முக்கிய அம்சங்கள் :
குழு மேலும் குறிப்பிட்டதாவது : தற்போது இந்த முன்மொழிவுக்கு செல்லுபடியாகும் எந்த சுரங்க குத்தகையும் இல்லை, மேலும் இது மார்ச் 2021-ல் பாதுகாப்பு காப்பகமாக அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். யானைகள், இந்திய காட்டு எருமை, சாம்பார், மான், முள்ளம்பன்றி, சிறுத்தை மற்றும் புலி ஆகியவை "இந்த பகுதியில் காணப்படுகின்றன" என்று நாக்பூரில் உள்ள அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம் FAC-க்கு சமர்ப்பித்தது.
சுரங்கத் திட்டத்திற்கு 2009-ல் கொள்கை அளவில் வன ஒப்புதல் வழங்கப்பட்டது மற்றும் ஜனவரி 2014-ல் ஒன்றியத்திலிருந்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், நிறுவனம் வன வள உரிமைகள் சான்றிதழைப் (Rights of Forest Resources certificate) பெறாததால், சுமார் 16 ஹெக்டேர் வனப்பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான இறுதி ஒப்புதலைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. குத்தகையில் நிறுவனம் இன்னும் எந்த சுரங்க நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
ஜூலை 30 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், இந்த திட்டம் குறித்து நாக்பூரில் உள்ள பிராந்திய அலுவலகத்தின் வனத்துறை துணை இயக்குநர் ஜெனரல் மற்றும் மகாராஷ்டிரா அரசின் நோடல் அதிகாரியுடன் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடத்தியதாக குழு குறிப்பிட்டது.
இந்த கட்டத்தில் இந்த திட்டத்தை பரிசீலிக்காததற்கான காரணங்களாக சுரங்க குத்தகை செல்லுபடியாகும் தன்மை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் முன்மொழியப்பட்ட சுரங்கத் தடை மற்றும் பாதுகாப்பு இருப்புப் பகுதியில் சுரங்க குத்தகையின் இருப்பிடம் ஆகியவை வன ஆலோசனைக் குழுவால் (FAC) குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2024 வரைவு அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் (ESAs) சுரங்கம், குவாரி மற்றும் மணல் அள்ளுதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து சுரங்கங்களும் இறுதி அறிவிப்பின் தேதியிலிருந்து அல்லது தற்போதைய சுரங்க குத்தகை காலாவதியாகும் போது படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் 56,825.7 சதுர கி.மீ. பரப்பளவை சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் (Western Ghats as ecologically sensitive) மிக்க பகுதியாக அறிவிக்கும் 6-வது வரைவு அறிவிப்பை ஒன்றியம் வெளியிட்டது.
உங்களுக்குத் தெரியுமா? :
மேற்குத் தொடர்ச்சி மலைகள், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய நாட்டின் மேற்கு கடற்கரையில் இயங்கும் 1,600 கி.மீ நீளமுள்ள மலைத் தொடராகும். இதற்கு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2012-ல், அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த உயர்மட்ட பணிக்குழுவை அமைத்தார்.
முன்னதாக, காட்கில் குழு (Gadgil panel) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 64 சதவீத பகுதியை பரிந்துரைத்தாலும், டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவின் அறிக்கை, அந்தப் பகுதியில் 37 சதவீதத்தை மட்டுமே சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்கதாக அறிவித்தது.