முக்கிய அம்சங்கள் :
செவ்வாய்கிழமை பிற்பகலில் கோவிலுக்குச் செல்லும் வழியில், ஏற்பட்ட மேக வெடிப்பைத் தொடர்ந்து அத்குன்வாரி அருகே முப்பத்தி நான்கு பேர் இறந்தனர். அதே நேரத்தில், அதிகாலையில் மலைப்பாங்கான தோடா மாவட்டத்தில் நான்கு பேர் மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் அவர்களின் இறப்புகள் ஏற்பட்டன.
காயம் அடைந்த 13 பயணிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்க கத்ராவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற ஜம்மு & காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “மேக வெடிப்பு ஏற்பட்டு, அதில் அர்த்குவாரியில் பக்தர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்" என்று அவர் கூறினார். இது இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரிடர் என்றும், இதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார். "அவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
கோவிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை காலை முதல் ஹிம்கோட்டி மலையேற்றப் பாதையில் பயணம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மதியம் 1:30 மணி வரை பழைய பாதையில் அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
24 மணி நேரத்தில், ஜம்முவில் செவ்வாய்க்கிழமை 380 மிமீ மழை பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 1910-ம் ஆண்டு முதல் 24 மணிநேரத்தில் ஜம்முவில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதற்கு முன் செப்டம்பர் 25, 1988-ல் 270.4 மி.மீ மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு தெரியுமா?
மேக வெடிப்பு என்பது உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆனால் மிகவும் தீவிரமான மழைப்பொழிவு ஆகும். இது ஒரு சிறிய பகுதியில் நடைபெறும் ஒரு குறுகியகால தீவிர மழைப்பொழிவைக் குறிக்கிறது. சில நேரங்களில் புரிந்து கொள்ளப்படுவது போல், ஒரு மேகம் உடைந்து பெரிய அளவிலான நீரை வெளியேற்றுவது அல்ல. மேக வெடிப்புகளுக்கு மிகவும் குறிப்பிட்ட வரையறை உள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) மேக வெடிப்பு என்பது, சுமார் 20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவு பகுதியில் மணிக்கு 100மிமீ (அல்லது 10 செமீ)க்கு மேல் எதிர்பாராத மழைப்பொழிவு என வரையறுக்கிறது. இது போன்ற கனமழை கணிசமான அளவில் மழை வெள்ளத்தை ஏற்படுத்தலாம்.
அடிப்படையில், மேக வெடிப்புகளின் அனைத்து நிகழ்வுகளும் குறுகிய காலத்தில் அதிக மழையை உள்ளடக்கியது. ஆனால், குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் அனைத்து நிகழ்வுகளும் இந்த அளவுகோலுக்கு பொருந்தவில்லை என்றால் மேக வெடிப்புகள் அல்ல.