இந்தியாவின் மக்கள்தொகை மாற்றம் ஒரு தேர்வை முன்வைக்கிறது: வயதானதை நிர்வகிக்க வேண்டிய சவாலாகப் பார்ப்பதா அல்லது நீண்டகாலமாக நமது பலமாக இருந்த தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதா என்பது தான்.
'தலைமுறை இடைவெளி' (generation gap) என்ற சொல் பெரும்பாலும் வயதுக் குழுக்களிடையே ஒரு பெரிய இடைவெளியைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஆனால், இந்தியாவில், வலுவான குடும்ப விழுமியங்களும் மரபுகளும் தலைமுறைகளை இணைக்க உதவியுள்ளன. இருப்பினும், இன்று நாடு மக்கள்தொகை ரீதியாக ஒரு மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், இந்த இணைப்புகள் மாற்றத்தின் அழுத்தங்களையும் டிஜிட்டல் ஏற்றத்தையும் தாங்குமா அல்லது மாறிவரும் தேவைகள் மற்றும் உண்மைகளின் கீழ் செயலிழந்து போகுமா என்று ஒருவர் கேட்க வேண்டும்.
இந்தியாவின் மக்கள்தொகை எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. இன்று, 10%-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மேலும், 2050-ஆம் ஆண்டில், இது 20%-ஆக உயரக்கூடும் - ஒவ்வொரு ஐந்து நபர்களில் ஒருவர் வயதானவர்களாக மாறுவர். இது எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, நாம் யார், குடும்பங்களாய் எவ்வாறு வாழ்கிறோம், ஒருவருக்கொருவர் எவ்வாறு ஆதரிக்கிறோம், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இருவருக்கும் அன்றாட வாழ்க்கை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
உணர்ச்சி ரீதியான பாதிப்பு
'வயதானதைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்தல்' (Understanding Intergenerational Dynamics & Perceptions on Ageing) என்ற தலைப்பில் ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய சமீபத்திய ஆய்வு, ஒரு முரண்பாடான எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தக் கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் 10 நகரங்களில் இருந்து 5,700-க்கும் மேற்பட்ட பதிலளித்தவர்களை (18-30 வயதுக்குட்பட்ட 70% இளைஞர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 30%) உள்ளடக்கியது.
இளம் இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் மூத்த குடிமக்களை ஞானிகளாக 51% பேர் கூறுகிறார்கள். மரியாதைக்கு தகுதியானவர்களாகவும் 43% பேர் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், பலர் அவர்களை தனிமையாகவும் 56% பேர் மற்றும் சார்புடையவர்களாகவும் 48% பேர் விவரிக்கிறார்கள். இளைஞர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதற்கும் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதற்கும் இடையே தெளிவான இடைவெளியை இது காட்டுகிறது - எங்களுக்கு திட்டம் சொல்லப்படுகிறது, இருப்பினும் எங்களது கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை என்று பல வயதானவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
இது ஒரு உணர்ச்சி இடைவெளிக்கு வழிவகுக்கிறது. இதை எண்கள் ஓரளவு மட்டுமே விளக்குகின்றன. பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வயதானவர்கள் 54% பேர் வயதானதைப் பற்றிய எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத உணர்வில் வேரூன்றியுள்ளது. தொழில்நுட்பம், ஒரு பாலமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, மற்றொரு போர்க்களமாக மாறுகிறது.
குழந்தைகள் இனி உட்கார்ந்து பேசப்போவதில்லை. அவர்கள் எப்போதும் தங்கள் தொலைபேசிகளில் இருக்கிறார்கள் என்பது பெரியவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தும் மற்றொரு உணர்வாகும். 78% இளைஞர்கள் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதில் வயதானவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று நினைத்தாலும், 71% வயதானவர்கள் இளைஞர்கள் பொறுமையிழந்து, அவர்களுக்குப் போதுமான உதவி செய்யாததால் சிரமப்படுவதாகக் கூறுகிறார்கள்.
இணைப்புகளை உருவாக்குதல்
சில மோதல்கள் இருந்தபோதிலும், வயதானவர்களும் இளையவர்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். வயதானவர்களில் 49% பேர் மற்றும் பெரும்பாலான இளைஞர்களில் 57% பேர் முன்னேற்றம் நிச்சயமாக ஏற்படும் என்று நினைக்கிறார்கள்.
தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதும், திறந்த, மரியாதைக்குரிய பேச்சுக்களை நடத்துவதும் ஒன்றாக இணைந்து செயல்படுவதறகான சிறந்த வழிகள் என்று அவர்கள் (84% பெரியவர்கள், 86% இளைஞர்கள்) ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நுண்ணறிவு பகிரப்பட்ட உணவுகள், சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்களின் பாரம்பரிய இந்திய நெறிமுறையுடன் எதிரொலிக்கிறது. உண்மையில், இந்த தருணங்களில்தான் சொந்தம் என்பது உருவாகிறது, தனிமை தடுக்கப்படுகிறது.
வயது தொடர்பான கவலைகள், தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது. தனிமை மிகப்பெரியதாக உள்ளது. இதை 69% இளைஞர்களும் 68% வயதானவர்களும் மேற்கோள் காட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து உடல்நலம் மற்றும் நிதி பாதுகாப்பின்மை பற்றிய கவலைகள் உள்ளன. குடும்பத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையின் இலட்சியம் வலுவாக உள்ளது, 10 இளைஞர்களில் 9 பேர் (88%) வயதான காலத்தில் குடும்பத்துடன் வாழ விரும்புகிறார்கள்.
இது அவர்களின் பெரியவர்களின் தேவைகளை பிரதிபலிக்கிறது - அவர்களில் 83% பேர் தற்போது குடும்பத்துடன் வாழ்கிறார்கள் அல்லது வாழத் திட்டமிடுகிறார்கள். நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு அவர்களின் மீள்தன்மையை சோதிக்கும் போதும், இத்தகைய ஒருங்கிணைப்பு தலைமுறைகளுக்கு இடையேயான குடும்பங்களின் தொடர்ச்சியான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த பிணைப்புகள் ஏன் முக்கியம்? உணர்ச்சிபூர்வமான ஆதரவைவிட, பல நவீன சமூகங்களில் காணப்படும் தனிமையிலிருந்து பாதுகாக்க குடும்பம் உதவுகிறது. தனிமையே மிகப்பெரிய பிரச்சனை என்று கூறும் 47% வயதானவர்களுக்கு, குடும்பம் அவர்களுக்கு ஆறுதலையும் நிலைத்தன்மையையும் தருகிறது. இந்த ஆதரவு இரு வழிகளிலும் செல்கிறது - பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்கு ஞானத்தையும் உதவியையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதே, நேரத்தில் இளைஞர்கள் நவீன வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள வயதானவர்களுக்கு உதவுகிறார்கள். பொறுமையுடன் அணுகும்போது, தொழில்நுட்பமே ஒரு உதவியாக மாறும். கோவிட்-19 தொற்றுநோய் போன்ற கடினமான காலங்களில், குடும்ப ஒற்றுமை மிகவும் முக்கியமானதாக மாறியது. முறையான பராமரிப்பு முறைகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்தது.
செயலுக்கான நோக்கம்
இருப்பினும், நல்ல நோக்கங்களை நிலையான செயலாக மாற்றுவதற்கு நினைவேக்கங்களைவிட (nostalgia) அதிகம் தேவைப்படுகிறது. உதாரணமாக, டிஜிட்டல் உள்ளடக்கம் (Digital inclusion), என்பது அணுகலை வழங்குவதைவிட அதிகம் தேவைப்படுகிறது; அதற்கு பொறுமை மற்றும் வயதானவர்களின் தேவைகளுக்கு ஏற்ற கற்றலும் தேவைப்படுகிறது. பெரும்பாலான இளம் இந்தியர்கள் (75%) வயதானவர்களுக்கு உதவ விரும்புகிறார்கள்.
ஆனால், அவர்கள் பயனுள்ள வகையில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. குடும்பத்தைவிட அதிகமாக ஆதரிக்கும் சமூகங்கள் முக்கியம். குறிப்பாக வீடு என்ற யோசனை மாறும்போது இது உடனடியாக தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இன்னும் குடும்ப பராமரிப்பை விரும்புகிறார்கள் என்றாலும், 30% இளைஞர்கள் பராமரிப்பு இல்லங்களை ஒரு விருப்பமாகப் பார்க்கிறார்கள், 19% வயதானவர்ககள் மட்டுமே உள்ளனர்.
இது துண்டு துண்டாக இல்லாமல், இணைப்புகளை வளர்க்கும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளிகளின் தேவையை இது குறிக்கிறது.
கல்வியும் ஒரு பங்கை வகிக்கிறது. வாழ்நாள் முழுவதும் வயதானது பற்றி அனுதாபம், அக்கறை மற்றும் எழுத்தறிவைக் கட்டியெழுப்புவது வயது சார்ந்த அணுகுமுறைகளை எதிர்கொள்ளவும் வரவிருக்கும் மாற்றத்திற்கு சமூகத்தை தயார்படுத்தவும் உதவும். கொள்கை கட்டமைப்புகள் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், புதிய பராமரிப்பு மாதிரிகளைப் புதுமைப்படுத்தி, அவற்றை மாற்றியமைக்க வேண்டும்.
இந்தியாவின் மக்கள்தொகை மாற்றம்: வயதானதை நிர்வகிக்க வேண்டிய சவாலாகப் பார்ப்பதா அல்லது நீண்டகாலமாக நமது பலமாக இருந்த தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகப் பார்ப்பதா என்ற ஒரு தேர்வை முன்வைக்கிறது. சான்று, ஆபத்து மற்றும் வாக்குறுதி இரண்டையும் பரிந்துரைக்கின்றன. தனிநபர்களாகவோ, சமூகங்களாகவோ அல்லது தலைவர்களாகவோ இருந்தாலும், தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக வைத்திருப்பதும், எதிர்காலத்திற்கு அவற்றை இன்னும் சிறப்பாக்குவதும் நமது பொறுப்பாகும்.
கிரண் கார்னிக், ஹெல்ப் ஏஜ் இந்தியா தலைவர்; ரோஹித் பிரசாத், தலைமை நிர்வாக அதிகாரி, ஹெல்ப் ஏஜ் இந்தியா