தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு என்பது இராஜதந்திரத்திற்கும் மேல் -வாணி ராவ், எலிசபெத் ஃபாரே

 தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) என்பது மிகவும் சமமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான பாதையாகும்.


2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development) அடைய மூன்றில் ஒரு பங்கு நேரம் மட்டுமே மீதமுள்ள நிலையில், அவசரம் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதில் இது காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 அன்று தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) தினமாகக் கொண்டாடுகிறது. 


வளரும் நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப உதவியைத் தொடங்கிய 1978ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டத்தை (Buenos Aires Plan of Action (BAPA)) இந்த நாள் நினைவுகூர்கிறது. பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டம் என்பது உதவிக்கான திட்டத்தைவிட அதிகமானதாகும்; இது நட்பு, மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது போன்ற கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த யோசனைகள் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் அடித்தளமாக மாறியுள்ளன. மேலும், உலகம் மாறிவரும் நிலையில், ஒன்றாக வேலை செய்வதற்கான புதிய வழிகள் தேவைப்படுவதால் இப்போது இது இன்னும் முக்கியமானது.


புவிசார் மோதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்துவரும் சமத்துவமின்மையை எதிர்கொண்டுள்ள நிலையில், வழக்கமான உதவிக்கு தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு முக்கியமானதாக மாறியுள்ளது. இது செலவு குறைந்ததாகவும், நகலெடுக்க எளிதாகவும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றதாகவும் உள்ளது. மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதி குறைந்து வருவதால் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.


இந்தியாவின் பங்கு மற்றும் தத்துவம்


இந்தியாவின் வளர்ச்சி, உலகம் ஒரு பெரிய குடும்பம் என்ற "உலகம் ஒரே குடும்பகம் (Vasudhaiva Kutumbakam) என்ற கருத்தைக் காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு வலைகளில் ஒன்றைக் கொண்ட நாடாகவும், உணவு உபரி பொருளாதாரத்திற்கு மாறிய நாடாகவும், இறையாண்மை, உள்ளடக்கம் மற்றும் பரஸ்பர மரியாதைக்கான முன்னணிக் குரலாக SSTC-யை ஆதரிக்கும் தனித்துவமான நிலையில் இந்தியா உள்ளது.


இந்தியாவின் பங்களிப்புகள் பரந்த அளவில் உள்ளன: உலகளாவிய தெற்கு உலக தெற்கின் குரல் மாநாட்டை(Voice of the Global South Summit) நடத்துதல்; ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான அதன் G-20 தலைமையின் போது முயற்சிகளை வழிநடத்துதல்; வெளியுறவு அமைச்சகத்தில் மேம்பாட்டு கூட்டாண்மை நிர்வாகத்தை நிறுவுதல்; மற்றும் 160-க்கும் மேற்பட்ட நாடுகள் திறன்களை வளர்க்க உதவும் ஒரு திட்டத்தை நடத்துதல் போன்ற பல முக்கியப் பங்களிப்புகளை இந்தியா செய்துள்ளது. 


இந்தியா-ஐ.நா.மேம்பாட்டு கூட்டாண்மை நிதியை இந்தியா அறிமுகப்படுத்தியது. ஆதார் மற்றும்  ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்ற அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மாதிரிகளை உலகளவில் ஊக்குவித்தது. மேலும், பல பன்முக தளங்கள் மூலம் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.


இந்தியா புதுமைக்கான மையமாக உள்ளது, டிஜிட்டல் மாற்றம், காலநிலை மீள்தன்மை, சுகாதாரம் மற்றும் நிலையான நிதியுதவி ஆகியவற்றிற்கு மலிவு விலையில், உள்ளூரில் பொருத்தமான தீர்வுகளை உருவாக்குகிறது.


இந்தச் சூழலில், ஐ.நா. நிறுவனமான உலக உணவுத் திட்டத்துடனான (World Food Programme (WFP)) இந்தியாவின் உற்பத்தித் திறன் கூட்டாண்மை, பொது முதலீட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கி இந்தியா முழுவதும் சிறந்த நடைமுறைகளை அளவிடும் புதுமைகள் மற்றும் தீர்வுகளின் கூட்டு வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, டிஜிட்டல் கருவிகள், சிறந்த உணவு விநியோகம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாளக்கூடிய விவசாய முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலகளவில் பயனுள்ள உலக உணவுத் திட்டங்களை இந்தியா சோதித்துப் பார்த்தது. 


அன்னபூர்த்தி அல்லது தானிய தானியங்கி இயந்திரம் (Automated Teller Machine (ATM)), உணவு பொது விநியோக முறைக்குள் தேசிய விநியோகச் சங்கிலியை மேம்படுத்துதல், பெண்கள் தலைமையிலான வீட்டிற்கு எடுத்துச் செல்லும் குடிமைப் பொருட்கள் திட்டம் (Take-Home Ration programme) மற்றும் தேசிய அரிசி செறிவூட்டல் திட்டம் (national rice fortification project) போன்ற குறிப்பிடத்தக்க இந்திய கண்டுபிடிப்புகளை முன்னோட்டமாக செயல்படுத்த இந்தியாவும் WFP-யும் இணைந்து செயல்பட்டன. இந்தத் திட்டங்கள் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவின. மாற்ற வளரும் நாடுகளுக்கும் பிரதிபலிக்கக்கூடிய மாதிரிகளை வழங்குகின்றன.


கூட்டாண்மைகளை மறுவரையறை செய்தல்


இன்றைய சவால்களின் சிக்கலான தன்மை பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மைகளைக் கோருகிறது. முக்கோண ஒத்துழைப்பு வளரும் நாடுகளையும் நன்கொடையாளர்களையும் ஒன்றிணைத்து நல்ல யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், வளங்களைக் கண்டறியவும், நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது. 


கூட்டாண்மைகளில் அரசாங்கங்கள் மட்டுமல்ல, சமூகக் குழுக்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் மக்களும் அடங்கும். இந்த வழியில் ஒன்றாகச் செயல்படுவது மக்களின் தேவைகளை மையமாகக் (people-centred development models) கொண்ட சிறந்த, நீடித்த தீர்வுகளை உருவாக்குகிறது.


தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) செலவுகளைக் கவனமாகக் கையாளுவதாலும், இதே போன்ற சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், செலவழிக்கப்பட்ட பணத்திற்கு சிறந்த பலன்களைத் தருகிறது. மக்களுக்கு உதவுவதற்கும் மேம்பாட்டிற்கும் நிதி குறைந்து வருவதால் இது மிகவும் முக்கியமானது.


கடந்த 30-ஆண்டுகளாக, 47 அரசாங்கங்கள் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. நிதிக்கு பங்களித்துள்ளன. அவை 70-க்கும் மேற்பட்ட நாடுகளை அடைந்து 155 நாடுகளில் உள்ள மக்களுக்கு பயனளித்த முயற்சிகளை ஆதரித்தன. 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, இந்தியா-ஐ.நா. மேம்பாட்டு கூட்டாண்மை நிதியம் 56 வளரும் நாடுகளில், குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவு வளரும் நாடுகளில் 75-க்கும் மேற்பட்ட உருமாறும், தேவை சார்ந்த திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது.


2024ஆம் ஆண்டில், நிலையான வளர்ச்சி இலக்கு 2: பூஜ்ஜிய பசியுடன் இணைந்த தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு திட்டங்களை ஆதரிப்பதற்காக, உலக உணவுத் திட்டத்துடன் (World Food Programme (WFP)) உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் தனியார் துறையிலிருந்து $10.9 மில்லியனுக்கும் அதிகமான நிதியைத் திரட்டியது. 


ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நேபாளத்தில் அரிசி வலுவூட்டல் மற்றும் உணவு விநியோகத்தை மேம்படுத்துதல் போன்ற சமீபத்திய இந்தியா-WFP திட்டங்கள் மற்றும் லாவோஸில் ஐ.நா. இந்தியா மேம்பாட்டு நிதித் திட்டம், திட்டங்களை உண்மையான உதவியாக மாற்றுவதற்கான வலுவான பகிரப்பட்ட வாக்குறுதியைக் காட்டுகின்றன.


தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான 2025 ஐ.நா. தினத்திற்கான கருப்பொருள் - ‘தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு’ மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுமை’ என்று நாம் எதிர்கொள்ளும் சவாலைக் காட்டுகிறது. உண்மையான முன்னேற்றத்தை அடைய, நமக்கு வலுவான அமைப்புகள், போதுமான பணம் மற்றும் புதிய யோசனைகளை முயற்சிக்க தைரியம் தேவைப்படுகிறது. 


அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், நிதிக்கான அணுகலை மேம்படுத்தவும், கற்றுக்கொள்வதையும் பொறுப்புடன் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் மீள்தன்மை ஆகியவற்றில் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா தனது தலைமையை உறுதிப்படுத்துகிறது.


கூட்டாண்மையின் புதிய உணர்வு


ஒவ்வொரு நாட்டின் பங்கையும் மதிக்கும், நியாயத்தை ஊக்குவிக்கும் மற்றும் புதிய யோசனைகளை ஊக்குவிக்கும் புதிய கூட்டாண்மைகள் உலகிற்குத் தேவைப்படுகிறது. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) என்பது வெறும் சொல் அல்ல - இது உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், பில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுவதற்கும், அனைவருக்கும் நியாயமான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒரு வழியாகும்.


வாணி ராவ் இத்தாலிக்கான இந்திய தூதராக உள்ளார். எலிசபெத் ஃபாரே, இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் நாட்டு இயக்குநர்.



Original article:

Share: