அரசு, தொழில்நுட்பம் மற்றும் குடிமக்களுக்கு இடையிலான உறவை மின்-ஆளுகை எவ்வாறு மறுவடிவமைக்கிறது? -ஷாம்னா தச்சம் போயில்

 உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளில் மின்-ஆளுகை (e-governance) என்ற சொல் பொதுவான பேச்சு வழக்கில் (common parlance) வருவதற்கு முன்பே இந்தியாவில் மின்-ஆளுகைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பத்தை ஒரு பின்-முனை கருவியாகப் பயன்படுத்துவதிலிருந்து, நிர்வாகம் மற்றும் குடிமக்கள் அதிகாரமளிப்பதற்கான முற்றிலும் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கும் ஆழமாகப் பதிக்கப்பட்ட டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பாக இது எவ்வாறு உருவாகியுள்ளது?


இந்தியாவின் விமான நிலையங்களில், டிஜியாத்ரா இப்போது பயணிகளை ஒரு விரைவான முக அடையாளப் பரிசோதனை மூலம் வரிசைகளைத் தாண்டி அனுப்புகிறது. பதிவு மேடைகள் மற்றும் கோப்புகளில் இருந்து தொடுதலில் பயன்படுத்தும் தளங்களுக்கு (Tap-and-go platforms) இந்த மாற்றம் வெறும் வசதிக்காக மட்டுமல்ல. நீண்ட வரிசைகள் மற்றும் முடிவில்லாத ஆவணங்களின் பின்னால் இருந்து உடனடி டிஜிட்டல் சேவைகளுக்கு இந்த மாற்றம், தொழில்நுட்ப முன்னேற்றத்தை மட்டுமல்லாமல், இந்திய அரசு தனது குடிமக்களுடன் தொடர்பு கொள்ளும் முறையில் ஒரு அடிப்படை மாற்றத்தையும் குறிக்கிறது.


இந்தியாவில் டிஜிட்டல் ஆளுகையின் பரிணாமம், எந்தவொரு வளரும் நாடும் மேற்கொள்ளும் மிகவும் லட்சியமான தொழில்நுட்ப மாற்றங்களில் ஒன்றாகும். உலகின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் மின்-ஆளுகை (e-governance) என்ற சொல் பொதுவான பேச்சு வழக்கில் வருவதற்கு முன்பே இந்தியாவில் மின்-ஆளுகைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.


அரசாங்கத்தில் தொழில்நுட்பத்தின் புத்திசாலித்தனமான பயன்பாடு 1970-களின் சிறிய கணினி திட்டங்களை முழுமையான டிஜிட்டல் அமைப்பாக மாற்றியுள்ளது. இது இப்போது 1.4 பில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு சேவை செய்கிறது. 


இந்திய மின்-ஆளுகை தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் 1980-கள் முதல் தற்போது வரை நான்கு தனித்துவமான கட்டங்கள் மூலம் சிறப்பாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கட்டமும் இந்திய அரசு டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மூலம் குடிமக்களுடனான அதன் உறவை எவ்வாறு மறுசீரமைத்துள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது.


1980 முதல் 2000 இடையிலான ஆரம்ப கட்டத்தில், அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக முறைக்கு துணைபுரியும் இடைமுகமாக (interface) தொழில்நுட்பம் வெளிப்பட்டது. 1976-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய தகவல் மையம் (National Informatics Centre (NIC)) இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் பாதைக்கு அடித்தளம் அமைத்தது. அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களை கணினிகள் மூலம் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எளிய இலக்குடன், அப்போது அது ஏராளமான இந்தியர்களுக்குப் ஒரு புதுமையாக இருந்தது. 


தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு அரசுத் துறைகளில் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் ‘தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை’ (technology-driven solutions) முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில், தேசிய தகவல் மையம் 1987-ஆம் ஆண்டில் தேசிய தகவலியல் மைய வலையமைப்பு (National Informatics Centre Network (NICNET)) எனப்படும் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான வலையமைப்பை உருவாக்கியது. நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காக அரசு அலுவலகங்களில் தொழில்நுட்பத்தை ஒரு பின்னணி கருவியாக (back-end tool) அறிமுகப்படுத்த ஒரு முறையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையை (reservation system) அறிமுகப்படுத்தியதில் இதன் விளைவு முதன்முதலில் காணப்பட்டது. இது நீண்ட மற்றும் எளிமையான கையேடு செயல்முறையை நேரடியான, முறையான நடைமுறையாக மாற்றியது. இந்த வெற்றி வருமான வரித் துறையை வரி பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கவும், தேர்தல் ஆணையத்தை கணினிமயமாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் ஊக்குவித்தது.


இருப்பினும், தேசிய தகவல் மையத்தின் கீழ் (National Informatics Centre (NIC)) இந்த திட்டங்கள் முக்கியமானவை என்றாலும், பெரும்பாலான மக்கள் அவற்றை கவனிக்கவில்லை. திரைக்குப் பின்னால் வேலை செய்யும் ஒரு உதவியாளரைப் போல, தொழில்நுட்பம் அரசாங்கத்தை விரைவாகச் செயல்பட வைத்தது, ஆனால் மக்கள் அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்தார்கள் என்பதை அது மாற்றவில்லை.

1990-களில், இந்தியா தனது பொருளாதார தாராளமயமாக்கல் (economic liberalisation) பணிகளை நாடு முழுவதும் சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செய்வதில் கவனம் செலுத்தின. பல்வேறு மாநிலங்களால் தொடங்கப்பட்ட மின்-ஆளுகைத் திட்டங்கள் முக்கியமான திருப்புமுனைகளாக இருந்தன. மேலும் பின்-அலுவலக கணினி பயன்பாட்டிலிருந்து குடிமக்களுக்கு நேரடியாக சேவைகளை (front-end service) வழங்குவதற்கு மாற்றியது.


குறிப்பாக, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவின் தனிப்பட்ட மாநிலத் தலைமைதான் குடிமக்களுக்கு நேரடியாகச் சேவை செய்வதற்கான தொழில்நுட்பத்தின் திறனை முதலில் ஏற்றுக்கொண்டது. 1999-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இ-சேவா (e-Seva) போன்ற திட்டங்கள், ஒற்றைச் சாளரம் (single window) மூலம் பல அரசு சேவைகளை வழங்குவதற்கு உதவியது. 


இதேபோல், 2000-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட Gyandoot, பழங்குடியினப் பகுதிகளுக்கு அரசு சேவைகளைக் கொண்டுவருவதற்காக கிராமப்புற சைபர் கணினிக்கூடாரங்களை (cyber kiosks) உருவாக்கியது. 2001-ஆம் ஆண்டு கர்நாடகாவில் தொடங்கப்பட்ட பூமி திட்டம், விவசாயிகளின் நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கியது. இதன் மூலம் சொத்து ஆவணங்களில் புரட்சியை ஏற்படுத்தியது மற்றும் குறைந்த உள்கட்டமைப்பு கொண்ட கிராமப்புறங்களில்கூட உள்ளூர் மட்டத்தில் நிர்வாகத்தைக் வெளிப்டையானதாக மாற்றியது.


கேரளாவில் உள்ள FRIENDS திட்டமும் உத்தரபிரதேசத்தில் உள்ள Lokvaani திட்டமும் இந்தியாவின் பல்வேறு சமூக-பொருளாதார நிலப்பரப்பில் மின்-ஆளுகை செயல்படும் என்பதையும், சேவை வழங்கலில் உள்ள இடைவெளிகளை, பிரிந்து இருந்தாலும், டிஜிட்டல் கருவிகளின் திறனை மேம்படுத்தும் என்பதையும் நிரூபித்தன.

இருப்பினும், இந்த முன்னோடி முயற்சிகள் முறையான வரம்புகளையும் வெளிப்படுத்தின. உதாரணமாக, Gyandoot திட்டத்தில் உள்ள பல கணினிக்கூடாரங்ள் மோசமான இணைப்பு மற்றும் நிலையான வருவாய் மாதிரிகள் காரணமாக செயல்படவில்லை. இது சோதனைத் திட்டப் பழக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும். வெற்றிகரமான அளவீடுகளை அளவிடத் தவறியது.


