முக்கிய அம்சங்கள் :
சில்லறை விற்பனையாளர்கள் பயோஸ்டிமுலண்ட்களையும் (biostimulants) வாங்காவிட்டால், யூரியா மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட் (diammonium phosphate (DAP)) போன்ற மானிய விலை உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில்லை என்று சௌஹான் சுட்டிக்காட்டினார்.
பயோஸ்டிமுலண்டுகளின் (biostimulants) திறமையின்மை குறித்து பல விவசாயிகள் சமீபத்தில் புகார்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். "விவசாயிகள் எவ்வளவு நன்மையைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்க பயோஸ்டிமுலண்டுகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வது அவசியம். இல்லையென்றால், அதை விற்க அனுமதி வழங்க முடியாது," என்று அவர் கூறினார்.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஃபார்ச்சூன் பிசினஸ் இன்சைட்ஸ் குறிப்பிட்டது, இந்திய பயோஸ்டிமுலண்டுகளின் சந்தை அளவு 2024-ல் 355.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. சந்தை 2025-ல் 410.78 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2032-ம் ஆண்டில் 1,135.96 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி முன்னறிவிப்பு காலத்தில் 15.64% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (compound annual growth rate (CAGR)) காட்டுகிறது.
பல ஆண்டுகளாக சுமார் 30,000 பயோஸ்டிமுலண்ட் (biostimulants) பொருட்கள் தடையின்றி விற்கப்பட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில்கூட, சுமார் 8,000 பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் சௌஹான் கூறினார். "நான் கடுமையான சோதனைகளை அமல்படுத்திய பிறகு, இந்த எண்ணிக்கை இப்போது தோராயமாக 650-ஆகக் குறைந்துள்ளது," என்று அவர் ஜூலை 15 அன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா? :
இந்த பொருட்கள் தாவரங்களின் இயற்கையான செயல்முறைகளைத் தூண்டுவதன் மூலம் உதவுகின்றன. இது சிறந்த பயிர் விளைச்சலுக்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில், தாவரக் கழிவுகள் மற்றும் கடற்பாசி சாறுகள் இந்த பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகாரப்பூர்வமாக, உயிரூக்கிகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் உரங்கள் (கனிம, கரிம அல்லது கலப்பு) (கட்டுப்பாடு) உத்தரவு, 1985, இதனை “ஒரு பொருள் அல்லது நுண்ணுயிரி அல்லது இரண்டின் கலவையாகும், இது தாவரங்கள், விதைகள் அல்லது வேர்ப்பகுதியில் பயன்படுத்தப்படும்போது, தாவரங்களின் உடலியல் செயல்முறைகளைத் தூண்டுவதற்கும், அதன் ஊட்டச்சத்து உறிஞ்சுதல், வளர்ச்சி, விளைச்சல், ஊட்டச்சத்து திறன், பயிர் தரம் மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் திறனை மேம்படுத்துவதற்கும் முதன்மைப் பங்கு வகிக்கிறது... ஆனால், பூச்சிக்கொல்லிகள் அல்லது 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளை இது உள்ளடக்காது” என வரையறுக்கிறது.
உயிரித் தூண்டிகள் / உயிரி ஊக்கிகளானது தற்போதுள்ள உரம் அல்லது பூச்சிக்கொல்லி வகைகளின் கீழ் வராததால், அவை நீண்ட காலமாக அரசாங்க ஒப்புதல் இல்லாமல் திறந்த சந்தையில் விற்கப்பட்டன.
இந்தியாவில், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் முறையே 1985 உரக் கட்டுப்பாட்டு ஆணை (Fertiliser Control Order (FCO)) மற்றும் 1968-ன் பூச்சிக்கொல்லிச் சட்டத்தால் (Insecticides Act) நிர்வகிக்கப்படுகின்றன. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் கீழ் உரக் கட்டுப்பாட்டு ஆணையை (FCO) வெளியிட்டு, அவ்வப்போது அதில் மாற்றங்களைச் செய்கிறது.