ராஜஸ்தானின் 50 ஊரகப் பகுதிகளில் இருந்து, இந்த அமைப்பு 30,000-க்கும் மேற்பட்ட ஊரக பகுதிகளுக்கு விரிவடைந்து. 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைப் பள்ளிகளில் சேர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், மக்களும் கருத்துக்களும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் என்பதை ரமோன் மகசேசே விருது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆண்டு பெண் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான விருது, ஊரக பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தை மற்றும் அவரது கல்வி குறித்து மிகவும் தேவையானவைகளை வெளிப்படையாக காட்டுகிறது.
உலகம் பரிசு பெற்றவர்களை பாராட்டும்போது, இந்தியா அதன் எல்லைகளுக்குள் இன்னும் முழுமையடையாத ஒரு மாற்றத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு ஊரக பகுதிகளில் இருக்கும் பெண்ணும் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்தல், அங்கேயே தங்கி, நன்றாகக் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
உலகின் மிகப்பெரிய பள்ளி அமைப்புகளில் ஒன்றான இந்தியாவில், 250 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். ஆனால், ஊரக பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள், மேல்நிலைப் பள்ளியை முடிப்பதற்கு முன்பே பள்ளியை விட்டுவிடுகிறார்கள். இதற்கான காரணங்கள் நன்கு தெரிந்தவை:
வறுமை, ஆணாதிக்கம், வீட்டு வேலைகள், இளமைப் பருவத் திருமணம், அருகிலுள்ள பள்ளிகள் இல்லாமை, சில சமயங்களில், கழிப்பறை இல்லாதது போன்ற அடிப்படையான ஒன்றாகும்.
இந்த ஒதுக்கீட்டின் செலவுகள் மிகப்பெரியவை. பள்ளிப்படிப்பின் ஒவ்வொரு கூடுதல் வருடமும் ஒரு பெண்ணின் வருமானத்தை 10-20 சதவீதம் அதிகரிக்கிறது. அனைத்து பெண் குழந்தைகளும் 12 ஆண்டுகள் கல்வி முடித்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 10 சதவீதம் உயரலாம்.
கல்வி பெற்ற பெண் திருமணத்தை தாமதப்படுத்துகிறார், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுகிறார், அதிகம் சம்பாதிக்கிறார் மற்றும் தனது குடும்பம் மற்றும் சமுதாயத்தில் அதிகம் முதலீடு செய்கிறார். அந்த பெண்ணிற்கு கல்வியை மறுப்பது வெறும் அநீதி மட்டுமல்ல. இது முழு நாட்டையும் பாதிக்கிறது.
மாற்றத்திற்கான ஒரு ஊக்கமளிக்கும் உதாரணம் சஃபீனா ஹுசைன் நிறுவிய கல்வி பெண்கள் இயக்கம். ராஜஸ்தானில் 50 ஊரக பகுதிகளில் இருந்து, இந்த அமைப்பு 30,000-க்கும் மேற்பட்ட ஊரகப் பகுதிகளுக்கு விரிவடைந்து. 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை பள்ளிகளில் சேர்க்க உதவியுள்ளது.
அவர்களின் முறை எளிமையானது. ஆனால், சக்திவாய்ந்தது: இளம் பெண்கள் மற்றும் ஆண்களை உள்ளூர் தலைவர்களாகப் பயிற்சி அளித்து, அவர்கள் வீடு வீடாகச் சென்று, மகள்கள் வகுப்பறைகளில் இருக்க வேண்டும் என்று குடும்பங்களை நம்ப வைக்கிறார்கள். சஃபீனாவின் பணி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் WISE Prize for Education விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. விடாமுயற்சி, தரவுகள் மற்றும் சமுதாய கூட்டாண்மை ஒன்றிணையும் போது என்ன நடக்கும் என்பதை அவரது தலைமைத்துவம் காட்டுகிறது. முன்பு கண்ணுக்குத் தெரியாத பெண் குழந்தைகள் இப்போது படிக்கிறார்கள், எழுதுகிறார்கள், மற்றும் தங்கள் தாய்மார்கள் கனவில் கூட நினைத்திராத எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்கிறார்கள்.
பெண் குழந்தைகளின் கல்விக்கான இயக்கம் சிவில் சமுதாயத்தின் பொறுப்பு மட்டுமல்ல. இந்திய அரசு தீவிர நோக்கத்தைக் காட்டியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act) ஆரம்பக் கல்வி மட்டத்தில் கிட்டத்தட்ட முழுமையான சேர்க்கையைக் கொண்டு வந்தது.
‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ (Beti Bachao, Beti Padhao) இயக்கம் மக்களின் எண்ணங்களை மாற்ற உதவியுள்ளது மற்றும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்தியாலயங்கள் ஆபத்துள்ள சிறுமிகளுக்கு வாழும் இடமாக பள்ளியை வழங்குகின்றன. மாநிலங்களும் புதிய முயற்சிகளை செய்துள்ளன: பீஹாரில் பள்ளி சிறுமிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம் பள்ளிக் கல்வியை நிறுத்தும் எண்ணிக்கையை குறைத்தது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே போன்ற முயற்சிகளை ஊக்குவித்தது.
எனவே, பெண் கல்வியின் கதை ஒன்றிணைந்த கதையாகும் - அரசாங்கம் அடித்தளம் அமைக்கிறது மற்றும் பெண்களைப் பயிற்றுவித்தல் போன்ற அமைப்புகள் கடைசி தீர்வுகளை வழங்குகின்றன. ஆனாலும், பணி முடிக்கப்படவில்லை. ஊரகப் பகுதிகள் இருக்கும் இந்தியாவில் இன்னும் கல்வியில் ஆழமான பாலின இடைவெளிகள் உள்ளன. 15 முதல் 30 வயதுக்குட்பட்ட மில்லியன் கணக்கான இளம் பெண்கள் வறுமை, ஆணாதிக்கம் அல்லது இளமைப் பருவ திருமணம் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே பள்ளியைவிட்டு வெளியேறினர்.
பெண்களுக்கு, படிப்பதற்கான இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில் இருந்து நம்பிக்கை வருகிறது. பெண்களைப் பயிற்றுவிப்போம் என்ற புதிய திட்டமான பிரகதி, இளம் பெண்கள் திறந்தவெளிப் பள்ளி முறை மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தகுதிச் சான்றுகளைப் பெறுவதற்குத் தயாராகும் முகாம்கள் மூலம் கற்றலுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இதை விரிவுபடுத்துவதற்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட துடிப்பான மாநில அளவிலான திறந்தவெளிப் பள்ளி சுற்றுச்சூழல் அமைப்புகள் தேவைப்படும். ஊக்கமளிக்கும் விதமாக, முற்போக்கான மாநில அரசுகள் இந்த முயற்சியில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளன.
மகசேசே விருது எப்போதும் ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்தும் தைரியம் கொண்ட தலைவர்களைக் கெளரவித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை அங்கீகரிப்பதன் மூலம், இந்தியாவின் முடிக்கப்படாத புரட்சியான ஊரகப் பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பணி தொண்டு அல்ல. நலன்புரி அல்ல. இந்தியா தனது எதிர்காலத்தில் செய்யக்கூடிய மிக சக்திவாய்ந்த முதலீடாகும்.
வரலாறு நம்மிடம் கேட்கும் கேள்வி எளிமையானது: இந்த புரட்சியை முடிக்கும் தன்மையை நாம் பெற்றிருந்தோமா?
எழுத்தாளர் குழு தலைவர், பெண்கள் கல்வி