செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஏனெனில், 1932ஆம் ஆண்டு இந்த நாளில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் மகாத்மா காந்தியைப் பிரதிநித்துவப்படுத்திய மதன் மோகன் மாளவியாவும் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் தனி தொகுதியை (separate electorate with reservations) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடாக மாற்றியது.
முக்கிய அம்சங்கள்:
1. 1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இதே வாரத்தில் தான், புனேயில் உள்ள யெராவாடா மத்திய சிறையில், மகாத்மா காந்தி பட்டியல் சாதியினருக்கு (Scheduled Castes) தனித் தொகுதிகள் வழங்குவதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதத்தின் விளைவுதான் காந்தி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு இடையிலான பூனா ஒப்பந்தமாகும்.
2. பி.ஆர். அம்பேத்கர் தலித்துகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவினார். இது சமூகத்தின் அரசியல் அதிகாரத்திற்கான முயற்சிக்கு ஊக்கம் அளித்தது. அம்பேத்கரின் அரசியல் திட்டம் தாழ்த்தப்பட்ட சாதியினர் அரசியல் அதிகாரம் பெறுவதை வலியுறுத்தியது. உங்கள் குறைகளை உங்களைப் போல வேறு யாரும் நீக்க முடியாது. அரசியல் அதிகாரம் உங்கள் கைகளில் வராவிட்டால் நீங்கள் அவற்றை நீக்க முடியாது என்று அம்பேத்கர் எழுதினார்.
3. புதிய அரசியலமைப்பிற்கான அரசியல் இயந்திரம் ஒரு சிறப்புத் தன்மையைக் கொண்டிருக்காவிட்டால், தங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்காது என்று தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் கருதுகின்றனர் என்று லண்டனில் நடந்த முதல் வட்டமேசை மாநாட்டின் முழுமையான அமர்வின்போது அம்பேத்கர் கூறினார். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகாரம் அளிக்கும் உறுதியான நடவடிக்கையின் ஒரு வடிவமாக தனி தொகுதிகளை அவர் பரிந்துரைத்தார்.
4. தனித் தொகுதி முறை இரட்டை வாக்குகள் கொண்ட அரசியல் இயந்திரமாகும் - ஒன்று பட்டியல் சாதியினர் பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது மற்றும் மற்றொன்று பட்டியல் சாதியினர் பொதுத் தேர்தலில் வாக்களிப்பது ஆகும்.
5. பொதுத் தொகுதிகள் (joint electorates) தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்து சமூகத்தின் ஒரு பகுதியாக உணர உதவக்கூடும். ஆனால், அவை அவர்களின் குறைந்த சக்திவாய்ந்த நிலையை மாற்ற உதவாது என்று அம்பேத்கர் வாதிட்டார். பொதுத் தொகுதிகள் ‘தலித் சமூகத்தின் பிரதிநிதிகளின் தேர்தலில் பெரும்பான்மையினர் செல்வாக்கு செலுத்த உதவியது. இதனால் 'பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு' (tyranny of the majority) எதிராக அவர்களின் ஒடுக்குமுறையின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களை முடக்கியது என்று அவர் நம்பினார்.
6. காந்தி, தீண்டத்தகாதவர்களின் துயரங்களுக்கு அனுதாபம் கொண்டிருந்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் தனித் தொகுதி முறையை எதிர்த்தார். தனித் தொகுதி முறைகளுக்கு அவரது எதிர்ப்பு மேம்போக்காக (ostensibly) அவை கீழ் சாதியினருக்கு மிகக் குறைவாக செய்கின்றன என்ற அவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டது. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை மட்டும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தாழ்த்தப்பட்ட சாதியினர் உலகம் முழுவதையும் ஆள்வது போல, எல்லாவற்றின் மீதும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று காந்தி கூறினார்.
7. மிக முக்கியமாக, தனித் தொகுதிகள் சமூகத்திற்குள் ஒரு பிளவை ஏற்படுத்தி ‘இந்து மதத்தை அழித்துவிடும்’ (destroy Hinduism) என்ற அச்சத்திலிருந்தும் காந்தியின் எதிர்ப்பு எழுந்தது. இது இரண்டு ராஜதந்திர காரணங்களுக்காக முக்கியமானதாக இருந்தது.
(i) முதலாவதாக, ஆங்கிலேயர் எப்படி இந்திய சமூகத்தின் உள் பிரிவினைகளை அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை காந்தி சரியாகப் புரிந்துகொண்டார். அவரின் கூற்றுப்படி, தனித் தொகுதிகள் ஆங்கிலேயரின் 'பிரித்து ஆளும் கொள்கைக்கு' (divide and rule) கொள்கைக்கு மட்டுமே உதவும்.
(ii) இரண்டாவதாக, இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான விரோதம் அதிகரித்துக்கொண்டிருந்த காலமாகவும் இருந்தது. முஸ்லிம்களைப் போலவே தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் தனித் தொகுதிகள் கிடைத்தால், அது இந்து சமூகத்தைப் பிரிப்பதன் மூலம் முக்கிய இந்துத் தலைவர்களின் அதிகாரத்தை கணிசமாக குறைத்துவிடும்.
தனித்தொகுதி மீதான கருத்து வேறுபாடுகள் (Differences over separate electorates)
1. 1931-ஆம் ஆண்டில், இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் (Second Round Table Conference (RTC)) போது, காந்தியும் அம்பேத்கரும் தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகள் குறித்து கடுமையாக கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தனர். தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிப் பேசுபவர்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை என்று காந்தி கூறினார்.
2. காந்தி இந்தியாவில் உள்ள அனைத்து தீண்டத்தகாதவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிய அம்பேத்கரின் கூற்றையும் எதிர்த்தார். மேலும், இது இந்து சமூகத்தில் பிளவை உருவாக்கும் என்று காந்தி கவலை கொண்டார். ஆனால், அம்பேத்கர் காந்தியின் அணுகுமுறை மற்றும் தீண்டாமையை நிவர்த்தி செய்வதில் காங்கிரஸின் நேர்மை குறித்து சந்தேகம் கொண்டிருந்தார். இந்து சமூகத்தின் ஒற்றுமையைவிட தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சுயமரியாதை மற்றும் அதிகாரமளிப்பை அம்பேத்கர் முன்னுரிமை கொடுத்தார்.
3. காந்தி-அம்பேத்கர் விவாதம் இரு தலைவர்களின் மாறுபட்ட தத்துவங்களை முன்னிலைப்படுத்தியது, காந்தி "ஹரிஜன்கள்" (கடவுளின் குழந்தைகள்) என்ற சொல்லைப் பயன்படுத்தினார், அதேசமயம் அம்பேத்கர் மராத்தி சொல்லான "தலித்கள்" (உடைந்த மக்கள்) என்று பயன்படுத்தினார். ஆர்.டி.சி.யில் நடந்த மோதல் எந்த தீர்மானமும் இல்லாமல் முடிந்தது.
4. காந்தியின் எதிர்ப்பு இருந்தபோதிலும், தலித் தலைவர்கள் தலித்துகளுக்கு தனி வாக்காளர் தொகுதிகளை தொடர்ந்து கோரினர். அம்பேத்கர் இதற்காக பிரிட்டிஷ் அமைச்சரவை உறுப்பினர்களை சந்திக்க லண்டனுக்கு சென்றார். இறுதியில், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்ட் 1932-ஆம் ஆண்டு கம்யூனல் விருது (மக்டொனால்டு விருது என்றும் அழைக்கப்படுகிறது) அறிவித்தார், இது முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மையினருடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கியது.
5. பூனா சிறையில் இருந்த காந்தி, போராட்டத்தைத் தொடங்கி, தீண்டத்தகாதவர்களுக்கு தனித்தொகுதி முறை ரத்து செய்யப்படும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்தப் போவதில்லை என்று கூறினார். காந்தியின் கடுமையான எதிர்ப்பின் (extreme form of coercion) காரணமாக, அம்பேத்கர் செப்டம்பர் 24, 1932 அன்று பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார். காந்தியின் சார்பாக மதன் மோகன் மாளவியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் தனித்தொகுதியை ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடாக மாற்றியது.
6. ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, காந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் மற்றும் தீண்டாமையை எதிர்ப்பதற்கான போராட்டத்தைத் தொடர தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தை (Anti-Untouchability League) நிறுவ முன்மொழிந்தார். இருப்பினும், காந்தி மற்றும் அம்பேத்கருக்கு இடையிலான பதட்டங்கள் நீடித்தன. இது சாதி மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு அவர்களின் அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறைகளை பிரதிபலித்தது.
மஹாத் சத்யாக்ரகம் மற்றும் பஹிஷ்க்ரித் ஹிதகாரிணி சபா (Mahad Satyagraha and Bahishkrit Hitkarini Sabha)
1. 1927ஆம் ஆண்டு நடைபெற்ற மகத் சத்தியாக்கிரகம், பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான தலித்துகளின் முதல் பெரிய போராட்டமாகும். இது தலித் இயக்கத்தின் ‘தொடக்க நிகழ்வாக’ (foundational event) கருதப்படுகிறது.
2. சாதி அமைப்பை நிராகரித்து, தங்கள் மனித உரிமைகளை நிலைநாட்ட சமூகம் கூட்டாகத் தங்கள் உறுதியைக் காட்டியது இதுவே முதல் முறை. மஹத் சத்தியாக்கிரகத்திற்கு முன்பு சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்திருந்தாலும், அவை பெரும்பாலும் உள்ளூர்மயமாக்கப்பட்டு அவ்வப்போது (sporadic) நடந்தன.
பஹிஷ்க்ரித் ஹிதகாரிணி சபா
3. பம்பாயின் எல்பின்ஸ்டன் கல்லூரியில் படித்த முதல் தலித் அம்பேத்கர் ஆவார். பரோடா மாநில உதவித்தொகையில் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் பின்னர் லண்டன் பொருளாதார பள்ளிக்கும் (London School of Economics) சென்றார். அதிகாரத்தைப் பெறுவதற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் கல்வியே திறவுகோல் என்று அவர் எப்போதும் நம்பினார். 1923-ஆம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட சமூகங்களிடையே கல்வியைப் பரப்புவதற்கு உதவுவதற்காக 'பஹிஷ்கிருத ஹித்காரினி சபாவைத்’ (Bahishkrit Hitkarini Sabha) தொடங்கினார்.