PoSH சட்டம் ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 சமீபத்தில், உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு PoSH சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோரும் மனுவை பரிசீலிக்க மறுத்துவிட்டது. ஆனால் இந்த சட்டம் என்ன சொல்கிறது? இது அரசியல் கட்சிகளுக்கு பொருந்துமா? நீதிபதி ஹேமா குழு அறிக்கையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.



தற்போதைய செய்தி


கடந்த வாரம், உச்ச நீதிமன்றம், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வுச் சட்டம் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 (PoSH Act)) என அழைக்கப்படும் சட்டத்தை அரசியல் கட்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரும் மனுவை பரிசீலிக்க மறுத்துவிட்டது. இது கொள்கை வகுப்பாளர்களின் எல்லைக்குள் வருவதாகக் கூறியது.


மனுவில் செய்யப்பட்ட கோரிக்கை முழுமையாக சட்டமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்லது நிர்வாகத்தின் கொள்கையின் எல்லைக்குள் மட்டுமே உள்ளது. எனவே, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை" என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் நீதிபதியாக இருந்த, இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு அழுத்தம் கொடுத்த மூத்த வழக்கறிஞர் ரேகா குப்தாவிடம் கூறினார்.


முக்கிய அம்சங்கள்:


1. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வுச் சட்டம், பொதுவாக PoSH சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம், 2013-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இது பாலியல் துன்புறுத்தலை வரையறுத்தது, புகார் மற்றும் விசாரணைக்கான நடைமுறைகளை வகுத்தது. மேலும், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் வகுத்தது.


2. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வொரு பணியிடமும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாள ஒரு உள் புகார் குழுவை (Internal Complaints Committee (ICC)) அமைக்க வேண்டும் என்று PoSH சட்டம் கூறுகிறது. இது பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு அம்சங்களை வரையறுத்து, புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை வகுத்தது.


3. இந்தச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண், பணியிடத்தில் பணியமர்த்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், எந்த வயதினராகவும் இருக்கலாம். மேலும், எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்டவராகவும் இருக்கலாம். இதன் விளைவாக, எந்தவொரு பணியிடத்திலும் பணிபுரியும் அல்லது பார்வையிடும் அனைத்து பெண்களின் உரிமைகளையும் இந்தச் சட்டம் பாதுகாக்கிறது.


4. 2013-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், பாலியல் துன்புறுத்தல் என்பது பின்வரும் "விரும்பத்தகாத செயல்கள் அல்லது நடத்தைகளில்" ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்வது அடங்கும்:


➣ தேவையற்ற உடல் தொடர்பு மற்றும் முன்னேற்றங்கள்

➣ பாலியல் தேவைகளுக்கான கோரிக்கை அல்லது வேண்டுகோள்

➣ பாலியல் நிறைந்த கருத்துகள்

➣ ஆபாசத்தைக் காண்பித்தல்

➣ பாலியல் தன்மையுடைய வேறு எந்தவொரு விரும்பத்தகாத உடல், வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத நடத்தை.


5. பாதிக்கப்பட்டவர் உள் புகார் குழுவிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. உடல் அல்லது மன இயலாமை அல்லது மரணம் அல்லது வேறு காரணங்களால் பெண் புகார் அளிக்க முடியாவிட்டால், அவரது சட்டப்பூர்வ வாரிசு புகார் அளிக்கலாம்.


6. இந்த சட்டத்தின் கீழ், சம்பவம் நடந்த தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், "கூறப்பட்ட காலகட்டத்திற்குள் பெண் புகார் அளிப்பதைத் தடுக்கும் சூழ்நிலைகள் இருந்தன" என்று திருப்தி அடைந்தால் உள் புகார் குழுவால் "காலக்கெடுவை நீட்டிக்க" முடியும்.


7. உள் புகார் குழு "விசாரணைக்கு முன்" மற்றும் "பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையின் பேரில், அந்த பெண்ணிற்கும்  பிரதிவாதிக்கும் இடையில் சமரசத்தின் மூலம் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கைகளை எடுக்கலாம்" — சமரசத்தின் அடிப்படையாக எந்தவொரு பணத் தீர்வும் செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் அதை செய்ய வேண்டும்.


8. உள் புகார் குழு (Internal Complaints Committee (ICC)) பாதிக்கப்பட்டவரின் புகாரை காவல்துறைக்கு அனுப்பலாம் அல்லது 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய விசாரணையைத் தொடங்கலாம். விசாரணை முடிந்ததும், ICC தனது கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை 10 நாட்களுக்குள் முதலாளியிடம் வழங்க வேண்டும். அந்த அறிக்கை இரு தரப்பினருக்கும் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


9. பெண்ணின் அடையாளம், பிரதிவாதி, சாட்சி, விசாரணை பற்றிய எந்தவொரு தகவல், பரிந்துரை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பற்றி பொது வெளியில் வெளியிடக் கூடாது.


10. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், உள் புகார் குழு நிறுவனத்தின் "சேவை விதிகளின் நிபந்தனைகளுக்கு ஏற்ப" நடவடிக்கை எடுக்க முதலாளிக்கு பரிந்துரைக்கும். இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.


PoSH சட்டம் எவ்வாறு உருவானது?


POSH சட்டம் 1997-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விஷாகா வழிகாட்டுதல்கள் (Vishaka Guidelines) என்று அறியப்படுவனவற்றை விரிவுபடுத்தி சட்ட  ஆதரவை வழங்கியது.


ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற சமூக சேவகர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை, விஷாகா உள்ளிட்ட பெண்கள் உரிமைக் குழுக்கள் தாக்கல் செய்தன. 1992-ஆம் ஆண்டு ஒரு வயது பெண் குழந்தையின் திருமணத்திற்கு எதிராக பன்வாரி போராடினார். மேலும் பழிவாங்கும் விதமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


விஷாகா வழிகாட்டுதல்கள் பாலியல் துன்புறுத்தலை வரையறுத்து நிறுவனங்கள்மீது தடை, தடுப்பு, தீர்வு போன்ற மூன்று முக்கிய கடமைகளை விதித்தன. உச்சநீதிமன்றம் அவர்கள் பணியிடத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் விஷயங்களைப் பார்க்கும் புகார் குழு (Complaints Committee) அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் வழிகாட்டுதல்களை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் வகையில் செய்தது.


அரசியல் கட்சிகள் PoSH சட்டத்தின் வரம்பிற்குள் வருமா?


1. PoSH சட்டம் பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கேட்க அரசு மற்றும் தனியார் பணியிடங்கள் இரண்டும் ICC அமைக்க வேண்டும் என்று கோருகிறது. அரசியல் கட்சிகள் என்று வரும்போது, "பாலியல் துன்புறுத்தலை நிவர்த்தி செய்ய உள் புகார் குழுக்கள் இருப்பது சீரற்றது என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.


2. PoSH சட்டத்தின் பிரிவு 3(1) எந்தவொரு பணியிடத்திலும் எந்தவொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளக்கூடாது என்று கூறுகிறது. இந்த சட்டம் "பணியிடங்கள்" (workplace) என்ற சொல்லிற்கு  ஒரு அர்த்தத்தை அளிக்கிறது. இருப்பினும், அரசியல் கட்சிகளுக்கு சட்டம் எவ்வாறு பொருந்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


3. தற்போதைய, பொதுநல வழக்கு, (Public Interest Litigation (PIL)) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, கேரள உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் வக்காலத்து மையம் vs  கேரள மாநிலம் & மற்றவர்கள் (2022) வழக்கைத் தீர்த்தபோது, ஒரு நீதிமன்றம் இந்தக் கேள்வியை ஒருமுறை மட்டுமே எழுப்பியுள்ளது.


4. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, அதன் உறுப்பினர்களுடன் "முதலாளி-ஊழியர் உறவு இல்லை" என்றும், அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுடன் "முதலாளி-பணியாளர்" உறவைக் கொண்டிருக்கவில்லை என்றும், எந்தவொரு வணிகத்தையோ அல்லது அலுவலகத்தையோ நடத்துவதில்லை என்று நீதிமன்றம் கூறியது. எனவே, அரசியல் கட்சிகள் ‘எந்தவொரு உள் புகார் குழுவையும் அமைக்க வேண்டியதில்லை’ என்று நீதிமன்றம் கூறியது.


5. PoSH சட்டம் பெண்களை அவர்களின் ‘பணியிடத்தில்’ பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு பணியிடமாக எது கணக்கிடப்படுகிறது என்று சொல்வது கடினமாக இருக்கலாம். உதாரணமாக, பல கட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்ற தற்காலிகமாக பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும், அவர்கள் பொதுவாக மூத்த தலைவர்களைச் சந்திப்பதில்லை அல்லது நெருக்கமாகப் பணியாற்றுவதில்லை. 


நீதிபதி ஹேமா குழு அறிக்கை (Justice Hema Committee)


1. கடந்த ஆண்டு, கேரள அரசால் அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை பொது வெளியில் வெளியிடப்பட்டது. இது மலையாளம் திரைப்படத் தொழிலில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்தது.


2. ஓய்வுபெற்ற நீதிபதி கே ஹேமா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு, அந்த ஆண்டின் தொடக்கத்தில், ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, ஜூலை 2017-ல் அமைக்கப்பட்டது.


3. இந்தப் பிரச்சனையில், பாலியல் துன்புறுத்தல், பெண்கள் கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, பாலின பார்வை மற்றும் பாகுபாடு, ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு, மற்றும் அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அதிகாரம் இல்லாதது ஆகியவை அடங்கும்.


4. பெண்கள் தொழில்துறையில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காததற்கு, அவர்கள் இணைய வழியில் தாக்கப்படுவார்கள் என்ற பயம்தான் காரணம் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.  ஒரு முக்கிய நடிகை குழுவிடம் தொழிலில் எதையும் நடக்க செய்யக்கூடிய சக்திவாய்ந்த குழு உள்ளது என்று கூறினார். இந்த ‘குற்றக் கும்பல்’ (mafia) நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களையும் தடை செய்யலாம் என்று அறிக்கை கூறியது.


5. இது மலையாளத் திரைப்படத் தொழிலில் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உள் புகார் குழு (Internal complaints committee (ICC)) அமைப்பது தீர்வாக இருக்காது என்றும் அறிக்கை கூறுகிறது.


6. ஒரு பெண் "பிரச்சினை உண்டாக்குபவர்" என்று கருதப்பட்டால், அவர் மீண்டும் தொழிலில் வேலை பெறமுடியாமல் போகலாம். இது அவர்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்களைப் பற்றி வெளியில் கூறாமல் அமைதியாக இருக்க வைக்கிறது என்று அறிக்கை கூறியது.



Original article:

Share: