குற்றவாளிகள் மற்றும் அவர்களது குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நீதி அமைப்பு இல்லாமல், பாராட்டத்தக்க கொள்கை முயற்சிகள் கூட சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். அவை வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.
ஒரு பிரச்சினையை ஒப்புக்கொள்வது தீர்வுகளுக்கு வழிவகுக்கும். சுரேந்திர மஞ்சி & பிற vs இந்திய ஒன்றியம் & இதர-2024 (Surendra Manji & Anr vs Union of India & Ors) வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த அணுகுமுறை இதுதான், மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் உட்பட கொத்தடிமைத் தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வில் ஏற்படும் குறிப்பிடத்தக்க தாமதங்களை எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்களை வழங்குவதை நிவர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை முன்வைக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டுமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment (MoLE)) அறிவுறுத்தப்பட்டது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் (MoLE) தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் "அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை." செப்டம்பர் 2025-ல் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அமைச்சகம் சமீபத்தில் அனுப்பிய வழிகாட்டுதல்களில், வழக்குகளை அடையாளம் காணும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஆய்வுகள், மதிப்பீட்டு ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் திட்டங்களை மேற்கொள்ளவும், வழக்குகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை உருவாக்கவும் அமைச்சகம் அவர்களை ஊக்குவித்தது. மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் குற்றத்திற்கு எதிரான தரவு தலைமையிலான தலையீடுகள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டிய வரவேற்கத்தக்க பரிந்துரைகள் இவை குறிப்பிடுகின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau’s (NCRB)) அறிக்கைகள், சான்றுகள் சார்ந்த கொள்கை வகுப்பிற்கான தரவுகளின் முக்கியமான ஆதாரங்களாகும். அவற்றின் இயல்பிலேயே இந்தத் தரவுகள் குற்றத்தின் அளவைப் பற்றிய விரிவான பிரதிநிதித்துவமாக இல்லாவிட்டாலும், அனைவரும் சட்டப்பூர்வ வழியைத் தேர்ந்தெடுப்பதில்லை. இருப்பினும், இந்தத் தரவுகள் ஒரு விவேகமான கொள்கை கட்டமைப்பை உருவாக்க உதவும்.
கட்டாய உழைப்பு, வீட்டு வேலை, கட்டாய திருமணம், பிச்சை எடுப்பது, ஆபாசப் படங்கள் மற்றும் மனித உறுப்புகளை சட்டவிரோதமாக அகற்றுதல் உள்ளிட்ட ஆள்கடத்துதலின் பல்வேறு வடிவங்கள் மற்றும் நோக்கங்களைப் புகாரளிப்பதில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. ஆள்கடத்தல் குறித்த அவ்வப்போது அறிக்கையிடுவது, இப்போது பாதிக்கப்பட்டவர்களின் தன்மையையும் குற்றம் எவ்வளவு பரவலாக நிகழ்கிறது என்பதையும் காட்டுகிறது. மாநில வாரியான தரவைப் பிரிப்பதும், குற்றவியல் நீதி அமைப்பின் எதிர்வினையை ஆராய்வதும், குற்றவாளிகளைக் கையாள்வதில் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் பங்கு உட்பட இதில் முக்கியமானது. இந்தத் தகவல் கொள்கை மற்றும் நடவடிக்கையின் பல்வேறு அம்சங்களைத் தெரிவிக்க உதவுகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 370 மற்றும் 370A இன் கீழ், 2023 அறிக்கை உட்பட, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கையின் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட ஆள்கடத்தல் குற்றங்கள் குறித்த ஒட்டுமொத்த தரவு, கட்டாய உழைப்புக்கு ஆளானவர்கள் (23,520) ஆள்கடத்தல் குற்றங்களில் மிகப்பெரிய சதவீதத்தை உருவாக்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களைத் தொடர்ந்து பாலியல் சுரண்டல் அல்லது விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் (17,944) உள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் குற்றம் 2023 அறிக்கையின்படி, 2,183 ஆள்கடத்தல் வழக்குகள் (human trafficking (HT)) பதிவாகியுள்ளன. இது 2022ஆம் ஆண்டு பதிவான ஆள்கடத்தல் வழக்குகளை விட மூன்று சதவீதம் குறைவு. 2023-ம் ஆண்டில், அதிக எண்ணிக்கையிலான ஆள்கடத்தல் வழக்குகள் மகாராஷ்டிராவில் (388) பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தெலுங்கானா (336), ஒடிசா (162), உத்தரபிரதேசம் (155) மற்றும் பீகார் (132) உள்ளன. ஒடிசாவில் அதிக எண்ணிக்கையிலான கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் (1,305) பதிவாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (935), டெல்லி (842), தெலுங்கானா (626) மற்றும் பீகார் (510) உள்ளன.
இந்தியாவில், 2023ஆம் ஆண்டில் மொத்தம் 6,288 பேர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இருவரும் அடங்குவர். 18 வயதுக்குட்பட்டவர்கள் கிட்டத்தட்ட 43 சதவீதம் பேர் ஆவர். 2023-ம் ஆண்டில் ஆண்களை விட (2,501) பெண்கள் (3,787) அதிகமாகக் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியா முழுவதும் மைனர் பெண்களை விட (1,013) அதிகமான மைனர் சிறுவர்கள் (1,674) கடத்தப்பட்டனர். டெல்லி (605), இராஜஸ்தான் (343), பீகார் (261) மற்றும் ஒடிசா (167) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மைனர் சிறுவர்கள் கடத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நடக்கும் குற்றங்களின் வகைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் வகையில், கடத்தப்பட்டதற்கான நோக்கத்தையும் தேசிய குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கை வழங்கிறது. கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட 6,043 பேரில், 36 சதவீதம் பேர் பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்பட்டவர்கள் மற்றும் 28 சதவீதம் பேர் கட்டாய உழைப்புக்கு கடத்தப்பட்டவர்கள் ஆவர். மீட்கப்பட்ட கட்டாய உழைப்புக்கு ஆளானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் டெல்லி (758), அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (321), ஒடிசா (315), பீகார் (93) மற்றும் ஜார்கண்ட் (62) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில், மூன்று மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டம்-2021 (Rehabilitation of Bonded Labourers) இன் கீழ் 654 நபர்களுக்கு உடனடி பண உதவியுடன் மறுவாழ்வு அளித்ததாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) தெரிவித்துள்ளது. இருப்பினும், மாநிலங்களில் செய்யப்படும் மறுவாழ்வின் நிலை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நோக்கம் இரண்டும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளன. இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும். மேலும் கட்டாய தொழிலாளர் கடத்தல் குறித்த தரவை முழுமையான, நிலையான மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பது இப்போது முக்கியமாக உள்ளது.
கடத்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி இதை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் (MoLE) கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இத்தகைய தரவு மிக முக்கியமானது. ஏனெனில் கணிசமான மறுவாழ்வு உதவியும் தண்டனையும் இணைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்படுவதாகக் கண்டறியப்பட்ட மாநிலங்களின் செயல்பாடு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வழிமுறைகள் குறித்தும் சில கொள்கைரீதியில் கவனம் தேவை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், உள்ளூர் வாழ்வாதார விருப்பங்கள் மற்றும் அரசாங்கத்தின் சமூக நல சலுகைகளை அணுகுவதன் மூலம் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
2023-ம் ஆண்டில், கடத்தல் குற்றத்திற்காக 6,024 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகள் நிறைவடைந்த 683 வழக்குகளில், 10.5 சதவீதம் மட்டுமே தண்டனை பெற்றன. எனவே, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு பண மறுவாழ்வு வழங்களையும் இணைப்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தும் நீதி அமைப்பு அவசியம். இதில் குற்றவாளிகள் மற்றும் அவர்களது குழுக்களின் மிரட்டலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் அடங்கும். அத்தகைய பாதுகாப்பு இல்லாமல், நல்ல கொள்கை முயற்சிகள் கூட பயனற்றதாகவே இருக்கும். கொள்கைகள் யாருக்கு உதவ வேண்டுமோ அவர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்வதற்கு, உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் உள்ளீடுகளும் முக்கியம்.
எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (IIMAD) ஆலோசகர் மற்றும் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார்.