தேர்தல் ஆணையம் அதன் சொந்த அமைப்புகளையும் நடைமுறைகளையும் கேள்விக்குட்படுத்துவதாகவும், கேள்விகளுக்கு வெறுமனே பதிலளிப்பதைவிட அவற்றை சவால் செய்வதாகவும் இருக்க வேண்டும்.
ஒரே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (Electors Photo Identity Cards (EPIC)) எண்ணைக் கொண்ட பல வாக்காளர்களின் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (EC)) கடந்த வாரம் அறிவித்தது. இது, தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் (CEO) விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இந்த நீண்டகால சிக்கலைத் தீர்ப்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிவு மேற்கொள்ளப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் நகல் உள்ளீடுகள் (duplicate entries) நீண்டகால பிரச்சினை என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால், வலுவான தொழில்நுட்பம் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தச் சவாலை தேர்தல் ஆணையம் நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு பதில் வந்தாலும், இந்தப் பிரச்சினையை ஒப்புக்கொள்வது ஒரு தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கான முதல் தேவையான படியாகும்.
தேர்தல் ஆணையம் (EC) மாதிரி நடத்தை விதி (Model Code of Conduct) மீறல்களை "தேர்ந்தெடுக்கப்பட்ட சகிப்புத்தன்மை" (selective tolerance) காரணமாக பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இது தவிர, சமீப காலங்களில் மூன்று முக்கிய பிரச்சினைகள் தேர்தல் ஆணையத்தை மீண்டும் மீண்டும் சர்ச்சையில் ஆழ்த்தியுள்ளன. அவை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machines (EVM)), வாக்காளர் பட்டியல் (electoral roll) மற்றும் படிவம் 17 (Form 17) போன்றவை ஆகும். இவற்றை "நரக மும்மூர்த்திகள்" (infernal trinity) என்று அழைக்கலாம். தேர்தல் ஆணையர்கள், இந்தப் பிரச்சினைகளை நிர்வகிப்பதால், அவர்களை "புனித மும்மூர்த்திகள்" (holy trinity) என்று குறிப்பிடலாம்.
இந்தியாவின் ஜனநாயக விவாதங்களுக்கு இரண்டு மும்மூர்த்திகளும் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. இருப்பினும், நமது ஜனநாயகம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதில் பணத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது (increasing grip of money power), பொது வாழ்வில் நேர்மை சரிவு (declining probity in public life) மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளில் நம்பிக்கை இழப்பு (deteriorating trust in constitutional bodies) ஆகியவை இதில் அடங்கும். இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், இந்தக் கட்டுரை நரக மும்மூர்த்திகளைப் பற்றி கவனம் செலுத்தும்.
வழக்கத்திற்கு மாறான வாக்காளர் நீக்கங்கள் மற்றும் சேர்த்ததற்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் (TMC) தலைவர் நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (duplicate Electors Photo Identification Card (EPIC)) எண்கள் பற்றிய பிரச்சினையை எழுப்புவதற்கு முன்பு, மே மாதத்தில் பொதுத் தேர்தலுக்கும் நவம்பர் 2024-ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட சில மாதங்களுக்குள் மகாராஷ்டிராவில் அசாதாரண எண்ணிக்கையிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் டெல்லி வாக்காளர் பட்டியலில் நீக்கங்கள்/சேர்ப்புகள் குறித்து மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தின. தேர்தல் ஆணையத்திடம் இருந்து திருப்திகரமான விளக்கம் காத்திருக்கிறது.
வாக்காளர் பட்டியல் என்பது தேர்தல் செயல்முறையின் மையமாகும். ஏனெனில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இல்லாமல், ஒருவர் EPIC எண்ணை வைத்திருந்தாலும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாது. முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) சுகுமார் சென், வாக்காளர் பட்டியல்களின் நேர்மை குறித்து நம்பிக்கை கொள்ளும் வரை முதல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவில்லை. நேரு அவர்கள் இரண்டு முறை அவையில் தேர்தலை அறிவித்திருந்தாலும், ஒரு நபர் ஆணையமாக செயல்பட்டிருந்த நிலையில் சுகுமார் சென், வாக்காளார் பட்டியல்களைச் சரிபார்க்க நாடு முழுவதும் பயணம் செய்தார். இன்று, நமக்கு மூன்று ஆணையர்கள் உள்ளனர். மேலும், பட்டியல்கள் பெரும்பாலும் துல்லியமாக செயல்படுவதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும். வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் (booth-level officers), தேர்தல் பதிவு அதிகாரிகள் (electoral registration officers (ERO)) மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் (EC) விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது வாக்காளர்களின் எண்ணிக்கையைச் சரிபார்ப்பதும் இந்த வழிகாட்டுதல்களில் அடங்கும். ஒரு தொகுதியில் அதிக மாற்றங்களைக் கொண்ட 20 வாக்குச் சாவடிகளின் பட்டியல்களில் சிறப்பு சரிபார்ப்புகளும் அவர்களுக்குத் தேவை. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இன்னும் முரண்பாடுகள் உள்ளன.
வாக்காளர் சேர்க்கை அல்லது நீக்கம் முந்தைய பட்டியலில் 2 அல்லது 3 சதவீதத்தைவிட அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் தேர்தல் பதிவு அதிகாரிகளைக் (Electoral Registration Officer(ERO)) கோர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது தனிப்பட்ட சேர்க்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் நீக்குதல்களை வெளியிடுவதற்கான தற்போதைய விதிக்கு கூடுதலாக இருக்க வேண்டும். இந்த வெளிப்படுத்தல்களுக்கு ஏற்கனவே தனிப் படிவங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்குச் சாவடிகளின் பட்டியல் தலைமை தேர்தல் ஆணையர் (CEO)/ தேர்தல் ஆணையர் (EC) இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இது வாக்காளர் பட்டியலில் எங்கு முரண்பாடான மாற்றங்கள் உள்ளன என்பதை அனைவரும் பார்க்க அனுமதிக்கும். இதனால், இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும். இது அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பட்டியலை கவனமாக மதிப்பாய்வு செய்து செயல்முறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
முன்னதாக, வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவைப் பகிர்ந்து கொள்ளாத குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் எதிர்கொண்டது, குறிப்பாக வாக்குப்பதிவு நாளுக்குப் பிறகு அது மிக முக்கியமானது. 2024 பொதுத் தேர்தல்களின் போது படிவம் 17 ஒரு முக்கிய தலைப்பாக மாறியது. இது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்து "அழிவின் ஆயுதம்" (weapon of destruction) அல்லது "நம்பிக்கை" (trust) என்று பார்க்கப்படுகிறது. தற்போதைய விதிகளின்படி, படிவம் 17C-ன் சான்றளிக்கப்பட்ட நகல் அனைத்து வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் படிவம் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ பதிவாக இருக்க வேண்டும். இருப்பினும், தலைமை அதிகாரி விவரங்களை நிரப்பும்போது தவறு செய்தால் அதில் பிழைகள் இருக்கலாம். எவ்வாறாயினும், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளரால் மறுநாள் ஆய்வு செய்யும்போது அதன் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படுகிறது. ஆய்வு அடிப்படையில் மறுவாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்தவுடன், படிவம் 17C-யில் உள்ள தரவுகளின்படி பதிவான வாக்குகளின் விவரங்கள் ஒவ்வொரு சட்டமன்றப் பகுதிக்கும் வாக்குச்சாவடி வாரியாக CEO/EC இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இந்த எண்ணிக்கைகள் பற்றிய சர்ச்சை தேவையற்றது மற்றும் இந்த வெளிப்படையான செயல்முறையால் எளிதில் தணிக்க முடியும். ஒரு கிரிக்கெட் போட்டியை கற்பனை செய்து கொள்ளுங்கள், அங்கு அமைப்பாளர்கள் ஸ்கோரை முழு பொதுப் பார்வையில் காட்டாமல், போட்டியின் முடிவில் விவரங்களை அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு மக்களைக் கேட்க முடியுமா?
இது பரவலாக விமர்சிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதைப் பற்றி நிறைய சொல்லப்பட்டு எழுதப்பட்டுள்ளது. நாட்டின் உச்சநீதிமன்றம் கூட முக்கிய அறிக்கைகளை வெளியிட்டு, அதற்கு ஒரு சுத்தமான சீட்டு (clean chit) வழங்கியுள்ளது. நீதிமன்றங்கள் சில நேரங்களில் கவலைகளை எழுப்பியவர்களின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் அதன் உற்பத்தி, மேலாண்மை, இயக்கம் மற்றும் பயன்பாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மோசடி செய்யப்பட்டுள்ளதா, அதை மோசடி செய்ய முடியுமா என்பது இரண்டு தனித்தனிக் கேள்விகள் உள்ளன. தேர்தல் ஆணையம் இந்த கவலைகளை எழுப்புபவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, உறுதியான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.
கேள்விகளை அற்பமான, எரிச்சலூட்டும் அல்லது தவறாக வழிநடத்தும் என்று புறக்கணிப்பது சந்தேகங்களை அதிகரிக்கும். சில சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 100% வாக்குச் சீட்டுகளை எண்ணுவதன் மூலம் தேர்தல் ஆணையம் ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது தவறுகள் அல்லது மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை நீக்க உதவும். அதேபோல், நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குச் சாவடி இயந்திர மூலக் குறியீட்டை (EVM source code) வெளியிடுவதையும் அது தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அதேபோல், சாத்தியமான மோசடிகளைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் அதன் சொந்த அமைப்புகளையும் நடைமுறைகளையும் கேள்விக்குட்படுத்துவதாகவும், கேள்விகளுக்கு பதிலளிப்பதைவிட அவற்றையே சவால் செய்வதாகவும் பார்க்க வேண்டும். இந்த அணுகுமுறையின் மூலம் அமைப்புகள் சிறந்து விளங்கவும், முன்னேறவும் உதவுகிறது.
ஆரோக்கியமான ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அது தற்போது எதிர்கொள்ளும் சிரமங்களிலிருந்து தன்னை வெளியே இழுக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அது எப்படி முடிந்தது என்பது வேறு பிரச்சினை.
எழுத்தாளர் முன்னாள் தேர்தல் ஆணையர் ஆவார்.