தமிழ்நாட்டில் காசநோய் இறப்புகளைக் குறைக்க ஒரு புதுமையான முயற்சி எவ்வாறு உதவியது? -அனொன்னா துத்த்

 தர்மபுரியில் காசநோய் மரண விகிதம் 12.5%இல் இருந்து 7.8%-ஆகவும், கரூரில் 7.1%இல் இருந்து 5.3%-ஆகவும், விழுப்புரத்தில் 6.1%இல் இருந்து 5.2%-ஆகவும் குறைந்தது.


2022இல் இறப்பில்லா தமிழ்நாடு காசநோய் திட்டம் (Tamil Nadu Kasanoi Erappila Thittam (TN-KET)) அல்லது காசநோய் இறப்பு இல்லாத முயற்சி (TB death free initiative) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் காசநோய் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


தகவல்கள் எதை காட்டுகின்றன?


இந்தியன் ஜர்னல் ஆஃப் கம்யூனிட்டி மெடிசின் (Indian Journal of Community Medicine)-இல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் படி, இந்த முன்னெடுப்பின் காரணமாக மூன்று மாவட்டங்களில்  தர்மபுரி, கரூர் மற்றும் விழுப்புரம் பே 2022 மற்றும் 2023க்கு இடையில் காசநோய் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டது. தர்மபுரியில் காசநோய் மரண விகிதம் 12.5%இல் இருந்து 7.8%-ஆகவும், கரூரில் 7.1%இல் இருந்து 5.3%-ஆகவும், விழுப்புரத்தில் 6.1%இல் இருந்து 5.2%-ஆகவும் குறைந்தது.


TN-KET திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் காசநோய் ஆரம்பகால இறப்புகளில் 20% வீழ்ச்சியைக் கண்டதாக தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் (National Institute of Epidemiology) விஞ்ஞானிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் 2024-ஆம் ஆண்டில் மொத்த இறப்புகளில் 20% முதல் 30% வரை குறைந்துள்ளது.


இந்த திட்டம் இரண்டு காரணங்களால் வெற்றிகரமாக இருந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


முதலாவதாக, இது ஒரு எளிய மற்றும் வேகமான கருவியைப் பயன்படுத்துகிறது. இது ஒரு காசநோய் நோயாளி மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறாரா, நோயறிதலுக்குப் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா என்பதை மருத்துவர்கள் விரைவாகத் தீர்மானிக்க உதவுகிறது. இந்தக் கருவிக்கு எந்த ஆய்வகப் பரிசோதனைகளும் தேவையில்லை.


இரண்டாவதாக, அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை வழங்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளிலும் கவனம் செலுத்தும் ஒரு பராமரிப்பு மாதிரியை இந்த திட்டம் பயன்படுத்துகிறது.


இந்த கருவி எப்படி செயல்படுகிறது?


தமிழ்நாட்டு சுகாதார பணியாளர்கள் நோயின் தீவிரத்தின் அடிப்படையில் நோயாளி பராமரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் காகித அடிப்படையிலான முன்னுரிமை கருவியை (paper-based triage tool) பயன்படுத்துகிறார்கள். தீவிரத்தைத் தீர்மானிக்க, சுகாதார பணியாளர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து காசநோய் நோயாளிகளுக்கும் ஐந்து முக்கிய அளவீடுகளை பதிவு செய்கிறார்கள்.


  • உடல் நிறை குறியீட்டை (body mass index (BMI)) கணக்கிட நோயாளியின் உயரம் மற்றும் எடை பயன்படுத்தப்படுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடு நிலையை (undernutrition) கண்டறிய உதவுகிறது;


  • காலின் வீக்கம் 15 விநாடிகள் அழுத்தி பார்த்து தீர்மானிக்கப்படுகிறது;


  • உட்கார்ந்த நிலையில் நிமிடத்திற்கு சுவாச வீதம் (respiratory rate per minute) பதிவு செய்யப்படுகிறது;


  • ஆக்ஸிஜன் செறிவு (oxygen saturation) ஆக்சிஸன் அளவை கண்டறியும் (pulse oximeter) கருவியைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. 


  • காசநோய் நோயாளிகள் ஆதரவு இல்லாமல் நிற்க முடியுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.


ஒரு நோயாளியின் BMI 14 kg/sq m-க்கு குறைவாக இருந்தால், அல்லது சுவாச பிரச்சினைகள் இருந்தால், அல்லது பிற அளவீடுகளில் மோசமான செயல்பாடு இருந்தால், அவர்கள் "கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள்" (“severely ill”) என்று குறிக்கப்படுகிறார்கள். அத்தகைய நோயாளி உடனடியாக விரிவான மதிப்பீடு மற்றும் உள்நோயாளி சிகிச்சைக்கு (inpatient treatment) மருத்துவமனையில் அல்லது ஏதேனும் மருத்துவ வசதியில் வழங்கப்படும் பராமரிப்பு பரிந்துரைக்கப்படுகிறார்.


இந்த காகித அடிப்படையிலான முன்னுரிமை கருவி, சுகாதார பணியாளர்கள் ஒரு நோயாளியின் 16 அளவீடுகளை பதிவு செய்து, அவர்களை ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு அனுப்ப வேண்டிய மற்ற கருவிகளை விட எளிமையானது.  இது நோய் கண்டறிதல் செயல்முறையை குறைந்தபட்சம் ஒரு வாரம் நீடிக்கும். TN-KET திட்டத்தின் வகைப்படுத்தல் கருவி மூலம், மருத்துவர்கள் ஒரு நோயாளியை ஒரே நாளில் கண்டறிய முடியும்.


இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டில் காசநோய் கண்டறியப்பட்ட 98% நோயாளிகள் முன்னுரிமை கருவியைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்படுகிறார்கள் மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களில் 98% பேர் நோய் கண்டறிந்த ஏழு நாட்களுக்குள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


தமிழ்நாடு அரசு கடுமையான காசநோய் வலை பயன்பாடு (Severe TB Web Application) என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் நோயாளியின் விவரங்களை உள்ளிடும்போது, அந்த தளம் நோயாளி இறக்கும் வாய்ப்பைக் காட்டுகிறது என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் தலைவர் மனோஜ் முர்ஹேகர் கூறினார். இது சுகாதாரப் பணியாளர்கள் காசநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற விரைவாகச் செயல்பட உதவுகிறது.


வேறுபடுத்தப்பட்ட காசநோய் பராமரிப்பு மாதிரி என்றால் என்ன?


2021-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (National Tuberculosis Elimination Programme (NTEP)) சிறப்பு பராமரிப்பு வழிகாட்டுதல்களைப் பயன்படுத்திய இந்தியாவின் முதல் திட்டங்களில் TN-KET திட்டமும் ஒன்றாகும். இது ஒவ்வொரு நோயாளியின் தேவைகளிலும் கவனம் செலுத்துகிறது. அவர்களின் சுகாதார தரவு, வயது, எடை மற்றும் பிற நிலைமைகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறது இது காசநோய் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளிலும் நோயின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான சிகிச்சையை வழங்குகிறது.


முன்னுரிமை கருவி மூலம் காசநோய் நோயாளிகளின் விரைவான பரிசோதனையுடன் இணைந்து, இந்த மாதிரி மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரம்பகால மரணங்களை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. பொதுவாக, காசநோய் காரணமாக இறக்கும் 50% பேர் நோய் கண்டறியப்பட்ட முதல் இரண்டு மாதங்களுக்குள் இறந்துவிடுவார்கள்.


உடனடி உள்நோயாளி பராமரிப்பு கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளில் ஆரம்பகால மரணத்தின் சாத்தியத்தை 1% முதல் 4% வரை குறைக்க முடியும். பொதுவாக, அத்தகைய நோயாளிகளில் மரணத்தின் சாத்தியம் 10% முதல் 50% வரை இருக்கும் என்று TN-KET-இன் செயல்பாட்டை ஆய்வு செய்த தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் (National Institute of Epidemiology) மூத்த விஞ்ஞானி ஹேமந்த் ஷேவாடே கூறினார்.


இது ஏன் முக்கியமானது?


தற்போது, உலகிலேயே இந்தியாவில் தான் அதிக காசநோய் நோயாளிகள் உள்ளனர். 2023ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 28 லட்சம் காசநோய் நோயாளிகள் இருந்தனர். இது உலகளவில் உள்ள அனைத்து காசநோய் நோயாளிகளில் 26% ஆகும் என்று கடந்த ஆண்டு உலகளாவிய காசநோய் அறிக்கை தெரிவிக்கிறது. 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.15 லட்சம் (315,000) காசநோய் இறப்புகள் ஏற்பட்டதாகவும், இது உலகளவில் காசநோய் இறப்புகளில் 29% என்றும் அறிக்கை காட்டுகிறது.


இறப்பில்லா தமிழ்நாடு காசநோய் (Tamil Nadu Kasanoi Erappila Thittam (TN-KET)) திட்டத்தின் வெற்றி, எளிய முன்னுரிமை கருவியின் பயன்பாட்டுடன் இணைந்த வேறுபடுத்தப்பட்ட பராமரிப்பு மாதிரி காசநோய் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இந்த முன்னெடுப்பு இப்போது மற்ற மாநிலங்களால் பின்பற்றப்பட்டு, நாடு முழுவதும் காசநோய் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.



Original article:

Share: