ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் (Gyan Bharatam International Conference), பிரதமர் மோடி கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் ஆக்குவது அறிவுசார் கொள்ளையைக் (intellectual piracy) கட்டுப்படுத்த உதவும் என்று கூறினார். ஞான பாரதம் திட்டம் என்றால் என்ன மற்றும் அதன் நோக்கம் என்ன? ஞான சேது (Gyan Setu) என்றால் என்ன?
தற்போதைய செய்தி?
இந்திய கையெழுத்துப் பிரதிகளை ‘ஒப்பிடமுடியாத நாகரிகக் கருவூலம்’ (unparalleled civilisational treasure) என்று அழைத்த பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ‘அறிவுசார் கொள்ளையைக்’ (intellectual piracy) கட்டுப்படுத்த அவற்றை டிஜிட்டல் ஆக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தச் சூழலில், ஞான பாரதம் சர்வதேச மாநாடு மற்றும் ஞான பாரதம் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. கடந்த சில நாட்களுக்கு முன்னர், கலாச்சார அமைச்சகத்தால் புதுடெல்லியில் ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடைபெற்றது. மூன்று நாள் நிகழ்வில் பாதுகாப்பு நிபுணர்கள், அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் பாதுகாவலர்கள் உட்பட 1,100 பேர் கலந்து கொண்டனர்.
2. குறிப்பிடத்தக்க வகையில், முதல் சர்வதேச கையெழுத்துப் பிரதி பாரம்பரிய மாநாடு—'கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவின் அறிவு மரபை மீட்டெடுப்பது''—1893ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் 132-வது ஆண்டு நிறைவோடு ஒத்துப்போனது.
3. கையெழுத்துப் பிரதிகளின் (manuscripts) முக்கியத்துவத்தை வலியுறுத்திய மாநாட்டில், பிரதமர் கையெழுத்துப் பிரதிகள் முழு மனிதகுலத்தின் முன்னேற்றப் பாதையின் தடயங்களைக் கொண்டுள்ளன மற்றும் தத்துவம், அறிவியல், மருத்துவம், மெய்ப்பொருளியலை (metaphysics), கலை, வானியல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதகுலத்தின் பயணத்தைப் பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.
உதாரணமாக, கில்கித் கையெழுத்துப் பிரதி (Gilgit Manuscript) காஷ்மீரின் உண்மையான வரலாற்றை வழங்குகிறது. இந்த அனைத்து கையெழுத்துப் பிரதிகளும் முழு மனிதகுலத்தின் முன்னேற்றப் பாதையின் தடயங்களைக் கொண்டுள்ளன. இந்திய கையெழுத்துப் பிரதிகள் தத்துவம், அறிவியல், மருத்துவம், மெய்ப்பொருளியல், கலை, வானியல் மற்றும் கட்டிடக்கலையை உள்ளடக்கிய மனிதகுலத்தின் பயணத்தை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.
4. ஞான பாரதம் மாநாடு ஞான பாரதம் திட்டத்தின் முறையான தொடக்கத்தையும் குறித்தது.
ஞான பாரதம் திட்டம்
1. 2025-26ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தின் ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.
2. 'ஞான பாரதம் திட்டம்' என்று தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளை உள்ளடக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இந்தத்திட்டம் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு பகுதியாக புது டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும். ஆனால், தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மையங்கள் அமைக்கப்படும்.
3. ரூ.400 கோடி ஞான பாரதம் திட்டத்தின் மூலம், இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகளின் பாதுகாப்பு மற்றும் விளக்கத்திற்காக தொல்லியல் துறையின் (Archaeological Survey of India (ASI)) வரிசையில் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. ஞான பாரதம் நாட்டில் உள்ள அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் டிஜிட்டல் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தற்போதுள்ள தேசிய கையெழுத்துப் பிரதி திட்டத்தை (National Manuscripts Mission) மாற்றுகிறது. இருப்பினும், அது மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
5. ஞான பாரதம் திட்டம் புதிய யோசனைகளை ஊக்குவித்தல், இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமையை வளர்ப்பது, முன்னேற்றத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் இந்திய கலாச்சாரத்தை உலகளவில் ஒரு அறிவுசார் தலைவராக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மனதில் கொண்டுள்ளது.
ஞான பாரதம் திட்டத்தின் நோக்கங்கள்
6. இந்தத்திட்டம் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கல், அறிவுசார் ஆய்வு மற்றும் உலக அணுகல் ஆகியவற்றை இணைத்து இந்தியாவின் கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை புதுப்பிக்க ஒரு விரிவான திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்நோக்கங்கள்:
(i) அடையாளம் காணுதல் மற்றும் ஆவணப்படுத்தல்: நிறுவனங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் சிதறிக்கிடக்கும் பழங்கால கையெழுத்துப் பிரதிகளை முறையாக அடையாளம் காண, ஆவணப்படுத்த மற்றும் பட்டியலிட கையெழுத்துப் பிரதி வள மையங்களின் (Manuscript Resource Centres (MRCs)) நாடு முழுவதும் ஒரு வலையமைப்பு நிறுவப்படும். கையெழுத்துப் பிரதி வள மையங்கள் ஒரு உண்மையான மற்றும் நம்பகமான தேசிய பதிவேட்டை உருவாக்கும்.
(ii) பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு: வலுப்படுத்தப்பட்ட கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மையங்கள் (Manuscript Conservation Centres (MCCs)) மூலம், தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படும்.
(iii) டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் களஞ்சியம் உருவாக்கல்: செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கையெழுத்து உரை அங்கீகாரம் (AI-assisted Handwritten Text Recognition (HTR)), நுண்படமாக்கல் ((Microfilming)) மற்றும் cloud அடிப்படையிலான மெட்டாடேட்டா அமைப்புகளைப் பயன்படுத்தி கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் ஆக்கப்படும். இது உலக அளவில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தை (National Digital Repository) உருவாக்க உதவும்.
(iv) ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீடு: அரிய மற்றும் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகள் விமர்சன பதிப்புகள், நகல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் புதுப்பிக்கப்படும். அவற்றை பல மொழிகளில் அணுகக்கூடியவையாக மாற்றும்.
(v) திறன் வளர்ச்சி மற்றும் பயிற்சி: எழுத்துப்படுத்தல், பழைய எழுத்து ஆய்வு (palaeography), பாதுகாப்பு மற்றும் கையெழுத்துப் பிரதி ஆய்வுகளில் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் மற்றும் பட்டறைகள் புதிய தலைமுறை நிபுணர்களைத் தயார் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
(vi) தொழில்நுட்ப வளர்ச்சி: திட்டம் திறன் பேசி பயன்பாடுகள் (mobile applications), பாதுகாப்பான கிளௌட் சேமிப்பு தீர்வுகள் மற்றும் சர்வதேச பட வினைத்திறன் கட்டமைப்பை (International Image Interoperability Framework) அடிப்படையாகக் கொண்ட தளங்கள் உட்பட கையெழுத்துப் பிரதிகளுக்கான டிஜிட்டல் கருவிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும்.
ஞான-சேது (Gyan-Setu)
1. கலாச்சார அமைச்சகம் ஞான பாரதம் திட்டத்தின் கீழ் ஞான-சேது என்ற தேசிய செயற்கை நுண்ணறிவு சவாலையும் (National AI Innovation Challenge) தொடங்கியுள்ளது.
2. இந்த முயற்சி இளைஞர்கள் மற்றும் புதுமையாளர்களை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துகிறது. தத்துவம் மற்றும் மருத்துவம் முதல் ஆட்சி மற்றும் கலைகள் வரை பல்வேறு பாடங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் உள்ளதால், இந்தச் சவால் இந்தப் பாரம்பரியத்தை உலகத்திற்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு (start-ups) பங்கேற்பை திறப்பதன் மூலம், ஞான-சேது பாரம்பரியப் பாதுகாப்பை ஒரு கூட்டு தேசிய முயற்சியாக நிலைநிறுத்துகிறது.
வெற்றிகரமான பயண நாள் (Digvijay Divas) மற்றும் சுவாமி விவேகானந்தர்
1. வெற்றிகரமான பயண நாள் (Digvijay Divas) செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையைக் குறிக்க ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மோதல்களால் பீடிக்கப்பட்ட உலகத்துடனான இந்தியாவின் ஈடுபாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான அவரது கருத்துக்களின் நீடித்த பொருத்தத்தைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
2. சிகாகோவில் விவேகானந்தரின் உரை சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதைக்கான ஆன்மீக அழைப்புக்கானது மட்டுமல்ல, தேசிய கற்பனை, அரசியல், கல்வி மற்றும் சர்வதேச உறவுகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
3. ‘அமெரிக்காவின் சகோதரிகளே, சகோதரர்களே’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்த்துச் செய்தியுடன் தனது உரையை தொடங்கிய விவேகானந்தர், உலக மதப் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில், ஒரு உலகளாவிய மதத்தின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் மற்றும் அனைத்து மதங்களையும் உண்மை என்று உறுதிப்படுத்தினார். சகிப்புத்தன்மை (Tolerance) மற்றும் உலகளாவிய ஏற்றுக்கொள்ளல் (universal acceptance) ஆகியவை அவரது உரைகளில் இரண்டு முக்கிய கருப்பொருள்களாக இருந்தன.
4. சிகாகோவில் வரலாற்று புகழ்மிக்க சிறப்புமிக்க உரைக்குப் பிறகு மற்றும் அதைத் தொடர்ந்த மூன்று ஆண்டுகள் வெளிநாட்டில் ஆற்றிய விரிவுரைகள் மற்றும் போதனைகளைத் தொடர்ந்து விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சியின் பெரும் ஆதரவாளராக போற்றப்பட்டார். ஆன்மீக ஒற்றுமைக்கான அவரது அழைப்பு இந்தியாவின் தேசிய இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் ஆன்மீக தேசியவாத கருத்துக்கு உத்வேகத்தைஅளித்தது.
5. ஆன்மீக தேசியவாதத்தின் முன்னோடியான விவேகானந்தர், இந்தியர்களை அவர்களின் பண்டைய கலாச்சாரத்தில் பெருமை கொள்ள ஊக்குவித்தார். அதே நேரத்தில் ஆன்மீக ஒற்றுமையின் பார்வையை ஊக்குவித்தார்.
6. நடைமுறை வேதாந்தத்தின் முன்னோடியாக இருந்த விவேகானந்தர், பெரும்பாலும் சமூக மோதல்களுக்கு வழிவகுக்கும் எந்தவொரு சமூகப் பிளவுகளையும்விட சுயநலமற்ற சேவையை முன்னுரிமைப்படுத்தினார். தேசத்திற்குள்ளான மனித உறவுகளை சகோதரத்துவம் வரையறுக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டினார். கீழ்சாதியினர், ஏழைகள், கல்வியற்றவர்கள், அறியாதவர்கள் மற்றும் செருப்பு தைப்பவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களும் இந்தியாவில் சகோதரத்துவ உணர்வினால் இணைக்கப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்தினார்.