விரைவான வேகத்தில் முடுக்கிவிடப்படும் ஒரு பசுமை மாற்றம் -ஈஷான் ஷர்மா

 சிறப்பாக செயல்படுத்தப்பட்டால், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான (decarbonisation plan) இந்திய ரயில்வேயின் திட்டம், நிதி ரீதியாகப் பொறுப்புடன் செயல்பட்டு, அரசாங்க அமைப்புகள் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.


இந்தியா தனது முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் பெட்டியை ஜூலை 2025-ல் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory (ICF)) வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சாதனை புதிய தொழில்நுட்பத்தை விட அதிகமானது. இது இந்திய ரயில்வேயின் விரைவுபடுத்தப்பட்ட பசுமை மாற்றத்திற்கு ஒரு சான்றாகும்.


உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றாக உள்ள இந்திய ரயில்வே, உலக அளவில் ஒப்பிடக்கூடிய சில மாற்றங்களுடன் ஒரு மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை நோக்கமாகக் கொண்டு, இது தேசிய இலக்கைவிட 40 ஆண்டுகள் முன்னதாக உள்ளது.


இந்த லட்சிய மாற்றம் சுத்தமான எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல. இது உள்கட்டமைப்பு, தினசரி செயல்பாடுகள் மற்றும் நிதி முறைகளின் முழுமையான மாற்றமாகும். இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (sustainable development agenda) இந்திய ரயில்வேயை முன்னணியில் நிறுத்துகிறது.


தினமும் 24 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் மூன்று மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்படுவதால், இந்தியாவின் ரயில்வேயின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தேசிய காலநிலை இலக்குகளுக்கு நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்


கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே தனது அகலப் பாதை வலையமைப்பில் சுமார் 45,000 கிலோமீட்டர் தூரத்தை மின்மயமாக்கியுள்ளது. இதன் விளைவாக, அதன் அகலப் பாதை வலையமைப்பில் 98%-க்கும் மேல் மின்மயமாக்கப்பட்டு, டீசல் பயன்பாடு குறைக்கப்பட்டு, உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு நிறைவு செய்கிறது, இதில் 553 மெகாவாட் சூரிய சக்தி, 103 மெகாவாட் காற்றாலை சக்தி மற்றும் 100 மெகாவாட் கலப்பு திறன் (மொத்தம் 756 மெகாவாட்) ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 


2,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் சேவைக் கட்டடங்கள் சூரிய சக்தியால் இயக்கப்படுகின்றன, அதேசமயம் வடகிழக்கு எல்லைப் பகுதி உட்பட பல ரயில்வே கட்டடங்கள் ஆற்றல் திறன் பணியகத்தின் “ஷூன்ய” (Shunya) நிகர-பூஜ்ய முத்திரையைப் பெற்றுள்ளன. சுத்தமான இழுவை தொழில்நுட்பத்தில் புதுமையாக, முதல் ஹைட்ரஜன் இயக்க ரயில் உருவாக்கப்பட்டுள்ளது, இது 35 இத்தகைய அலகுகளைப் பயன்படுத்துவதற்கான “பாரம்பரியத்திற்கு ஹைட்ரஜன்” (Hydrogen for Heritage) முயற்சியின் ஒரு பகுதியாகும்.


2030ஆம் ஆண்டுக்குள் ரயில்கள் 45% சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் லாரிகளில் இருந்து ரயில்களுக்கு அதிக பொருட்களை மாற்றுதல், உயிரி எரிபொருள் கலவைகளைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்களைக் கட்டுதல் மற்றும் சிறப்பு சரக்கு ரயில் பாதைகளைத் தொடங்குதல் ஆகியவை பிற முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் 30 ஆண்டுகளில் 457 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை குறைக்கக்கூடும். இந்த நடவடிக்கைகள், இந்திய ரயில்வேயை தேசிய இயக்கத்தின் காலநிலைக்கு ஏற்ற அடித்தளமாக கருதி, தொழில்நுட்ப மாற்றத்தையும், முறையான மறு ஆலோசனயையும் குறிக்கின்றன.


காலநிலை நிதி முக்கியப் பாதையை எடுக்கிறது


கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சி வலுவான மற்றும் மேம்படுத்தப்பட்ட பசுமை நிதி அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் பசுமைப் பத்திரங்களை விற்பதன் மூலம் ரூ.58,000 கோடியை திரட்டியுள்ளது. மேலும், போக்குவரத்துத் துறை இந்த நிதியில் பெரும்பகுதியைப் பெற்றுள்ளது. மின்சார ரயில்களை வாங்கவும், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளை விரிவுபடுத்தவும் ஏறக்குறைய ரூ.42,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஒதுக்கீடுகள் மூலதன செலவுத் திட்டமிடலின் அடிப்படையில் காலநிலை குறிக்கோள்களை ஒருங்கிணைக்கின்றன..


நிறுவன அளவில், இந்திய ரயில்வே நிதிக் கழகம் (Indian Railway Finance Corporation (IRFC)), காலநிலைக்கு ஏற்ற மூலதனத்தைத் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் மின்சார இன்ஜின்களை மறு நிதியளிப்பு கொள்முதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட $500 மில்லியன் பசுமைப் பத்திர வெளியீட்டில் (Green bond issuance) தொடங்கி, இந்திய ரயில்வே நிதிக் கழகம் அதன் பசுமை நிதி தடத்தை படிப்படியாக விரிவுபடுத்தியுள்ளது. 


சில நாட்களுக்கு முன்னர், புதுப்பிக்கத்தக்க மின் திறனை மேம்படுத்துவதற்காக தேசிய அனல் மின் கழகம் (National Thermal Power Corporation (NTPC)) பசுமை எரிசக்திக்கு ரூ.7,500 கோடி கடனை வழங்கியது. இது இந்தியாவின் குறைந்த கார்பன் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு துறைகளுக்கு இடையேயான நிதியுதவியின் வளர்ந்து வரும் போக்கைக் குறிக்கிறது.


இந்திய ரயில்வேயின் பசுமை மாற்றத்திற்கு பலதரப்பு நிறுவனங்களும் ஆதரவளித்துள்ளன. 2022-ஆம் ஆண்டு மாதத்தில், உலக வங்கி ரயில் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நடைபாதைகளின் நெரிசலை குறைத்தல் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ரயில் சரக்குப் போக்குவரத்து திட்டத்திற்காக (Rail Logistics Project) $245 மில்லியன் கடன் வழங்குவதற்கு ஒப்புதல்


இருப்பினும், பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். முதல் முன்னுரிமை மின்மயமாக்கலை கார்பன் நீக்கம் செய்யப்பட்ட மின்சாரத்துடன் பொறுத்த வேண்டும். கூடுதல் ரயில் மின்சாரம் பெரும்பாலும் நிலக்கரியிலிருந்து வந்தால், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் சூரிய மற்றும் காற்றாலை நிறுவனங்களிடமிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் வாங்குவதே இதற்கு ஒரு தீர்வாகும். இது ‘பசுமை ரயில்கள்’ தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும். எனவே, மாசுபாட்டைக் குறைப்பது என்பது வெறும் கூற்று அல்ல, அது உண்மையான குறிகாட்டியாகும்.


இரண்டாவதாக, கடைசிப் பகுதியின் இணைப்பை காலநிலைக்கு ஏற்ப அணுக வேண்டும். ரயில்வே நிலையங்கள் மின்னணு பேருந்துகள், மிதிவண்டி பகிர்வு அமைப்புகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். சரக்கு போக்குவரத்தைப் பொறுத்தவரை, மின்சார லாரிகள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் அல்லது வளர்ந்து வரும் ஹைட்ரஜன் இயக்கம் தீர்வுகள் மூலம், முதல் மற்றும் இறுதி தூர இணைப்புகளை சுத்தம் செய்வதன் மூலம் ரயிலின் குறைந்த கார்பன் நன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.


மூன்றாவதாக, ரயில் தொழில்நுட்பம் உலகத் தரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மின்சார கம்பிகள் மிகவும் விலை உயர்ந்த சில சிறிய அல்லது பழைய ரயில் பாதைகளில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில்களை சோதிக்கலாம். அதே நேரத்தில், இதற்கு இணையாக, இலகுரக ரயில் பெட்டிகள், காற்றியக்கவியல் இயந்திர வடிவமைப்புகள் (aerodynamic locomotive designs) மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஆற்றல் அமைப்புகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது இழுவை ஆற்றல் தேவைகளைக் குறைத்து செயல் திறனை மேம்படுத்தும்.


இறுதியாக, தொழில்நுட்பம் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது; மக்களின் பழக்கவழக்கங்களும் மாற வேண்டும். ரயில்களுக்கான பசுமை சான்றிதழ், சரக்கு சேவைகளின் கார்பன் குறிகள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பயணிகள் மற்றும் வணிகங்களை காலநிலை நடவடிக்கையில் உணர்வுள்ள பங்கேற்பாளர்களாக மாற்ற முடியும். இந்திய ரயில்வே தினமும் ஏராளமான மக்களுக்கு சேவை செய்வதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணம் குறித்த மக்களின் சிந்தனையை வேறு எந்த போக்குவரத்து அமைப்பையும்விட சிறப்பாக மாற்ற முடியும்.


சவாலை எதிர்கொள்வது


2030ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது நிகர பூஜ்ஜிய இலக்கை அடைந்தால், இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் 60 மில்லியன் டன்களுக்கு மேல் CO2 உமிழ்வைத் தடுக்க முடியும். இது 13 மில்லியன் கார்களை சாலையில் இருந்து அகற்றுவது போன்றது. பணத்தை சேமிக்கும் காரணமும் முக்கியமானது: பத்தாண்டுகளின் இறுதிக்குள் மின்மயமாக்கல் மற்றும் எரிசக்தி திறன் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த எரிபொருள் செலவு சேமிப்பை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால் இலக்குகளை நிர்ணயிப்பதில் இல்லை. மாறாக அவற்றை அடைய மூலதனத்தைத் திரட்டி நிர்வகிப்பதில் உள்ளது. சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் ரயில்வே பசுமைத் திட்டம் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும். பெரிய அரசு போக்குவரத்து அமைப்புகள் தங்கள் நிதிகளின் கட்டுப்பாட்டை இழக்காமல் குறைந்த கார்பனை வெளியிட முடியும் என்பதைக் காட்டுகிறது.


இஷான் சர்மா ஒரு இந்திய ரயில்வே கணக்கு சேவை (Indian Railway Accounts Service (iras)) அதிகாரி, தற்போது தென்மேற்கு ரயில்வேயில் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவர் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்து செவனிங்  (Chevening) உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.



Original article:

Share: