ஆபரேஷன் போலோ தொடங்கப்பட்ட பின்னணி என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


செப்டம்பர் 13, ஹைதராபாத்தை கைப்பற்ற புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் போலோவின் 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. மேஜர் ஜெனரல் ஜெயந்தோ நாத் சவுத்ரி தலைமையில், இந்த நடவடிக்கை நான்கு நாட்களுக்கும் குறைவாகவே நீடித்தது. மேலும், இந்தியாவுடன் சேர மறுத்த நிஜாம் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


  • ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும் ஹைதராபாத் சுதந்திரமாக இருக்க விரும்பியது இந்திய அரசாங்கத்தை கவலையடையச் செய்தது. ஹைதராபாத் தனியாக இருந்தால், அது வட இந்தியாவை தென்னிந்தியாவிலிருந்து பிரிக்கக்கூடும். "இந்தியாவின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள முஸ்லிம் பகுதிகள் வெட்டப்பட்டால் இந்தியா உயிர் வாழலாம், ஆனால் அதன் மையப் பகுதி இல்லாமல் உயிர் வாழ முடியுமா?" என்று அரசியலமைப்பு நிபுணர் ரெஜினால்ட் கூப்லாண்ட் கூறியதை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மேற்கோள் காட்டினார்.


  • சர்தார் வல்லபாய் படேல் நிலைமையை இன்னும் வலுவாக விவரித்தார், ஒரு சுதந்திர ஹைதராபாத் "இந்தியாவின் வயிற்றில் ஒரு புற்றுநோய்" (“cancer in the belly of India”) போல இருக்கும் என்று கூறினார்.


  • இந்தியாவின் 500 சுதேச அரசுகளில், ஹைதராபாத் மிகப்பெரிய ஒன்றாகும். இது 80,000 சதுர மைல்களுக்கு மேல் பரப்பளவில் இருந்தது. மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி பேசும் சுமார் 16 மில்லியன் மக்களைக் கொண்டிருந்தது. பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தனர். ஆனால், நிஜாம் என்று அழைக்கப்படும் ஆட்சியாளர் முஸ்லிம்கள் ஆவார்.


  • 1947-ஆம் ஆண்டில், ஹைதராபாத்தை ஏழாவது நிஜாம், மிர் உஸ்மான் அலி ஆட்சி செய்தார். அவர் 1911-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்தார். அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராகவும், ஒரு முக்கிய முஸ்லிம் தலைவராகவும் இருந்தார்.


  • முதலாம் உலகப் போரின் போது நிஜாம் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். மேலும்,  அவர் "உயர்ந்த மேன்மை" (Exalted Highness,”) என்ற பட்டத்தால் கௌரவிக்கப்பட்டார். இதனால் இந்த சிறப்பு பெற்ற ஒரே சுதேச ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.


  • சுதந்திரம் வெகு தொலைவில் உள்ள நிலையில், நிஜாம் தனது தனிப்பட்ட செல்வத்தைவிட அதிகமாக வைத்திருக்க முடிவு செய்திருந்தார். அவர் தனது மாநிலத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று விரும்பினார், மேலும் ஆங்கிலேய அரசுடன் நேரடி உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் எதிர்பார்த்தார்.

  • படேல் நிலைமையை கவனமாக அணுகினார். நவம்பர் 1947-ல், இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆங்கிலேயர்களின் கீழ் இருந்ததைப் போலவே தங்கள் உறவுகள் தொடரும் என்று ஒப்புக்கொண்டனர்.


  • இந்தியாவும் ஹைதராபாத்தும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், நிஜாமுக்கு எதிராக மாநிலத்திற்குள் அமைதியின்மை அதிகரித்து வந்தது. அவரது ஆட்சியின்கீழ், விவசாய முறை சுரண்டலாகவும், சில சமூகங்களுக்கு சாதகமாகவும் இருந்தது. 1920-ஆம் ஆண்டுகளில் இருந்து ஒரு எதிர்ப்பு இயக்கம் வளர்ந்து 1946-ல் உச்சத்தை எட்டியது.


  • இந்தியாவில் இணைவதற்கான பேச்சுக்கள் தொடங்கியபோது, ​​பல கிளர்ச்சியாளர்கள் ஹைதராபாத் மாநில காங்கிரஸின் ஆதரவுடன் இந்தியாவுடன் இணைவதை ஆதரித்தனர்.


  • நிஜாமின் பக்கத்தில் அலிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் காசிம் ரஸ்வி தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான இத்திஹாதுல் முஸ்லிமீன் இருந்தது. நிர்வாகம் மற்றும் அரசியலில் முஸ்லிம் செல்வாக்கைப் பாதுகாக்க அவர்கள் விரும்பினர்.


  • குஹாவின் கூற்றுப்படி, ரஸ்வியின் கீழ், இத்திஹாதுகள் 'ரஸாக்கர்கள்' (‘Razakars’) என்ற துணை ராணுவக் குழுவை உருவாக்கினர். அவர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்தி, நிஜாமை ஆதரித்தனர், மேலும் எதிர்ப்பை வன்முறையில் அடக்கினர், கிராமங்களைத் தாக்கினர் மற்றும் சாத்தியமான கிளர்ச்சியாளர்களைக் கொன்றனர்.


  • இந்திய இராணுவம் செப்டம்பர் 13, 1948 அன்று காலை ஹைதராபாத்திற்குள் நுழைந்தது. சவுத்ரியின் படைகளில் இரண்டு காலாட்படை படைப்பிரிவுகள், ஒரு கவச படைப்பிரிவு, ஒரு சிறிய தாக்குதல் படை மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து ஆயுதம் ஏந்திய போலீசார் இருந்தனர். இந்திய விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் நடத்தியது.


  • செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள், இந்திய இராணுவம் ஹைதராபாத் நகரின் புறநகர்ப் பகுதியை அடைந்து, ஹைதராபாத் இராணுவத்தையும் ரசாக்கர்களையும் தோற்கடித்தது. நிஜாம் சரணடைந்து இந்தியாவில் சேர ஒப்புக்கொண்டார்.


  • செப்டம்பர் 17-ஆம் தேதி இரவு, நிஜாம் ரசாக்கர்களைத் தடைசெய்து, இந்தியாவின் பிற பகுதிகளுடன் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வானொலி உரை நிகழ்த்தினார்.


  • சௌத்ரி தலைமையிலான இராணுவ நிர்வாகத்தின் கீழ் டிசம்பர் 1949ஆம் ஆண்டு வரை நிஜாம் ஹைதராபாத்தின் சம்பிரதாயத் தலைவராக இருந்தார். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பொது அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது. 1952-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.



Original article:

Share: