இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறை தோல்விகளை உச்சநீதிமன்ற தலையீடு வெளிக்காட்டுகிறது.
சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR)) நடைமுறையைத் தொடர்ந்து, பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு கடுமையான நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தலையிட்டு, வாக்காளர்களை நீக்கும்போது தேர்தல் ஆணையம் நியாயமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலை வந்தது.
இது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த பணியில் பெரிய குறைபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம், சிலர் இறந்துவிட்டார்கள், காணவில்லை அல்லது போலி/இரட்டை பதிவுகள் உள்ளன என்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியதாக சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு நீக்கத்திற்கும் எதிராக எந்த காரணங்களும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
தி இந்து மற்றும் கள அறிக்கைகள் பகுப்பாய்வு செய்த தரவுகள் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. அதிகமான ஆண்கள் இடம்பெயர்ந்திருந்தாலும், ஆண்களைவிட வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 32 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட 25 லட்சம் ஆண்களைவிட இது அதிகமான அளவாகும்.
இருப்பினும், சமீபத்தில் அதிகமான ஆண்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் செல்லுபடியாகும் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் இருப்பிடச் சான்றுகள் இருந்தபோதிலும், பல வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவோ அல்லது கணக்கெடுக்கப்படாமல் இருப்பதாகவோ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. நீதிமன்றத்தின் நடவடிக்கை, தேர்தல் ஆணையம் செப்டம்பர் 1-ஆம் தேதி உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர் தங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்ய வாக்காளர்களுக்கு இப்போது வாய்ப்பளிக்கிறது.
நீதிமன்றம் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும், அதில் மற்ற சிக்கலுக்கு கூறிய கூறுகளும் உள்ளன. மேலும், வரைவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், 11 அறிகுறி ஆவணங்களில் ஒன்றின் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் பரவலாகக் கிடைக்கும் ஆதார் அல்லது குடும்ப அட்டைகள் இல்லை.
நீக்கப்பட்ட குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, முந்தைய இரண்டு விசாரணைகளில் இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்திய நிலையில், தேர்தல் ஆணையம் இப்போது ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக சேர்க்க வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவு, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கு வெளிப்படைத்தன்மையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தியதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது; இதன் காரணமாக, என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதைப் பொதுமக்கள் மற்றும் சமூகக் குழுக்களால் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
மேலும் தேர்தல் நீக்கப்பட்டவர்களின் முழுப் பட்டியலையும் அதற்கான காரணங்களையும் ஒரே இடத்தில் வைக்க மறுப்பதன் மூலம் அது இப்போதும் அந்த தந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அனைவருக்குமான வயதுவந்தோர் வாக்குரிமை (Universal adult franchise) இந்தியாவின் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தூணாக இருந்து வருகிறது.
இந்த வழக்கில் வரவிருக்கும் விசாரணைகளும், பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டில் அதன் பங்கை சரிசெய்வதில் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள், இன்று நாட்டில் நிலவும் வாக்காளர் சேர்க்கை செயல்முறை குறித்த கடுமையான கவலைகளைத் தீர்க்க பெரிதும் உதவும்.