நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் 6.5%-க்கு அருகில் இருக்கும் ஒரு எண்ணிக்கையை விட்டு, அதை சமப்படுத்தலாம்.
6.5% வளர்ச்சி விகிதம் இந்தியாவின் தற்போதைய சாத்தியமான வளர்ச்சி விகிதமாகத் தோன்றுகிறது என்று நாங்கள் உட்பட பல ஆசிரியர்கள் வாதிட்டுள்ளனர். ஆனால், 2025-26 முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் 7.8% என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சாத்தியமான வளர்ச்சி விகிதம் பற்றிய நமது கருத்தை மாற்றுகிறதா?
கோவிட்-19-க்குப் பிந்தைய ஆண்டுகளில், 2022-23 முதல் 2024-25 வரையிலான முதல் காலாண்டு உண்மையான மொத்த உள் நாட்டு வளர்ச்சியானது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளின் சராசரியான 7.0%, 6.9% மற்றும் 7.5% உடன் ஒப்பிடும்போது சராசரியாக 9.9%-ஆக உள்ளது. எனவே, 2025-26 முதல் காலாண்டில் 7.8% உண்மையான மொத்த உள்நாட்டு வளர்ச்சி வளர்ச்சி முந்தைய மூன்று ஆண்டுகளின் முதல் காலாண்டின் சராசரியைவிட குறைவாக உள்ளது. 2022-23 முதல் 2024-25 வரையிலான ஆண்டு உண்மையான மொத்த உள் நாட்டு வளர்ச்சி விகிதம் முறையே 7.6%, 9.2% மற்றும் 6.5%-ஆக இருந்தது.
வெளியீட்டுப் பக்கத்தில், 2025-26ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) வளர்ச்சி 7.6%-ஆக இருந்தது. இது முந்தைய மூன்று ஆண்டுகளில் சராசரி மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக இருந்தது. 2025-26ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சி பெரும்பாலும் உற்பத்தி மற்றும் மூன்று முக்கியமான சேவைத் துறைகளின் வளர்ச்சி விகிதங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. 2025-26ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.7%-ஆக இருந்த வளர்ச்சி, முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான சராசரி முதல் காலாண்டு வளர்ச்சியைவிட அதிகமாக 5.8% ஆக இருந்தது.
சாத்தியமான வளர்ச்சி விகிதம் மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதம் (Incremental Capital Output Ratio (ICOR))
வர்த்தகம் மற்றும் போக்குவரத்து, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய மூன்று முக்கியமான சேவைத் துறைகளில், 2025-26-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதங்கள் 8.6%, 9.5% மற்றும் 9.8%-ஆக அதிகமாக இருந்தன. ஆனால், இந்த எண்கள் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வளர்ச்சி விகிதங்களான 12.9%, 11.3% மற்றும் 13.1%-ஐ விட இன்னும் குறைவாகவே உள்ளன. பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சி திறனை அதிகரிக்க அனைத்து முக்கிய துறைகளிலும் நிலையான வளர்ச்சி தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற சொத்துக்களில் முதலீட்டின் அளவீடான உண்மையான மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் (gross fixed capital formation rate (GFCFR)) முதல் காலாண்டில் ஏறக்குறைய நிலையாகவே இருந்தது: 2023-24-ல் 34.5%, 2024-25-ல் 34.6% மற்றும் 2025-26-ல் 34.6% ஆகும். இதனால், கட்டமைப்பு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
“சாத்தியமான வளர்ச்சி 6.5%-ல் உள்ளது" என்ற எங்கள் கட்டுரையில் (தி இந்து-பிசினஸ்லைன், ஜூலை 4, 2025) சாத்தியமான வளர்ச்சி விகிதமாக 6.5% மதிப்பீடு மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் மற்றும் அதிகரிக்கும் மூலதன-வெளியீட்டு விகிதம் (ICOR) ஆகியவற்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் அதிகமாக ஏற்ற இறக்கமாக இல்லை என்றாலும், அதிகரிக்கும் மூலதன-வெளியீட்டு விகிதம் மிகவும் நிலையற்றது. இதற்கு முக்கிய காரணம், அது தன்னிச்சையாக மதிப்பிடப்படவில்லை. இது உண்மையான மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதத்தை மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தால் வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இதனால், வளர்ச்சியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தில் பிரதிபலிக்கின்றன.
2022-23, 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளில் உண்மையான மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.6%, 33.5% மற்றும் 33.7% என நிலையானதாக உள்ளது. மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் (GFCFR) மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சாத்தியமான வளர்ச்சி விகிதத்தை நாம் மதிப்பிடலாம். சராசரி மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் 33.6% மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதம் 5.2 உடன், வளர்ச்சி விகிதம் 6.5% ஆகவே இருக்கும். இதைவிட வேகமாக வளர்ச்சியடைய, முதலீடுகள் 33.6%-க்கு மேல் அதிகரிக்க வேண்டும், அல்லது அதிகரிக்கும் மூலதன-வெளியீட்டு விகிதம் 5.2-க்கு கீழே குறைய வேண்டும்.
சமீபத்திய ஆண்டுகளில், COVID-19 மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக வளர்ச்சி விகிதங்களும் அதிகரிக்கும் மூலதன-வெளியீட்டு விகிதங்களும் அதிகமாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றன. எனவே, இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுவதில், மிக நீண்ட காலத்திற்கு அதன் செயல்திறனைப் பார்க்க வேண்டும். 2011-12 முதல் 2023-24 வரை, இந்தியாவின் சராசரி உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1% ஆக இருந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சித் திறனை மதிப்பிடும்போது, அதன் சமீபத்திய பொருளாதார முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பொதுத்துறை முதலீடு குறித்து
அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதம் (Incremental Capital Output Ratio (ICOR)) என்பது மூலதனம் எவ்வளவு திறமையாக பயன்படுத்தப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகும். தொழில்நுட்பமும் நிர்வாகமும் இறுதியில் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தை தீர்மானிக்கிறது. நிலையான மூலதன உருவாக்கம் விகிதம் உயர்ந்தால் மட்டுமே நிலையான உயர் வளர்ச்சியை ஒருவர் நம்ப முடியும். மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தில் அரசாங்க செலவினங்கள் வகிக்கும் பெரிய பங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வாகும். கடந்த சில ஆண்டுகளில், மொத்த உண்மையான மொத்த நிலையான மூலதன உருவாகத்தால் (Gross Fixed Capital Formation (GFCF)) பொதுத்துறையின் பங்கு 2021-22-ல் 21.6%-லிருந்து 2023-24-ல் 25.1%-ஆக அதிகரித்துள்ளது. பொதுத்துறை செலவினம் பெரும்பாலும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவே செலவிடப்படுகிறது. அவை அதிக ICOR கொண்டுள்ளன.
பொதுத்துறை முதலீட்டின் அதிகரிப்பு பெரும்பாலும் ஒன்றிய அரசால் வழிநடத்தப்பட்டது. இருப்பினும், அந்த வேகம் குறைந்து வருவதாகத் தெரிகிறது. 2021-22, 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில், மையத்தின் மூலதனச் செலவினங்களின் வளர்ச்சி முறையே 39.4%, 24.4% மற்றும் 28.9%-ஆக இருந்தது. இருப்பினும், இந்த வளர்ச்சி 2024-25-ல் 10.8% ஆகக் குறைந்தது.
சாத்தியமான வளர்ச்சி விகிதத்தை 6.5%-க்கு மேல் உயர்த்த, மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் (GFCFR) தற்போதைய சராசரியான 34%-லிருந்து சுமார் 2% அதிகரிக்க வேண்டும். இதற்காக, தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், 2021-22 மற்றும் 2023-24-க்கு இடையில் மொத்த முதலீட்டில் அவற்றின் பங்கு 37%-லிருந்து 34.4%-ஆகக் குறைந்துள்ளது. இது அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தை (Incremental Capital Output Ratio (ICOR)) குறைப்பதன் மூலம் இதை அதிகரிக்கலாம் .
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
நீண்டகால சாத்தியமான வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய சில தாக்கங்களில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மற்றும் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative Artificial Intelligence (Gen AI)) போன்ற மாறிவரும் தொழில்நுட்பங்களின் தாக்கமும் அடங்கும். எதிர்மறையான பக்கத்தில், இயந்திரங்களும் உபகரணங்களும் காலப்போக்கில் பழையதாகிவிடுகின்றன. மேலும், புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக அவற்றை விரைவாக மாற்ற வேண்டியிருக்கிறது. இது மூலதன பயன்பாட்டை அதிகரிக்கிறது. இந்த சக்திகள் தங்களை சமநிலைப்படுத்திக் கொள்ளலாம். இதனால் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி 6.5%-க்கு அருகில் இருக்கும்.
உலக வர்த்தக சூழலும் இந்தியாவிற்கு சவாலாகவே உள்ளது. கட்டணங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது வர்த்தக இலக்குகளையும் முதலீட்டு ஆதாரங்களையும் உலகளவில் பன்முகப்படுத்தக்கூடிய வேகத்தைப் பொறுத்தது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முந்தைய நான்கு தொடர்ச்சியான காலாண்டுகளில் நேர்மறையாக இருந்த பிறகு, நிகர ஏற்றுமதியின் பங்களிப்பு 2025-26 முதல் காலாண்டில் (-)1.4% புள்ளிகளில் எதிர்மறையாக மாறியது.
இந்த போக்கு தொடர வாய்ப்புள்ளது. தற்போதைய உலகளாவிய சூழலில், 6.5% வளர்ச்சி விகிதம் என்பது ஒரு நியாயமான உயர் மட்டமாகும் என்பதை நாம் அங்கீகரிக்கலாம். ஆனால், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க, நமக்கு இன்னும் வேகமான வளர்ச்சி தேவை. அதற்கு, தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள் ஒட்டுமொத்த மற்றும் துறை மட்டங்களில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். தனியார் முதலீட்டைத் தடுத்து நிறுத்துவது எது என்பதை அவர்கள் புரிந்துகொண்டு அதற்கான தீர்வுகளை பரிந்துரைக்க வேண்டும்.
C. ரங்கராஜன் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் தலைவர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர். டி.கே. ஸ்ரீவஸ்தவா, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கவுரவப் பேராசிரியராகவும், பதினாறாவது நிதிக் குழுவின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.