BioE3 கொள்கை இந்தியாவுக்கு எவ்வாறு பயனளிக்கும்? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— நாட்டிற்குள் உற்பத்தி செய்யவேண்டிய 1,000 தயாரிப்புகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இவை விரைவில் ஒரு வலைத்தளத்தில் பட்டியலிடப்படும்.


— கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, மருந்து தயாரிப்பாளர்களுக்கு நிதி ஊக்கத்தொகை போன்ற கொள்கைகளுடன் அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. சில மருந்துகள் இப்போது அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், நொதித்தல் சார்ந்த பொருட்கள் இன்னும் உற்பத்தி செய்வது கடினமாக உள்ளது.


— இதை நிவர்த்தி செய்ய, சுமார் 500 முதல் 1,000 லிட்டர் வரை பெரிய நொதித்தல் கருவிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவை நொதித்தல் (fermentation) சார்ந்த மருந்துகளையும் உயிரி எரிபொருள்கள் போன்ற பிற பொருட்களையும் உற்பத்தி செய்ய உதவும்.

— உயிரி உற்பத்தி மையங்கள் மேம்பட்ட நோய் எதிர்ப்புப் பொருள் (antibody) சிகிச்சைகள், கார்பனை சேகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த ஊட்டச்சத்துக்கான ஸ்மார்ட் புரதங்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகளிலும் கவனம் செலுத்தும். இவை தொடக்க நிலையிலிருந்து இறுதி நிலை தயாரிப்புகள் வரை உருவாக்கப்படும்.


— உயிரி தொழில்நுட்பத் துறை ஏற்கனவே ஆறு உயிரி அமைப்புகளை அமைக்க உதவியுள்ளது. இவை புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் சோதிப்பதற்கும் சிறப்பு வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.


— புதிய மையங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள், உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனங்கள் அல்லது சில தொழில்களுக்கான ஏற்கனவே உள்ள திறன் மையங்களுக்கு அருகில் உருவாக்கப்படும்.


— இந்த வசதிகள் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும். தனியார் நிறுவனங்கள் நுகர்பொருட்கள், ஊழியர்கள் மற்றும் பிற செலவுகளை ஈடுகட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும்.


— கொள்கையின்படி, தொடக்க நிறுவனங்கள் உண்மையான செலவைவிட 5% வரை செலுத்தும். அதே நேரத்தில் நிறுவனங்கள் 15% வரை செலுத்தலாம். இவை எந்த அறிவுசார் சொத்துரிமைகளையும் கோராது.


உங்களுக்குத் தெரியுமா?


— BioE3 கொள்கை இந்தியாவின் பசுமை வளர்ச்சி தொலைநோக்குப் பார்வையுடன் (2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது) பொருந்துகிறது மற்றும் நிலைத்தன்மைக்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் பிரதமரின் 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (‘Lifestyle for Environment (LiFE)) முயற்சியை ஆதரிக்கிறது.


— BioE3 கொள்கையின் முக்கிய குறிக்கோள், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவும், உயிரி உற்பத்தியில் புதுமையான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும்.


— பல்வேறு துறைகளில் உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை ஆதரிக்கும் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை இந்தக் கொள்கை வழங்குகிறது.


— உயிரி அடிப்படையிலான உயர் மதிப்புள்ள தயாரிப்புகளின் உற்பத்தியை விரைவுபடுத்துவதோடு, செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்த உயிரி உற்பத்தி செயல்முறையை மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



Original article:

Share: