மதகுகளை புறக்கணிப்பதால் (neglect of sluices), ஏற்படும் சேதங்களுக்கு அதிகப்படியான மழை ஒரு சாக்குப்போக்காக இருக்க முடியாது.
இந்த பருவகாலங்களில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் பெய்த கனமழை மற்றும் வெள்ளம், தீவிர வானிலை நிர்வாகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் இந்த ஆண்டு மழையில் 27% என்ற விகிதத்தில் வெறும் இரண்டு நாட்களில் பதிவு செய்தது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில், விஜயநகரம் 46% என்ற அளவில் அதிகமாக பதிவு செய்ததுடன், சில குறிப்பிட்டப் பகுதிகள் 90% வரை பதிவாகியுள்ளன. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பெய்துவரும் அதிக மழை, பருவமழையின் தன்மை மாறி வருவதைக் காட்டுகிறது. ஆற்றுப் படுகைகளில் உள்ள நீர்த்தேக்கம் (Reservoirs) மற்றும் தடுப்பணை அமைப்புகள் (barrage systems) பருவகால நீர்வரத்தை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் மழையின் நேரமும் தீவிரமும் இப்போது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டு, ஸ்ரீசைலம் 94% மற்றும் நாகார்ஜுனா சாகர் 96% நிரம்பியதால், அதிக நீர்வரத்துக்கு இடமளிக்கவில்லை. உண்மையில், நெருக்கடியானது அதிகப்படியான மழைப்பொழிவு மட்டுமல்ல, நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே கிட்டத்தட்ட நிரம்பும்போது ஏற்படும் குறுகிய, தீவிரமான வெடிப்புகளும் அடங்கும். கடந்த ஆண்டு, 7,000 கனஅடி கொள்ளளவு கொண்ட புடமேரு ஆற்றில் (Budameru rivulet), 35,000 கனஅடி வீதம், நீரைப் பெற்று விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட துணை நதிகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் நீர்வரத்து அதிகரிப்பது எப்படி என்பதை மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காட்டுகிறது. மழையின் அளவு வெள்ளத்தின் ஒரு பகுதியை விளக்குகிறது. ஆனால், பலவீனமான உள்கட்டமைப்பு சேதத்தை மேலும் மோசமாக்குகிறது. பிரகாசம் தடுப்பணையில் (Prakasam Barrage), கடந்த ஆண்டு சேதமடைந்த ஒரு கதவானது, இந்த பருவக்காலத்தில் சீரமைக்கப்படாமல், சீராக தண்ணீர் திறப்பதில் இடையூறாக இருந்தது.
கோதாவரி நதிக்கரையை ஒட்டி, பத்ராசலம் அருகே வெள்ளக் கரைகள் மூழ்கியோ அல்லது இடிந்து விழுந்தோ, எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களில், பகுதியளவு தூர்வாரப்பட்ட வடிகால்கள், ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீர் கால்வாய்கள் மற்றும் கான்கிரீட் செய்யப்பட்ட மேற்பரப்புகள் ஆகியவை தண்ணீரை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. இருப்பினும் ஒட்டுமொத்தமாக, உள்கட்டமைப்பு இருந்தாலும் பராமரிக்கப்படுவதில்லை அல்லது தீவிரமாக மேம்படுத்தப்படவில்லை.
இரு மாநிலங்களிலும் பேரிடர் மேலாண்மை அமைப்பு (disaster management system) அனுபவமுள்ளதாக உள்ளது. இதனால், இது பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இருப்பினும், ஆபத்தைக் குறைப்பதில் பேரிடர் நிறுவனங்கள் இன்னும் தீவிரமாக இல்லை.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும், உடனடி நிவாரணத்திற்காக பெரிய தொகைகள் அனுமதிக்கப்படுகின்றன. உதாரணமாக, தெலுங்கானா சமீபத்தில் மாவட்டத்திற்கு ₹1 கோடியை குறுகிய அறிவிப்பில் வெளியிட்டது. ஆனால், வெள்ளக் கரைகளை வலுப்படுத்துவது மற்றும் மாற்று வழிகளை உருவாக்குவது ஆகியவை முடிக்கப்படாமல் உள்ளன.
2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில், ஆகஸ்ட் மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் அதிக மழை பெய்தது. இரண்டு முறையும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. இரண்டு முறையும், முழுமையடையாத புடமேரு பணிகள் மற்றும் நிவாரண நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததை சுட்டிக்காட்டி மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்தன. அதிக மழைப்பொழிவைத் தடுக்க முடியாது.
ஆனால், முன்கூட்டியே எதிர்பார்ப்பதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்க முடியும். உதாரணமாக, நீர்த்தேக்க மேலாண்மையானது, நிகழ்நேர நீரியல் மாதிரியை (real-time hydrological modelling) இணைக்க வேண்டும். இதனால், கனமழைக்கு முன் நீர் மட்டங்களைக் குறைக்க உதவும், வெள்ளத்தை உறிஞ்சுவதற்கு இடத்தை உருவாக்கும்.
நகர்ப்புற திட்டமிடல் வடிகால் வலையமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் "ஒப்பனையாக மண் அள்ளும் முயற்சிகளை" (cosmetic desilting drives) மட்டும் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, நீர் உறிஞ்சுதலுக்காக ஊடுருவக்கூடிய நிலத்தையும் ஒதுக்க வேண்டும்.
வெள்ளக் கரைகள் மற்றும் மதகுகளுக்கு பராமரிப்பு தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும். அவற்றின் பராமரிப்பு, மற்றும் அரசியல் சுழற்சிகளிலிருந்து தனித்தனியாக வைக்கப்பட வேண்டும். அசாதாரண மழையானது வலுவான அமைப்புகளைக் கூட மூழ்கடிக்கும் என்று இரு மாநிலங்களும் கூறுவது சரிதான். ஆனால், தேவையான சீர்திருத்தத்தைத் தவிர்க்க இதை ஒரு காரணமாகப் பயன்படுத்தினால் இரண்டுமே அபாயகரமான அபாயத்தை ஏற்படுத்தும்.