இந்தியா எதிர்வினை ஆற்றலை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல், பருவமழை பாதிப்புகளைக் குறைக்க வேண்டும்.
வட இந்தியா முழுவதும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் முழுவதும் பல மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக்கில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாபில், முழு கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விவசாய நிலங்கள் கனமழையால் அழிந்துவிட்டன. டெல்லியிலும் அதிகப்படியான மழைபெய்து யமுனை நதி பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு பருவமழையின் மழைப்பொழிவு கணிக்க முடியாததாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் மாத மழை குவிந்த வெடிப்புகளாக வந்து, இமயமலையின் பலவீனமான சரிவுகளை அதிகமாகப் பாதித்து, சமவெளிப் பகுதிகளில் கரைகளை உடைத்து, தாழ்வான பகுதிகளை மூழ்கடித்துள்ளது. கனமழை, குறுகியகால மழை, உடனடி சேதத்தைவிட அதிகமான சேதத்தை ஏற்படுத்துகிறது. மலைச் சரிவுகள், வெகு தொலைவில் உள்ள குடியிருப்புகளுக்கு நிலைத்தன்மையை ஏற்படுத்துகின்றன. அபாயங்களை மேலும் அதிகரிக்கின்றன. இந்தச் சூழலில், நிவாரணத்தை எதிர்வினை நடவடிக்கைகளுடன் குறைக்க முடியாது. அடிக்கடி அடிக்கடி அழிவுகளை ஏற்படுத்தும் (destructive rainfall) மழைப் பொழிவின் சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதால் அறிவு சார்ந்த தடுப்பு உத்திகளில் மாநிலங்களும் ஒன்றிய அரசும் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து எதிர்பாராத அவசரநிலைகளாகக் கருதுவது ஏற்கனவே உள்ள ஆதாரங்களை மறுப்பதற்கு சமமாகும்.
ஒவ்வொரு பேரழிவையும் ‘முன்னெப்போதும் இல்லாத மழை பொழிவு’ (unprecedented) என்று அழைப்பது, நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டிருக்க வேண்டிய பாடங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும். இமயமலை மாநிலங்களில், சூழல்-உணர்திறன் மண்டலங்களில் (eco-sensitive zones) சரிவு-பாதுகாப்பு பொறியியல் (slope-safe engineering) போன்ற பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தாமல் வன அழிப்பும் சாலை அகலப்படுத்தலும் தொடர்கின்றன. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்த போதிலும் இந்த நிலை தொடர்கிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (catchments) மழைநீரை சேமிக்கும் திறன் குறையும்போது, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் கீழ்நோக்கிய அணைகளிலும் ஆறுகளிலும் வண்டல் குவிந்து வெள்ள பாதிப்பை மேலும் மோசமாக்குகிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் பேரழிவுகள் ஏற்பட்ட போதிலும், முன்னெச்சரிக்கை மற்றும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் கட்டமைப்பு (Evacuation architecture) வளர்ச்சியடையாமலேயே உள்ளது. கனமழையைக் கணிக்கும் திறன் மேம்பட்டுள்ளது. ஆனால் அது நம்பகமான தரைமட்ட எச்சரிக்கைகளாக மாற்றப்படவில்லை. சேதம் ஏற்பட்டவுடன் நிவாரண அமைப்புகள் அதிகமாக நிதி வழங்குகின்றன. ஆனால், முறையான பயிற்சிகள், முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சமூக தயார்நிலை போதுமானதாக இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நிலையற்றப் பகுதிகள் என்று அறியப்பட்ட பகுதிகளிலும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இரண்டும் இன்னும் பெரிய சாலை மற்றும் நகரத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. அதேநேரத்தில், அபாயங்களைக் கையாள போதுமான காலநிலை-பாதுகாப்பான உள்கட்டமைப்பை அவை உருவாக்கவில்லை. காடு வளர்ப்பிற்கான ஈடுசெய் திட்டம் (Compensatory afforestation) மற்றும் மறுவாழ்வு ஆகியவை இழந்தவற்றின் தரமான பண்புகளுடன் அரிதாகவே பொருந்துகின்றன. ஒட்டுமொத்த விளைவு மணல் காய்ந்த மலைச்சரிவுகளிலும் (denuded slopes), சிறிய நீர் சேகரிக்கும் பகுதிகளிலும், ஆபத்தை எதிர்கொள்ளும் அதிகமான மக்களிலும் காணப்படுகிறது. நிவாரண முயற்சிகளுக்கு அதிகக் கவனம் மற்றும் நிதி கிடைக்கிறது. ஆனால், வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல், நிலச்சரிவுகளைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாம் தீவிரமாகக் கவனம் செலுத்தாவிட்டால், அடுத்த பருவமழை அதிக சேதத்தை ஏற்படுத்தும். பின்னர் புகழ்ந்து பேசப்படும் மீட்டெழுச்சியைப் பாராட்டுவதற்கு பதிலாக, பாதிப்புகளை முன்கூட்டியே முறையாகக் குறைப்பதற்கு மாறுவது இன்னும் தாமதமாகவே உள்ளது.