நாதபிரதா மற்றும் பிற பழங்குடி பழக்கவழக்கங்கள் பற்றி . . . -குஷ்பு குமாரி

 செய்திகள் என்ன சொல்கிறது?


“நாத பிரதா” (Nata Pratha) எனப்படும் பழங்குடி பழக்கவழக்கங்கள் அரசாங்கத்தின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY)) கிராமின் திட்டத்திற்கு சிக்கல்களை உருவாக்கி வருகிறது. ராஜஸ்தானின் சலும்பர் மாவட்டத்தில் உள்ள மொரெல்லா கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான பேமா மீனா, தனது நிரந்தரமாக வீட்டைக் (pucca house) கட்டுவதற்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற முடியவில்லை. பழங்குடியினரின் “நாத பிரதா” வழக்கப்படி அவர் தனது மனைவியை பல மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்திருந்தாலும், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்னும் அவரை திருமணமானவராகவே காட்டுகின்றன.


இந்தியாவின் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணடக்கெடுப்பின்படி மக்கள் தொகையில் 8.6%-க்கு மேல் பட்டியல் பழங்குடியினர் உள்ளனர். சில மாநிலங்களில் அவர்கள் வழக்கமான சட்டங்களுக்கு உட்ப்பட்டிருந்தாலும், அவர்களுக்கென்று சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளனர்.




முக்கிய அம்சங்கள்:


1. சலும்பர், பன்ஸ்வாரா, துங்கர்பூர், பிரதாப்கர், உதய்பூர், சிரோஹி, ராஜ்சமந்த், பாலி மற்றும் சித்தோர்கர் ஆகிய பழங்குடிப் பகுதிகளில் “நாத பிரதா” பழங்குடி வழக்கம் பின்பற்றப்படுகிறது. இந்த வழக்கத்தின் கீழ், ஒரு பெண் தனது கணவரை பிரிந்து சென்று வேறொரு ஆணுடன் வாழ்வதாக கிராம பஞ்சாயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.

 

2. குஜராத்தின் சுர்கேடாவில், பழங்குடியினர் ஒரு தனித்துவமான திருமண வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். திருமண நாளில், மணமகன் வீட்டிலேயே இருப்பார். அதே நேரத்தில் அவரது திருமணமாகாத சகோதரி மணமகளின் வீட்டில் திருமண சடங்குகளைச் செய்வார். அந்த பெண் வீடு திரும்பி மணமகளை தன் சகோதரனிடம் ஒப்படைப்பதுடன் சகோதரியின் பங்கு முடிவடைகிறது.


3. ராஜஸ்தானின் கராசியா பழங்குடியினரில், தம்பதிகள் ஒன்றாக வாழ்கிறார்கள். போதுமான சேமிப்பு இருக்கும்போது மட்டுமே திருமணம் செய்து கொள்கிறார்கள்.


ஜெயின்டியா பழங்குடியினரில், திருமணமான தம்பதிகள் மணமகளின் பெற்றோருடன் தங்குகிறார்கள்.


அந்தமான் பழங்குடியினரில், மகள்கள் தங்கள் பெற்றோரின் சொத்துக்கான வாரிசாக உள்ளார்கள்.


முரியா பழங்குடியினர் ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ஒரு 'கோதுல்'-ல் (இளைஞர் விடுதியில்) வாழ அனுமதிக்கின்றனர்.


4. ஆந்திரப் பிரதேசத்தின் ஜடாப பழங்குடியினர், முக்கியமாக விஜயநகரம் மாவட்டத்தின் காடு மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். தனித்துவமான திருமண பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்களின் சமூகத்தில் வெவ்வேறு வகையான திருமணங்கள் உள்ளன. ஒரு பாரம்பரியத்தின்படி, மணமகனின் பெற்றோரும் கிராமப் பெரியவர்களும் மணமகளின் வீட்டிற்குச் சென்று "கால்களைக் கழுவ தண்ணீர்" கேட்க வேண்டும். மணமகளும் அந்த பெண்ணின் பெற்றோரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால், அவர்கள் தண்ணீர் வழங்குகிறார்கள். அவர்கள் மறுத்தால், தண்ணீர் கொடுக்கப்படாது திருமணம் நடக்காது.


5. கேரளாவின் மன்னான் பழங்குடியினரில், மிகவும் பொதுவான திருமண வழக்கம் “வேலை மூலம் திருமணம்” என்று ஜேக்கப் ஜான் கட்டகாயம் குறிப்பிட்டார். இந்த மரபில், பையன் ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை பெண்ணின் வீட்டில் வசித்து வருவான். இந்த நேரத்தில், அவன் வீட்டு வேலைகள் மற்றும் விவசாய வேலைகளில் உதவுவான். பெண்ணின் பெற்றோர் அவனது திறமைகளையும் நடத்தையையும் கவனிப்பர். அவர்கள் திருப்தி அடைந்ததால் திருமணத்தை ஏற்றுக்கொள்வர். 


6. மத்தியப் பிரதேசத்தின் பில்ஸ் பழங்குடியினரில், திருமணத்திற்கு முன்பே மணமகள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேகாலயாவின் காரோ பழங்குடியினரில், பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கிறாள். பெண் முடிவு செய்த பிறகு, பையன் கடத்தப்பட்டு ஒரு தனி இடத்தில் வைக்கப்படுகிறான். அவன் தப்பித்தால், அவன் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறான்.


7. கோண்டுகள், பில்கள், ஓரான்கள், முண்டாக்கள் மற்றும் சந்தால்கள் போன்ற சில பழங்குடியினர் இருதார மணத்தை அனுமதிக்கின்றனர். காரோ, காடி, காலோங் மற்றும் ஜான்சர் பவார் பழங்குடியினரிடையே பலதார மணம் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால், அது மெதுவாக மறைந்து வருகிறது.


பலதார மணம்


பலதார மணம் என்பது ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் அல்லது ஆண் துணைவர்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. பலதார மணம் என்பது மனைவி அல்லது கணவன் என இருவரில் ஒருவருக்கு மேல் இருப்பதைக் குறிக்கிறது.


இந்திய சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494 (இப்போது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 82-ன் கீழ், இருதார மணம் மற்றும் பலதார மணத்தை குற்றமாக குறிப்பிடுகிறது.


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 கணக்கெடுப்பின்படி, பலதார மணம் பட்டியல் பழங்குடியினரிடையே (2.4%) மிகவும் பொதுவானது. மதங்களில், இது கிறிஸ்தவர்களிடையே (2.1%) அதிகமாகவும், முஸ்லிம்களிடையே (1.9%) மற்றும் இந்துக்கள் (1.3%) அதிகமாகவும் உள்ளது.


8. வடகிழக்கு மற்றும் தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவின் முண்டாக்கள், சந்தால்கள், ஓரான்கள், கோண்டுகள், கோல்கள், கோர்காக்கள், பில்கள் மற்றும் வேறு சில பழங்குடியினரிடையே, மகள்களுக்கு சொத்துரிமை இல்லை. ஆனால், அவர்களுக்குத் தேவைப்பட்டால், விதவைகளைப் போலவே, வாழ்க்கைக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. காரோ பழங்குடியினரில் இளைய மகள் குடும்பத்தின் வாரிசாகிறாள். அந்தப் பெண்ணினுடைய கணவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்கிறார்.


பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana)


1. இந்தப் பகுதிகளில் PMAY திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 1.58 லட்சம் வீடுகளில் 5-10% வீடுகள் நாதபிரதா வழக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் அதிக தகுதியுள்ள பயனாளிகளை அடையாளம் காண ராஜஸ்தான் அரசு ஒரு முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


2. இந்திரா ஆவாஸ் யோஜனாவுக்குப் பதிலாக, 2015-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) தொடங்கப்பட்டது. இது மக்கள் குறைந்த விலையில் வீடுகளைப் பெற உதவும் ஒரு மானியத் திட்டமாகும். பயனாளிகள், 2011-ஆம் ஆண்டு சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டு ஆவாஸ் கணக்கெடுப்பிலிருந்து தரவைச் சரிபார்த்தல், கிராம சபையிலிருந்து ஒப்புதல் பெறுதல் மற்றும் வீட்டின் இருப்பிடத்தை புவிசார் குறியிடுதல் ஆகிய மூன்று படிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


3. பயனாளிகளுக்கு சமவெளிப் பகுதிகளில் ₹1.20 லட்சமும், மலைப்பாங்கான அல்லது தொலைதூரப் பகுதிகளில் ₹1.30 லட்சமும் கிடைக்கும். இந்தப் பணம் அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும். தகுதி பெற, அவர்கள் வருமான வரி செலுத்தாமல் இருப்பது, வாகனங்கள் வைத்திருக்காமல் இருப்பது மற்றும் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது போன்ற 10 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.


4. இந்தத் திட்டத்தின் முக்கிய பயனாளிகள் பெண்கள் ஆவார். வீடு அவர்களின் பெயரில், ஒரே உரிமையாளராகவோ அல்லது கூட்டு உரிமையாளராகவோ இருக்க வேண்டும். குடும்பத்தில் வயது வந்த பெண் இல்லாதது மட்டுமே இதற்கு விதிவிலக்காகும்.



Original article:

Share: