1937 மற்றும் ஜனவரி 26, 1950 க்கு இடையில் அதன் தற்போதைய பெயரைப் பெறுவதற்கு முன்பு, இது ஒன்றிய பொது சேவை ஆணையம் (FPSC) என்று அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, இது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரிகளை நியமிக்கும் மிக உயர்ந்த நிறுவனமாகும்.
ஜனவரி 26, 1950 இல் இந்தியாவில் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, புதிய ஜனநாயக தேசத்தின் அடித்தளத்தை செயல்படுத்தும் சில அமைப்புகளும் நடைமுறைக்கு வந்தன. புதுதில்லியின் ஷாஜஹான் சாலையில் உள்ள தோல்பூர் இல்லத்தில் அமைந்துள்ள ஒன்றிய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அத்தகைய ஒரு நிறுவனம் ஆகும்.
அக்டோபர் 1, 1926 அன்று, இந்திய அரசு சட்டம்-1919-ன் கீழ், UPSC நிறுவப்பட்ட நேரத்தில், பொது சேவை ஆணையம் (Public Service Commission) என்று அறியப்பட்டது. அதன் தற்போதைய பெயருக்கு முன், 1937 மற்றும் ஜனவரி 26, 1950-க்கு இடையில், இது கூட்டாட்சி குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (Federal Public Service Commission (FPSC)) என்று அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, இந்திய அரசாங்கத்திற்கான அதிகாரிகளை மிக உயர்ந்த நிலையில் பணிக்கு அமர்த்தும் UPSC, 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
UPSC ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். இது அரசியலமைப்புப் பிரிவு 320-ன் ஒரு பகுதியாக, இது பொது சேவை ஆணையங்களின் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது. இதன்கீழ், "அமைப்பானது மத்திய மற்றும் மாநில சேவைகளுக்கான நியமனங்களுக்கான தேர்வுகளை நடத்துவது" என்பதைக் குறிப்பிடுகிறது.
இன்று, UPSC முக்கியமாக எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை நடத்துகிறது. எழுத்துத் தேர்வுகள் பொதுவாக இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. அவை, முதல்நிலைத் தேர்வுகள் (prelims) மற்றும் முதன்மைத் தேர்வுகள் (mains) ஆகும். நேர்காணல்கள் ஆனது ஆளுமைத் தேர்வுகள் என்று அழைக்கப்படுகின்றன. அதன் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2022-23-ஆம் ஆண்டில், UPSC 15 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தியது. இதில், பதினொன்று சிவில் சேவைகளுக்கானவை, நான்கு பாதுகாப்பு சேவைகளுக்கானவை.
UPSC-ன் தோற்றம் 1600களில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்ததிலிருந்து செல்கிறது. அந்த நேரத்தில், நிறுவனம் ஒரு "பாரம்பரிய வர்த்தக நிறுவனமாக" இருந்தது. இதில் ஊழியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இளைய மற்றும் மூத்த வணிகர்கள் இதில் முற்றிலும் வணிக ஊழியர்களாக இருந்தனர். அவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் ஊதியம் பெற்றனர். இந்த முறை பல பத்தாண்டுகளாக தொடர்ந்தது. 18-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், குறிப்பாக 1757-ல் பிளாசி போரிலும், 1764-ல் பக்சர் போரிலும் நிறுவனத்தின் வெற்றிகளுக்குப் பிறகு, இந்தியாவை ஆள்வதற்கான புதிய நிர்வாகத்தை மேற்கொள்ள உணர்ந்தன.
இந்த நேரத்தில், கவர்னர் ஜெனரல்கள் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1773 முதல் 1785 வரை), வெல்லஸ்லி பிரபு (1798 முதல் 1805 வரை) மற்றும் கார்ன்வாலிஸ் பிரபு (1786 முதல் 1793 வரை) பிரிட்டிஷ் இந்தியாவில் அதிகாரத்துவத்தை மறுவடிவமைத்தனர்.
1858 காலகட்டத்தில், நிறுவனம் மற்றும் அதன் அரசு ஊழியர்களின் தன்மை மாறியது. இந்தியா போன்ற பணக்கார பேரரசை திறமையாக நிர்வகிக்க, அதிகாரத்துவத்தை நியமிக்க வேண்டிய அவசியத்தை நிறுவனம் உணரத் தொடங்கியது. இதற்கு முன், அதன் நிர்வாக செயல்பாட்டின் அடிப்படையில் முகலாய காலத்தின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், நிறுவனம் அதன் நிர்வாக செயல்பாடுகளை காலப்போக்கில் செம்மைப்படுத்தியது.
1854-ன் மெக்காலே குழுவானது (Macaulay Committee) நவீனகால அதிகாரத்துவம் நோக்கிய ஒரு முக்கியப் படியாக இருந்தது. 1855-ல், பிரிட்டனில் ஒரு குடிமைப் பணி ஆணையம் (Civil Service Commission) நடைமுறைக்கு வந்தது. பின்னர் 1858 காலகட்டத்தில், அதன் அதிகார வரம்பு இந்திய குடிமைப் பணிக்கு (Indian Civil Service (ICS)) நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஆணையத்துக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது எழுத்துத் தேர்வு மற்றும் தேவைப்பட்டால், ஒரு நேர்காணல் மூலம் இருந்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு (1914-1918), ஆட்சேர்ப்பை நிர்வகிக்க ஒரு பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Board (SSB)) உருவாக்கப்பட்டது.
இருப்பினும், 1922 வரை இந்தியர்கள் ஆணையத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1924-ல், லீ ஆணையமானது (Lee Commission) இந்தியாவில் ஒரு பொது சேவை ஆணையத்தை (Public Service Commission) அமைக்க பரிந்துரைத்தது. 1926 முதல், பணியாளர் தேர்வு வாரியம் (SSB) இந்த புதிய பொது சேவை ஆணையத்திடம் ஆட்சேர்ப்புப் பொறுப்புகளை ஒப்படைத்தது. சர் ரோஸ் பார்க்கர் 1932 வரை அதன் தலைவராகப் பணியாற்றினார்.
இந்திய அரசுச் சட்டம், 1935, கூட்டமைப்புக்கும் ஒவ்வொரு மாகாணம் அல்லது மாகாணங்களின் குழுவிற்கும் ஒரு ஆணையத்தை முன்மொழிந்தது. ஏப்ரல் 1, 1937 இல், ஒன்றிய பொது சேவை ஆணையம் (FPSC) நிறுவப்பட்டது. சர் டேவிட் பெட்ரிக்குப் பதிலாக சர் ஐர் கார்டன் அதன் தலைவராக ஆனார். இந்த நேரத்தில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு பத்தாண்டுகாலம் மட்டுமே இருந்தது. இதற்கிடையில், அரசியலமைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்தியாவில் அரசு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒரு சுதந்திரமான தனிப்பட்ட முறையில் அமைப்புக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்தன.
ஆகஸ்ட் 15, 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஒன்றிய பொது சேவை ஆணையம் (FPSC) அதன் முதல் இந்தியத் தலைவர் எச்.கே.கிருபாலானி தலைமையில் இருந்தது. அவருக்குப் பிறகு, ஆர்.என்.பானர்ஜி 1949 முதல் 1955 வரை ஆணையத்திற்குத் தலைமை தாங்கினார். அவரது பதவிக் காலத்தில், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த நேரத்தில் இரண்டு பெயர் மாற்றங்களும் நடந்தன. அதாவது, FPSC என்பது UPSC ஆனது, மேலும் ICS என்பது இந்திய நிர்வாக சேவை (IAS) என மறுபெயரிடப்பட்டது.
UPSC-ன் மிகவும் மதிப்புமிக்க தேர்வு குடிமைப் பணித் தேர்வு (Civil Service Exam (CSE)) ஆகும். ஐஏஎஸ், இந்தியக் காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகிய மூன்று அகில இந்தியச் சேவைகளுக்கும், மத்திய குடிமைப் பணிகள் எனப்படும் பல சேவைகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதற்கட்டத் தேர்வுக்கு சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் (C-SAT) கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். 2022-23-ஆம் ஆண்டில், UPSC 33.51 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்று செயலாக்கியது. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தபோதிலும், UPSC தேர்வுகளுக்கான கட்டணம் பல மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களுடன் (state Public Service Commissions) ஒப்பிடும்போது மிகக் குறைவு.
UPSC இன் தலைமையகம் தோல்பூர் இல்லத்தில் 1952-ம் ஆண்டிலிருந்து உள்ளது. இந்தக் கட்டிடம் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது முதலில் தோல்பூர் ராஜா உதய் பான் சிங்கிற்கு சொந்தமானது. சுதந்திரத்திற்குப் பிறகு, ராஜா தனது மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைத்து, கட்டிடத்தை அரசாங்கத்திற்கு மாற்றினார். பின்னர் அவர் மத்ஸ்ய ஒன்றியத்தின் ஆளுநரைப் போலவே ராஜ்பிரமுக்காக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு சில சுதேச அரசுகளை இணைத்து இந்த மாநிலம் உருவாக்கப்பட்டது. தோல்பூர் ஹவுஸ் UPSC தலைமையகமாக தொடர்ந்து செயல்படுகிறது.
பல ஆண்டுகளாக, UPSC பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்தச் சட்டத்தை எதிர்த்த போதிலும், தகவல் அறியும் உரிமையின் (Right to Information (RTI)) மூலம் கேள்விகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதன் தேர்வு செய்யும் முறைகள் தொடர்பான பல விவரங்களையும் இந்த ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது. அவை தொடர்பாக,
1966-ம் ஆண்டின் முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் (மொரார்ஜி தேசாய் தலைமையில், பின்னர் கே. ஹனுமந்தையா தலைமையில்)
1967-ம் ஆண்டின் தோரட் குழு (லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பி. பி. தோரட் தலைமையில்)
1976-ம் ஆண்டின் கோத்தாரி குழு (தௌலத் சிங் கோத்தாரி தலைமையில்)
1989 மற்றும் 1990-ஆம் ஆண்டின் சதீஷ் சந்திரா குழுக்கள்
2001-ம் ஆண்டின் அலக் குழு (ஒய். கே. அலக் தலைமையில்)
2004-ம் ஆண்டின் பி. சி. ஹோட்டா குழு
2012-ம் ஆண்டின் அருண் நிகவேகர் குழு
நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய மற்றும் மாநில அளவிலான சேவை ஆணையங்கள் இரண்டும் தங்கள் நம்பகத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றன, குறிப்பாக 2024-ல் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட பூஜா கெத்கர் போன்ற வேட்பாளர்களின் முறைகேடுகளைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
எழுத்தாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூத்த இணை ஆசிரியர் ஆவார்.