2005-2014 வரையிலான இந்தியாவின் மின்-ஆளுகைப் பயணத்தின் இரண்டாம் கட்டமானது முந்தைய மாநில அளவிலான முன்முயற்சிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இந்த கால கட்டத்தின் போது தொழில்நுட்பமானது வெறும் பின்பு (back-end) ஆதரவுக் கருவியாக இருந்து, பாரம்பரிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் இருந்தாலும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையே செயலில் உள்ள இடைமுகமாக உருமாறியது/ 2006-இல் தேசிய மின்-ஆளுமைத் திட்டம் (National e-governance Plan (NeGP)) தொடங்கப்பட்டதன் மூலம், நிர்வாகத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பாக இரண்டாவது கட்டம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பம் இருந்தது.


இணைப்புக்காக மாநில அளவிலான பகுதி வலையமைப்புகள் (State Wide Area Networks (SWANs)), கிராமப்புற அணுகல் புள்ளிகளாக பொது சேவை மையங்கள் (connectivity, Common Service Centres (CSCs)) மற்றும் பயன்பாடுகளை வழங்குவதற்கான மாநில தரவு மையங்கள் (State Data Centers (SDCs)) ஆகியவற்றை நிறுவுவது மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளில் மின்-ஆளுகையை அளவிடுவதற்குத் தேவையான இயற்பியல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியது.


இந்தியாவின் டிஜிட்டல் உந்துதலில் ஒரு உண்மையான முக்கிய தருணம் 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் அடையாளத்தைச் சுற்றி நிர்வாகத்தை மறுவரையறை செய்தது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான குடிமக்களின் பயோமெட்ரிக் விவரங்களைச் சேகரிப்பதன் மூலம், பரந்த அளவிலான சேவைகளில் தனிநபர்களை அங்கீகரிக்கும் திறன்கொண்ட ஒருங்கிணைந்த அடையாள கட்டமைப்பை அது நிறுவியது.


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) எண்களை ஒதுக்கியது மட்டுமல்லாமல், நலன்புரி பரிமாற்றங்கள், வங்கி அணுகல் மற்றும் பரந்த நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்யும் ஒரு அங்கீகார கட்டமைப்பையும் உருவாக்கியது. அடுத்தடுத்த டிஜிட்டல் முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.


இருப்பினும், ஆதாரின் கட்டாய இணைப்புகள் தனியுரிமை, பயோமெட்ரிக் தோல்விகளில் இருந்து விலக்குதல் பிழைகள் மற்றும் ஒரு கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்குதல் பற்றிய கவலைகளை எழுப்பியது. இருப்பினும், இந்த காலகட்டத்தில், தொழில்நுட்பம் நவீன நிர்வாகத்தின் உள்கட்டமைப்பாக மாறியது.


2015-2019-இலிருந்து மூன்றாம் கட்டம், தொழில்நுட்பத்தை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றியது, ஏற்கனவே உள்ள சேவைகளை டிஜிட்டல் மயமாக்காமல், நிர்வாகத்திற்கும் குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் முற்றிலும் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கும் தளங்களை உருவாக்குவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. 2015ஆம் ஆண்டில், டிஜிட்டல் இந்தியாவின் துவக்கம் ஒரு தத்துவ மாற்றத்தை அடையாளப்படுத்தியது: தொழில்நுட்பம் வெறும் உள்கட்டமைப்பு மட்டுமல்ல. வெவ்வேறு தளங்கள் தடையின்றி தொடர்பு கொள்ளக்கூடிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூழலாகும்.


ஜன் தன், ஆதார், மொபைல் (Jan Dhan, Aadhaar, Mobile) டிஜிலாக்கர் மற்றும் BHIM போன்ற தளங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை, நலன்புரி, நிதி உள்ளடக்கம் மற்றும் ஆவணங்களை தடையின்றி வழங்கக்கூடிய ஒன்றோடொன்று இயங்கக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளாக நிலைநிறுத்தின. 'இயக்கதளமயமாக்கலின்' சாராம்சம், தனிப்பட்ட சேவைகளை மீறிய ஒன்றோடொன்று இயங்கக்கூடிய டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் உள்ளது. திறந்த பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் தொகுப்பு (ஆதார் அங்கீகாரம், e-KYC, e-Sign மற்றும் UPI) டிஜிட்டல் தண்டவாளங்களாக மாற்றப்பட்ட இந்த அணுகுமுறையை இந்தியா ஸ்டாக் எடுத்துக்காட்டுகிறது, அதில் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் உருவாக்க முடியும்.


இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (Unified Payments Interface (UPI)) வேகமான வளர்ச்சி - 2016-ல் 0.01 மில்லியன் பரிவர்த்தனைகளிலிருந்து 2025-ல் மாதந்தோறும் 18 பில்லியனாக - பயனர் தரப்பிலிருந்து பணம் செலுத்துவதற்கான வசதியைப் பற்றியது மட்டுமல்ல. வணிகர் கொடுப்பனவுகள் முதல் கடன் வழங்கல் வரை, தளக் கட்டமைப்பு எவ்வாறு புதுமைகளின் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்க முடியும் என்பதை இது நிரூபித்தது.


இந்த இயங்குதள தர்க்கம் UMANG போன்ற நிர்வாகக் களங்களில் விரிவடைந்தது. இது 1,745 அரசாங்க சேவைகளை ஒருங்கிணைத்தது வசதிக்காக மட்டும் அல்ல. ஆனால், பயனர் தரவு மற்றும் சரிபார்ப்பு வெவ்வேறு அரசுத் துறைகளுக்கு இடையே சுமூகமாக நகரவும், இணைக்கப்பட்ட மற்றும் திறமையான அமைப்பை உருவாக்கவும் இது அனுமதித்தது.


இதேபோல், அரசாங்க இ-மார்க்கெட்டின் பொது கொள்முதல் தளம் டெண்டர்களை டிஜிட்டல் மயமாக்கவில்லை. ஆனால், ஒரு சந்தை மாறும் தன்மையை உருவாக்கியது. அங்கு வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டி பதிக்கப்பட்ட ஒரு சந்தை இயக்கவியலை உருவாக்கியது. எனவே, இந்த கட்டத்தில், அரசாங்கம் இனி டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில்லை. மாறாக, மூன்றாம் தரப்பினர் அதன் மேல் புதுமைகளைச் செய்ய உதவும் கொள்கை உள்கட்டமைப்பை உருவாக்கி, தொழில்நுட்பத்தை நவீன நிர்வாகம் (modern governance) செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றியது.

இருப்பினும், வலைதளமயமாக்கல் (Platformisation) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தரவு சக்தியைக் குவித்தது. உதாரணமாக, ஆதாரின் அங்கீகாரப் பதிவுகள் விரிவான குடிமக்கள் சுயவிவரங்களை உருவாக்கும் திறனைக் கொண்டிருந்தன. இது பல்வேறு கவலைகளை எழுப்பியது. மேலும், ஆதாரின் அடிப்படை தொழில்நுட்ப நுட்பத்தால், அங்கீகார தோல்விகள் காரணமாக நேரடி நன்மை பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) விலக்குகளை சரிசெய்ய முடியவில்லை. இதனால், உண்மையான பயனாளிகளுக்கு மிகவும் தேவையான நலத்திட்டங்கள் கிடைக்காமல் போய்விட்டன.


பொதுச் சேவையிலிருந்து இயங்குதள தர்க்கத்திற்கு மாறுவது, ஆழ்ந்த பதற்றத்தை ஏற்படுத்தியது: குடிமக்கள் ஆளுகையில் உரிமைகள் கொண்ட நபர்களாக குறைவாகவும், தரவு உருவாக்கும் பயனர்களாகவும் கருதப்படும் அபாயம் உள்ளது.



Original article:

Share: