முக்கிய அம்சங்கள் :
மே 6 ஆம் தேதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டாலும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்ததால் ஒப்பந்தத்தின் அறிக்கையானது வெளியிடப்பட இருந்தது. ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்தில் முறையான கையெழுத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பிரதமர் மோடியுடன் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொள்வார்.
புதன்கிழமை தொடங்கி நான்கு நாள் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணத்திற்கு முன்னதாக அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து நாடானது மூன்று வெவ்வேறு பிரதமர்களைக் கண்டது. இதில், ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தேர்தல் வெற்றியைப் பெற்ற பிறகு இந்த ஒப்பந்தம் இறுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, UK ஒப்பந்தம் ஒரு மேற்கத்திய நாட்டுடனான முதல் பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். 2019-ம் ஆண்டில் சீனா தலைமையிலான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை கைவிட புது தில்லி (இந்தியா) முடிவு செய்ததை அடுத்து இது நடந்தது.
இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்களுக்கு இங்கிலாந்து சந்தையைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு ஒப்பந்த உரையும் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்தியா எவ்வாறு கையாண்டது என்பதைக் காண்பிக்கும். CBAM என்பது இங்கிலாந்துக்கான இந்தியாவின் உலோக ஏற்றுமதியை கணிசமாக பாதிக்கக்கூடிய ஒரு விதியின் வெளிப்பாடாகும்.
இங்கிலாந்து ஒப்பந்தம் முக்கியமானது, ஏனெனில் இது இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் மேம்பட்ட சேவைத் துறைகளின் ஒருங்கிணைப்பைத் தொடங்குகிறது.
இந்தியா உயர்-ரக பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கியை அதன் சந்தையில் நுழைய அனுமதித்துள்ளது. இது படிப்படியாகக் கதவுகளைத் திறந்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா? :
2024–25-ஆம் ஆண்டில் இந்தியாவின் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி 12.6 சதவீதம் அதிகரித்து 14.5 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 2.3 சதவீதம் அதிகரித்து 8.6 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. 2022–23-ஆம் ஆண்டில் 20.36 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023–24-ஆம் ஆண்டில் 21.34 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) இந்தியாவின் அனைத்து ஏற்றுமதிக்கான பலன்களையும் உள்ளடக்கிய அனைத்து துறைகளிலும் உள்ள பொருட்களுக்கான விரிவான சந்தை அணுகலை உறுதி செய்கிறது. இந்தியா சுமார் 99 சதவீத வரிகளில், வரி நீக்கத்தால் பயனடையும், இது வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை உள்ளடக்கியது. இது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க வாய்ப்புகளை வழங்குகிறது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள், சேவைகள், புதுமை, அரசாங்க கொள்முதல் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் பற்றிய அத்தியாயங்கள் உள்ளன. இரட்டைப் பங்களிப்பு மாநாட்டு ஒப்பந்தம் (Double Contribution Convention Agreement) அல்லது சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் (social security pact) குறித்த பேச்சுவார்த்தைகளையும் இரு நாடுகளும் முடித்துள்ளன.
பிரிட்டனில் குறிப்பிட்ட காலத்திற்கு பணிபுரியும் இந்திய நிபுணர்கள் சமூகப் பாதுகாப்பு நிதிகளுக்கு இரட்டை பங்களிப்பு செய்வதைத் தவிர்க்க இது உதவும். இருப்பினும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Investment Treaty (BIT)) குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியா இதுவரை கையெழுத்திட்ட மிகவும் விரிவான தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் எதிர்கால ஒப்பந்தங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிக்கலான ஒப்பந்தம் போன்ற இப்போது பேச்சுவார்த்தையில் உள்ள பல வர்த்தக ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.