இயல்பு குடியிருப்பாளர் என்று தகுதி பெற்றவர்கள் யார்? -ரங்கராஜன் .ஆர்

 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act, 1950) பிரிவு 20 என்ன கூறுகிறது? ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்று தங்களை வகைப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்? வெளிநாட்டு இந்தியர்கள் (Overseas Indians (NRIs)) வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules) எதை நிர்வகிக்கின்றன?


தற்போதைய செய்தி: இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India (EC)) பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர மறு ஆய்வு (Special Intensive Revision (SIR)) ஒன்றை தொடங்கியுள்ளது. இது ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான நோக்கத்திற்காக இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்பது பற்றிய விவாதத்தைத் இது அதிகரிக்க செய்துள்ளது. 


'இயல்பு குடியிருப்பாளர்' (ordinarily resident) என்றால் யார்?


தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 விதிகளைப் பின்பற்றி வாக்காளர் பட்டியல்களை உருவாக்குகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 19, ஒரு நபர் ஒரு பகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு "இயல்பு குடியிருப்பாளராக" இருக்க வேண்டும் என்று கூறுகிறது.


பிரிவு 20 இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்ற சொல்லிற்கு பொருளை வழங்குகிறது. ஒரு நபர் ஒரு தொகுதியில் வசிக்கும் வீட்டை சொந்தமாக வைத்திருப்பதாலோ மட்டுமே அவர் அந்தத் தொகுதியில் 'இயல்பு குடியிருப்பாளராக' கருதப்படக்கூடாது என்று குறிப்பிடுகிறது. 


(அ) மத்திய அரசின் ஆயுதப் படைகளில் இருப்பவர்கள்


(ஆ) மாநில ஆயுதக் காவல் படையில் இருந்து அந்த மாநிலத்திற்கு வெளியே பணிபுரியும் நபர்கள்


(இ) இந்தியாவிற்கு வெளியே இந்திய அரசாங்கத்திற்காக பணிபுரியும், அல்லது


(ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் குடியரசுத்தலைவரால் அறிவிக்கப்பட்ட அரசியலமைப்பு பதவியை வகிக்கும் நபர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படாவிட்டால் அவர்கள் வாழ்ந்த இடத்தில் 'இயல்பு குடியிருப்பாளர்' என்று கருதப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் இதில் அடங்குவர்.


2010இல் சேர்க்கப்பட்ட பிரிவு 20A, வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் (non-resident Indians (NRIs)) தங்கள் கடவுச்சீட்டு (passport) முகவரி உள்ள தொகுதியில் பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கிறது.


தேர்தல் ஆணையத்துடன் உடன் கலந்தாலோசித்து ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வாக்காளர்கள் பதிவு விதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி வாக்காளர் பட்டியல்களின் தயாரிப்பு மற்றும் அதில் பெயர்கள் சேர்த்தல்/நீக்குதல் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.


ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்ன?


ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இயல்பு குடியிருப்பாளர் வேண்டும் என்ற தேவை, வாக்காளர் அந்த தொகுதியுடன் உண்மையான தொடர்பை பராமரிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளது. இது பிரதிநிதித்துவ பொறுப்புடைமையை (representative accountability) பாதுகாக்கிறது. இது மோசடியான பதிவுகளை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மன்மோகன் சிங் வழக்கில் (1999) கௌஹாட்டி உயர்நீதிமன்றம், இயல்பு குடியிருப்பாளர் (ordinarily resident) என்ற சொல் அந்த இடத்தில் வழக்கமாக வசிக்கும் நபர் என்று பொருள்படும் என்று சுட்டிக்காட்டியது. அது நிரந்தர தன்மையுடைதாக இருக்க வேண்டும்.  தற்காலிக அல்லது சாதாரணமானதாக இருக்கக்கூடாது. அது அந்த நபர் நிரந்தரமாக வசிக்கும் நோக்கம் கொண்ட இடமாக இருக்க வேண்டும். ஒரு நியாயமான மனிதர் அவரை/அவளை அந்த இடத்தின் வசிப்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் பிரச்சினை எழுகிறது. 2020-21ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) நமது மக்கள்தொகையில் 11% பேர் வேலைவாய்ப்பு தொடர்பான காரணங்களால் இடம்பெயர்ந்தனர் என்று மதிப்பிட்டது. இதன் பொருள் சுமார் 15 கோடி வாக்காளர்கள் தங்கள் மாநிலங்களுக்குள் அல்லது வெளியே புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் ஆண்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே இடம்பெயர்ந்து சில மாதங்களுக்கு வீடு திரும்புகிறார்கள். 


பல கட்டுமான மற்றும் பாதுகாப்புத் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு அருகிலுள்ள தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வேலைக்காக, ஒரே மாநிலத்திற்குள் அல்லது வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம் மாறிச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் சொத்துக்கள் இருக்கும் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் தொடர்ந்து திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் அதே  பகுதியில் வாக்களிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அங்கு இல்லையென்றாலும், அந்த இடத்தில் "இயல்பு குடியிருப்பாளர்" என்ற முக்கிய யோசனையை இன்னும் பூர்த்தி செய்கிறார்கள் என்று நீதிமன்றங்கள் நம்புகின்றன.


எந்தவொரு புலம்பெயர்ந்தவரும் விரும்பினால், இந்தியாவில் எங்கும் தங்கள் புதிய வசிப்பிடத்திற்கு தங்கள் வாக்காளர் பதிவை மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், அரசாங்கம் "இயல்பு குடியிருப்பாளர்" என்ற பொருளை கண்டிப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் பெயர்களை அவர்களின் உண்மையான தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், அது ஜனநாயக செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும். இது அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கக்கூடும். ஏனெனில், பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் தாங்கள் பணிபுரியும் தற்காலிக இடத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது அனுமதிக்கப்படுவதில்லை.




முன்னோக்கி செல்வதற்கான வழி என்னவாக இருக்கும்?


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் சேவை வாக்காளர்கள், அறிவிக்கப்பட்ட பதவியை வகிக்கும் நபர்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்கள் அத்தகைய இடத்தில் நிரந்தரமாக வசிக்காமல் இருந்தாலும் கூட தங்கள் தொகுதியில் வாக்குரிமையை தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை வழங்குகிறது. இது ஒப்பிடக்கூடிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும், பெரும்பாலான தொழிலாளர்கள், குறுகிய கால அல்லது நீண்ட கால, அவர்களின் பகுதியில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் புலம்பெயர்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


அவர்கள் தங்கள் பூர்விக வசிப்பிடத்துடன் நெருக்கமான தொடர்புகளை தொடர்ந்து பராமரிக்கிறார்கள் மற்றும் அத்தகைய தொகுதியில் தங்கள் வாக்களிக்கும் உரிமையை தக்கவைத்துக்கொள்ள தேர்வு செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அல்லது தேர்தல் விதிகளை (election rules (RER)) மாற்றலாம். அவர்கள் தேர்தல்களில் பங்கேற்க உதவும் நியாயமான மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகள் இருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், வாக்காளர் விவரங்களை ஆதாருடன் இணைப்பதன் (Aadhaar seeding) மூலம் அந்தப் பிரச்சினையைத் தனித்தனியாக தீர்க்க முடியும்.


ரங்கராஜன் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.



Original article:

Share: