அதிக வர்த்தகக் கட்டுப்பாடுகள் இருக்கும் இன்றைய காலத்தில், நாம் கவனமாக இருக்க வேண்டும். வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு கார்பன் விலை நிர்ணய விதிகளைக் கொண்டிருந்தால், வணிகங்கள் அவற்றையெல்லாம் பின்பற்றுவது மிகவும் விலை உயர்ந்ததாக மாறும்.
இந்தியாவின் ஐக்கிய இராச்சியத்துடனான (யு.கே.) சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பொற்கொள்கையாகப் புகழ்ந்தது போல், பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், இது இந்தியாவிற்கு ஏற்படவிருக்கும் சாத்தியமான பயன்களை கணிசமாக பாதிக்கக்கூடிய ஒரு உடனடி கொள்கைக் கருவியை கவனத்தில் கொள்ளவில்லை.
ஐக்கிய ராட்சியத்தின் ஐரோப்பிய ஒன்றிய கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (U.K.’s Carbon Border Adjustment Mechanism (UK-CBAM)) போன்ற கொள்கையளவில் இங்கிலாந்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை ஜனவரி 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இது எஃகு மற்றும் அலுமினியம் போன்ற குறைக்க கடினமான துறைகளுக்கான நேரடி மற்றும் மறைமுக உமிழ்வுகள் இரண்டையும் உள்ளடக்கியது.
அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மின்சாரம் உட்பட. கார்பன் எல்லை சரிசெய்தலின் நோக்கம் பின்னர் மற்ற தயாரிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கார்பன் எல்லை சரிசெய்தலின் தீங்கான தாக்கங்களுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று கோயல் குறிப்பிட்டார். இருப்பினும், எந்தவொரு வருங்கால நடவடிக்கையும் உடனடி செலவு தாக்கத்திற்கு விரும்பிய நிவாரணத்தை வழங்காது. இது இருதரப்பு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையாளப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
உதாரணமாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தில், கார்பன் எல்லை சரிசெய்தல் மற்றும் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பான பிற விதிகள் குறித்த அமெரிக்காவின் கவலைகளை நெகிழ்வுத்தன்மை மூலம் நிவர்த்திசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியில் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை தாக்கம்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, அலுமினியம் மற்றும் இரும்பு மற்றும் எஃகுக்கான ஐக்கிய ராச்சியத்தின் மிகவும் விரும்பப்படும் நாடு விகிதங்கள் 0-6% வரம்பில் இருந்தன. இந்தியா-ஐக்கிய ராச்சிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், இந்திய ஏற்றுமதிகளுக்கு இந்த வரிகள் பூஜ்ஜியமாக குறைக்கப்படும்.
முதல் பார்வையில், இது இந்தியாவுக்கு பயன் அளிக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், ஜனவரி 2027 முதல், அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகள் ஐக்கிய ராச்சியத்தின் கார்பன் விலையுடன் பொருந்த வேண்டும். அது தற்போது தோராயமாக $66/tCO₂ ஆகும். இது ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்தபட்சம் 20% முதல் 40% வரை செலவு அதிகரிப்பாக மாறும்.
ஐக்கிய ராச்சியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கார்பன் விலை நிர்ணயத்திற்கான விலக்குகளை அனுமதிக்கிறது. இதில் கார்பன் வரிகள் அல்லது உமிழ்வு வர்த்தகத் திட்டங்களின் கீழ் செலுத்தப்படும் விலைகள் அடங்கும். இந்திய தொழில்துறை நிலக்கரிக்கு கூடுதல் வரி (cess) போன்ற வரிகளை செலுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையின் கீழ் செலவுகளை ஏற்கிறது.
மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) கீழ் இப்போது வெளிப்படையான கார்பன் விலை உள்ளது என்றாலும் ஐக்கிய ராச்சியத்தின் கடன் வர்த்தக திட்ட விலக்குகளை அனுமதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடன் வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவின் திட்டமிடப்பட்ட கார்பன் விலைக்கு இடையேயான பெரிய இடைவெளி, எரிசக்தி திறன் பணியகத்தால் CO₂ டன்னுக்கு $8–10 என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய ராச்சியத்தின் கார்பன் விலை தற்போது டன்னுக்கு $66 என உள்ளது. இதனால் இந்த பெரிய இடைவெளி ஒரு முக்கிய சவாலாக உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை போலவே, யு.கே.யின் அணுகுமுறையும் யு.கே.க்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் செலுத்தும் உள்ளக கார்பன் விலையை ஒத்த ஒரு கட்டணத்தை விதிப்பதில் கவனம் செலுத்துகிறது.
ஐக்கிய ராச்சியத்தின் போட்டி நன்மையை இழப்பதாக உணரப்படும் குறிப்பிட்ட துறைகளில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் செலுத்தும் அதே விலையை விதிப்பதன் மூலம், கார்பன் விலையை ஒருதலைப்பட்சமாக நிர்ணயிப்பது, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உமிழ்வு குறைப்பு தொடர்பான பன்முக உறுதிமொழிகளை மீறுகிறது.
ஆற்றல் கலவை, தொழில்துறை கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கிடைக்கும் தன்மை மற்றும் சாத்தியத்தின் அடிப்படையில் நாடுகளுக்கு இடையே உமிழ்வுகள் மாறுபடுவதால், பொருளாதாரங்கள் முழுவதும் ஒரே கார்பன் விலை இருக்க முடியாது.
2024 அக்டோபரில் பலதரப்பு நிறுவனங்களின் கூட்டு அறிக்கை கார்பன் சந்தைகளில் அதிக ஒருங்கிணைப்பை வலியுறுத்தியது, துண்டாடப்பட்ட அமைப்புகள் விலை விளைவுகள், கசிவு மற்றும் நிகர பூஜ்ஜிய இலக்குகளை (net-zero goals) குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று எச்சரித்தது.
துண்டாடப்பட்ட சந்தைகள் இணக்க செலவுகளை மட்டுமே உயர்த்தும், சப்ளை செயின்களை பாதிக்கும், மற்றும் வளர்ச்சி மற்றும் காலநிலை இலக்குகள் இரண்டையும் தடுக்கும். உமிழ்வுகளை அளவிடும் முறைகளை ஒருங்கிணைக்க, அறிக்கையிடல் தேவைகளை நெறிப்படுத்த, மற்றும் பசுமை தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ஆதரவை உறுதிசெய்ய உலகளாவிய கார்பன் விலை நிர்ணய ஒப்பந்தம் அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) 2021-ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு $25, நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு $50 மற்றும் அதிக வருமானம் உள்ள நாடுகளுக்கு $75 என வரிசைப்படுத்தப்பட்ட விலை நிர்ணயத்துடன் ஒரு சர்வதேச கார்பன் விலை தளத்தை (International Carbon Price Floor (ICPF)) முன்மொழிந்தது.
இதன் அடிப்படையில், உலகப் பொருளாதார மன்றம், விலை நிர்ணயம் மற்றும் அறிக்கையிடலுக்கான குறைந்தபட்ச தரநிலைகளுடன் தொடங்கி, உலகளாவிய கார்பன் விலை நிர்ணயத்திற்கு ஒரு சுமுகமான மாற்றத்தை எளிதாக்க மூன்று கட்ட அணுகுமுறையை முன்மொழிந்தது.
இந்த விதிகள் பின்னர் வெவ்வேறு பிராந்தியங்களில் பயன்படுத்தப்படும் அமைப்புகளுடன் இணைக்கப்படும். அதே நேரத்தில் கார்பன் தரவு சரிபார்க்கப்படும் தம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்யும். குழப்பத்தைக் குறைத்து ஒரு உலகளாவிய அமைப்பை நோக்கி நகர, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ளதைப் போன்ற பிராந்திய கார்பன் சந்தைகளை இணைக்கவும் மன்றம் பரிந்துரைத்தது.
இந்த மாதிரி வேலை செய்யுமா என்பதை இந்திய அரசாங்கம் மதிப்பீடு செய்வதும், ஒரே எண்ணத்தை கொண்ட வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஆராய்வதும் முக்கியமாகும். அதிகரித்து வரும் கட்டண மற்றும் கட்டணமற்ற தடைகளின் காலத்தில், பிளவுபட்ட கார்பன் விலை நிர்ணயம் மிகப்பெரிய இணக்க செலவுகளாக மாறும் அபாயத்தை நாம் எதிர்கொள்ள முடியாது.
தேசிய நடவடிக்கை
உயர்ந்துவரும் பாதுகாப்புவாதத்தின் மத்தியில் குறுகிய காலத்தில் உலகளாவிய ஒருமித்த கருத்து சாத்தியமில்லை. எனவே, இந்திய தொழில்துறை தூய்மையான தொழில்நுட்பங்களை ஏற்றுமதி இணக்கமாக மட்டுமல்லாமல் செயல்திறன் மற்றும் போட்டித்திறனுக்கான கருவிகளாக பார்க்க வேண்டும். பல்வேறு மறைமுக கார்பன் வரிகளை ஒருங்கிணைந்த கார்பன் சந்தை கட்டமைப்பாக நெறிப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் ஒரு செயல்படுத்துபவராக செயல்பட வேண்டும்.
கார்பன்-தீவிர துறைகளில் பல வரிகளுக்கு பதிலாக, கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) மூலம் ஒரே வெளிப்படையான கார்பன் வரியின் கீழ் கடுமையான உமிழ்வு குறைப்பு இலக்குகளை நடைமுறைப்படுத்துவது கார்பன் விலை கண்டுபிடிப்பை மேம்படுத்தும், இணக்கம், கண்காணிப்பை எளிதாக்கும் மற்றும் நமது போட்டித்திறனை பாதுகாக்கும்.
இது எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த உலகளாவிய கார்பன் சந்தையில் சேருவதற்கு திறன் கொண்ட வலுவான கார்பன் விலை நிர்ணய அமைப்பை உருவாக்க இந்தியாவை நிலைநிறுத்தும்.
இந்த கார்பன் வரிகளிலிருந்து வரும் வருவாய் தொழிற்துறை கார்பன் நீக்கத்திற்காக மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும். நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட வரைவு காலநிலை நிதி வகைபாடு (climate finance taxonomy), சுத்தமான தொழில்நுட்ப முதலீட்டை அதிகரிக்க முதலீட்டாளர்களுக்கு உதவும் மற்றொரு முயற்சியாகும்.
பலதரப்பு விதிகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும் மற்றும் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சமத்துவத்தை பாதுகாக்கத் தவறும் உலகில், நாட்டிற்குள் அரசாங்கம் மற்றும் தொழில்துறைக்கு இடையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வாகும்.
பிராச்சி பிரியா, மும்பையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்; ஆர்.வி. அனுராதா, பார்ட்னர், கிளாரஸ் லா அசோசியேட்ஸ், புது டெல்லி.