PM SVANIdhi கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கம் என்ன? -குஷ்பு குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் 2020-ல் தொடங்கப்பட்டது.


புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டமானது, கடன் வழங்கும் காலத்தை டிசம்பர் 31, 2024 முதல் மார்ச் 31, 2030 வரை நீட்டித்தது. இந்த நீட்டிப்பு 1.15 கோடி பயனாளிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 50 லட்சம் பேர் புதிய பயனாளிகளாக இருப்பார்கள் என்று அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.


அறிக்கையின்படி, கடனின் முதல் தவணை ரூ.10,000-லிருந்து ரூ.15,000 ஆகவும், இரண்டாவது தவணை ரூ.20,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்தப்பட்டதாகவும், மூன்றாவது தவணை ரூ.50,000 ஆகவும் உள்ளது. இந்தத் திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறையுடன் இணைந்து செயல்படுத்தும்.


இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.7,332 கோடியாக இருக்கும். ஜூலை ஜூலை 30-ம் தேதி நிலவரப்படி, 68 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.13,797 கோடி மதிப்பிலான 96 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள் முதல் தவணையை செலுத்தியவுடன், அவர்கள் இரண்டாவது தவணைக்கு தகுதியுடையவர்கள் மற்றும் அதேபோல, இரண்டாவது தவணை திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, அவர்கள் மூன்றாவது தவணையைப் பெறலாம்.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட திட்டம், விற்பனையாளர்களுக்கு சலுகைகளையும் வழங்குகிறது. இதில், சில்லறை மற்றும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக அவர்கள் ரூ.1,600 வரை பணம் திரும்பப் பெறலாம் (Cashback).


உங்களுக்கு தெரியுமா? 


இந்தியாவில் 50-60 லட்சம் தெருவோர வியாபாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் காணப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பொதுவாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 10-12 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.


நிரந்தரக் கடை இல்லாத எவரும் தெருவோர வியாபாரியாகக் கருதப்படுவார்கள். அரசாங்க மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த (விவசாயம் அல்லாத) நகர்ப்புற முறைசாரா வேலைவாய்ப்பில் 14 சதவீதம் தெருவோர வியாபாரம் செய்பவர்கள் ஆவர்.


தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014 (Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act) பொது இடங்களில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இந்த மசோதா, மக்களவையில் செப்டம்பர் 6, 2012 அன்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்ஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.


எந்தவொரு பொது இடத்திலோ அல்லது தனியார் பகுதியிலோ, தற்காலிகமாக கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பில் இருந்து அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதன் மூலம், அன்றாட உபயோகம் அல்லது பொது மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் "தெரு வியாபாரி" (street vendor) என சட்டம் வரையறுக்கிறது.


சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. NASVI-ன் கூற்றுப்படி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர, நகர விற்பனைக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. மேலும், தெரு வியாபாரிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை தொடர்கிறது.


உலகளாவிய தெற்கில், தெரு வியாபாரம் பாலினம் மற்றும் சாதி-வர்க்க காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெரு உணவு விற்பனையாளர்களில் பெண்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெரு உணவுக் கடைகளில் சுமார் 70–80% அவர்களால் நடத்தப்படுகின்றன.


மேலும், 2010-ம் ஆண்டு டெல்லியில் தெருவோர குழந்தைகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், நகரத்தில் சுமார் 51,000 தெருக் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் தெருவில் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள். இவர்களில் 36% தலித்துகள் மற்றும் 17% ஆதிவாசிகள் ஆவர்.

 

Original article:

Share: