமநிலை மோசமாக பாதிக்கப்படும்.


குருகிராம் போன்ற நகரங்களில், அதிகப்படியான நிலத்தடி நீர் எடுப்பதால் நிலம் சரிந்து வருகிறது. நகர்ப்புறங்களில் சிறந்த நிலத்தடி நீர் மேலாண்மைக்கான அவசரத் தேவையை உணர்த்தும் வகையில், அடித்தளங்களை மாற்றுவதால் ஏற்படும் கட்டமைப்பு சேதம் ஏற்கனவே பதிவாகியுள்ளது. அதிகப்படியான சுரண்டப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.


நிலத்தடி நீர் பயன்பாட்டை திறம்பட நிர்வகிக்க ஹரியானா அதன் நீர்வள ஆணையத்தை (water resources authority) வலுப்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் விலையை அறிமுகப்படுத்துவது அதிகப்படியான பயன்பாட்டைத் தடுக்க உதவும். குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற நகரங்களில் மேற்கூரை மழைநீர் சேகரிப்பை (rooftop rainwater harvesting) விரிவுபடுத்துவது முக்கியம். தடுப்பு அணைகள், வடிகால் குளங்கள் கட்டுதல் மற்றும் மேவாட்டில் உள்ள ஜோஹாத்கள் போன்ற பாரம்பரிய நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை மீட்டெடுப்பது நிலத்தடி நீரை பெரிதும் மேம்படுத்தும்.


கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்புக்கான சலுகைகளை அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும். விவசாயிகள் வெள்ள நீர்ப்பாசனத்திலிருந்து (flood irrigation) சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் (drip and sprinkler irrigation) போன்ற திறமையான முறைகளுக்கு மாற ஊக்குவிக்கப்பட வேண்டும். இது தண்ணீரைச் சேமிக்க உதவும். மானியங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் சிறுதானியங்கள் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிப்பது ஹரியானாவின் விவசாயத்தை மேலும் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும்.


விவசாயிகளை நெல் சாகுபடியிலிருந்து விலக்கி வைக்கும் மேரா பானி (Mera Pani), மேரி விராசத் திட்டத்தை (Meri Virasat scheme) செயல்படுத்துவதை வலுப்படுத்துவது நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு மேலும் உதவும். கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது, குறிப்பாக தொழில்துறை மையங்களில், நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைக்க உதவும். உற்பத்தி செயல்முறைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்த தொழில்களை ஊக்குவிப்பது ஒரு சாத்தியமான மாற்றாகும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதை முறைப்படுத்த, நிதி ஆயோக் பரிந்துரைத்தபடி, நீர் வர்த்தக செயல்முறையை (water trading system) உருவாக்குவதையும் ஹரியானா அரசு ஆராய வேண்டும்.


ஹரியானாவின் நிலத்தடி நீர் நெருக்கடி சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, விவசாயம், தொழில் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தலாகும். மாநிலம் ஒரு பெரிய தொழில்துறை மற்றும் பொருளாதார மையமாக மாற விரும்புவதால், நீர் பாதுகாப்பு ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிலத்தடி நீரை வரம்பற்ற வளமாக மக்கள் நினைப்பதை நிறுத்த வேண்டும். இது கவனமாக மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் ஒரு மதிப்புமிக்க சொத்தாக பார்க்கப்பட வேண்டும். ஒழுங்குமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் சமூக முயற்சிகள் உட்பட ஒரு முழுமையான அணுகுமுறை தேவை.


ராவ் இந்தர்ஜித் சிங் மத்திய புள்ளியியல், திட்ட செயல்படுத்தல் மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு). அவர் கலாச்சார அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் உள்ளார்.



Original article:

Share: