சிறிய மாநிலங்கள் பரிமாற்றங்களைச் சார்ந்து இருக்கின்றன. அதே, நேரத்தில் பெரிய மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களையும் கடன் வாங்குவதையும் அதிகம் நம்பியுள்ளன. இருப்பினும், அடிப்படைப் பிரச்சனை இரண்டிற்கும் ஒன்றுதான்.
மாநில நிதி குறித்த சமீபத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கை, நிதி வருவாய் குறையும் போதெல்லாம், இந்திய மாநிலங்கள் அதிகரித்த கடன்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பத்திரங்கள் மூலம் பற்றாக்குறை இடைவெளியைக் குறைக்க முனைகின்றன. இது அவர்களின் பொதுக் கடனை (public debt) படிப்படியாக அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த முறை தீவிரமடைந்துள்ளது. தொற்றுநோய்களின் போது, வருவாய் சரிவு மற்றும் அவசரகால செலவினங்கள் ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்தையும் எதிர்பாராத அளவு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியது.
2022–23ஆம் ஆண்டிற்கான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) தரவுகள், 2016–17 மற்றும் 2022–23-ஆம் ஆண்டிற்கு இடையில் கடன் வாங்கும் பழக்கம் நிறைய மாறியிருப்பதைக் காட்டுகின்றன. சிறிய மாநிலங்கள் பரிமாற்றங்களைச் சார்ந்து இருக்கின்றன. அதே, நேரத்தில் பெரிய மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களையும் கடன் வாங்குவதையும் அதிகம் நம்பியுள்ளன.
இந்தியாவின் நிதிநிலை பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. பெரிய மாநிலங்கள் பெரிய பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் அதிக பொறுப்புகளைக் கொண்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு புள்ளியியல் மற்றும் அமலாக்க அமைச்சக தரவின்படி, ராஜஸ்தான் 342,239 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியது. இது பல நாடுகளைவிட பெரிய பரப்பளவாகும். அதே, சமயம் மத்தியப் பிரதேசம் (308,252 சதுர கிமீ), மகாராஷ்டிரா (307,713 சதுர கிமீ) மற்றும் உத்தரப் பிரதேசம் (240,928 சதுர கிமீ) பெரிய பரப்பளவைக் கொண்ட மாநிலங்கள் ஆகும்.
இந்த மாநிலங்களின் பெரிய அளவு நன்மைகள் மற்றும் சவால்கள் இரண்டையும் கொண்டுவருகிறது. நாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கும் மற்றும் பெரிய நலத்திட்டங்களை நிர்வகிக்கும் பெரிய, மாறுபட்ட பொருளாதாரங்களை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் நிதி உத்திகள் தேசிய அளவில் எதிரொலிக்கின்றன. 2022–23-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா தனது வருமானத்தில் ஏறக்குறைய 70%-ஐ சொந்தமாக ஈட்டியது. பணம் திரட்டுவதற்கான வலுவான திறனை அந்த மாநிலம் வெளிப்படுத்தியது. அதே, நேரத்தில் மற்ற மாநிலங்கள் அதிக நிலையற்ற ஆதாரங்களைச் சார்ந்துள்ளன. கேரளா லாட்டரி விற்பனையிலிருந்து ஏறக்குறைய ₹12,000 கோடி சம்பாதித்தது. ஆனால், அத்தகைய வருமானத்தை நம்பியிருப்பது ‘குடும்ப மதிப்புமிக்க பொருட்களை விற்று வாடகை செலுத்துவது’ (paying rent by selling family heirlooms) போன்ற ஆபத்தான நடவடிக்கையாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் - இது இப்போதைக்கு உதவக்கூடும். ஆனால், இது ஒரு நீண்டகால தீர்வாகாது.
மறுமுனையில், அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் போன்ற சிறிய இந்திய மாநிலங்கள் அவற்றின் சிறிய அளவு மற்றும் புவியியல் நிலைமைகள் காரணமாக தனித்துவமான நிதி சவால்களை எதிர்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, இமாச்சலப் பிரதேசம் (55,673 சதுர கி.மீ), உத்தரகண்ட் (53,483 சதுர கி.மீ), மேகாலயா (22,429 சதுர கி.மீ), மற்றும் சிக்கிம் (7,096 சதுர கி.மீ) ஆகிய வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட சிறிய மாநிலங்கள், அவற்றின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறன.
கோவா மிகச்சிறிய கடற்கரை மாநிலமாகும். இது 3,702 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது. இது மிகவும் சிறிய எடுத்துக்காட்டாக அமைகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்பு, பரவியிருக்கும் குடியிருப்புகள் மற்றும் குறுகிய பொருளாதார தளங்கள் பெரும்பாலான சிறிய மாநிலங்களில் விநியோக செலவுகளை உயர்த்துகின்றன மற்றும் வருவாய் திரட்டுவதில் தடையாக உள்ளன.
2022–23ஆம் ஆண்டில், உத்தரகாண்ட் அதன் சொந்த வரிகளிலிருந்து 35% வரி வருவாயை ஈட்டியது. அருணாச்சலப் பிரதேசம் 9% மட்டுமே வருவாயை ஈட்டியது. பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் தங்கள் சொந்த வரிகளிலிருந்து 20%-க்கும் குறைவாகவே பெறுகின்றன. இந்த மாநிலங்கள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் நிதியையே அதிகம் சார்ந்துள்ளன. அவர்களுக்கு வருமானம் குறைவாகவே உள்ளது. ஆனால், அவர்களின் கடமைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, புவியியல் மற்றும் திறனுக்கு ஏற்ப தேர்வுகளை மேற்கொள்கின்றன.
குறுகிய வரி அடிப்படைகள் மற்றும் அதிக விநியோகச் செலவுகளுடன், கடன் வாங்குவதில் ஏற்படும் மிதமான அதிகரிப்பு, சிறிய மாநிலங்களின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களை பெரிய மாநிலங்களுக்கு இதுவரை இல்லாத ஆபத்தான சூழலை ஏற்படுத்தும்.
அசாம் இந்தப் பிரச்சனையை தெளிவாகக் காட்டுகிறது. அதன் கடன் 2016-17ஆம் ஆண்டில் ரூ.3,902 கோடியிலிருந்து 2022-23ஆம் ஆண்டில் ரூ.28,270 கோடியாக அதிகரித்தது. இது 2023-ஆம் ஆண்டில் அதன் கடன் அதன் பொருளாதாரத்தில் 28.5% ஆக அதிகரித்தது. இமாச்சலப் பிரதேசத்தின் கடன் வாங்குதலும் ரூ.8,603 கோடியிலிருந்து ரூ.22,372 கோடியாக உயர்ந்தது, கடன் அதன் பொருளாதாரத்தில் 43-44%-ஆக உயர்ந்துள்ளது. மணிப்பூர் மற்றும் மேகாலயா மொத்தமாக குறைவாக கடன் வாங்கினாலும், 2022-23-ஆம் ஆண்டில் மாநிலத்தின் கடனை ரூ.11,116 கோடி மற்றும் ரூ.6,221 கோடியாக அதிகரித்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, 2020-21-ஆம் ஆண்டில் கோவா கடன் வாங்குவதை ரூ.7,655 கோடியாக இருந்த உச்சத்திலிருந்து 2022-23ஆம் ஆண்டில் ரூ.2,628 கோடியாக கடுமையாகக் குறைத்தது. இதனால், கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. திரிபுரா ரூ.877 கோடியாகக் குறைவாகக் கடன் வாங்கியது. ஆனால், அதன் கடன் 30%-க்கும் அதிகமாகவே இருந்தது. ஏனெனில், அது ஒரு சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 2020-க்குப் பிறகு நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவதைக் குறைத்தன. ஆனால், அவற்றின் கடன்கள் 45-47% ஆகவும், அவற்றின் பொருளாதாரத்தில் 34% ஆகவும் உயர்ந்தன.
2016–17 மற்றும் 2022–23ஆம் ஆண்டிற்கு இடையில், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் அதிகமாக உள்ளன. ஆந்திரப் பிரதேசம் நீடித்த விரிவாக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. 2016–17-ஆம் ஆண்டில் ரூ.59,923 கோடியிலிருந்து 2022–23-ஆம் ஆண்டில் ரூ.1,86,024 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் பொறுப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.1 சதவீதமாக உள்ளது. ராஜஸ்தானின் கடன் ரூ.1,60,565 கோடியாக உயர்ந்து. அதன் கடன் விகிதம் (debt ratio) 37.3% ஆகும். தெலுங்கானாவின் கடனும் ரூ.1,26,884 கோடியாக அதிகரித்தது, ஆனால், அதன் கடன் அதன் பொருளாதாரம் 26.2% உடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. தொற்றுநோய்க்குப் பிறகு மற்ற மாநிலங்கள் கடன் வாங்குவதைக் குறைத்தன. 2020–21-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் கடன் ரூ.11,18,516 கோடியாக உயர்ந்தது. பின்னர், ரூ.194,702 கோடியாகக் குறைந்தது. மகாராஷ்டிரா ஒரு பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால், அதன் கடன் மொத்தப் பொருளாதாரத்தில் 18.1% ஆகவே இருந்தது.
இரண்டு மாநிலங்களும் மிகவும் வேறுபட்டவை. ஒடிசா தனது கடனை ₹5,347 கோடியாகக் குறைத்து. அதிக வருவாய் ஈட்டியதன் மூலமும், செலவினங்களில் கவனமாக இருந்ததன் மூலமும் தனது கடனை 19.5% ஆக வைத்திருந்தது. மறுபுறம், பஞ்சாப் சமமற்ற முறையில் கடன் வாங்கியது. ஆனால், இன்னும் 47.1% அளவுக்கு மிக அதிக கடனைக் கொண்டுள்ளது. இது தொடர்ச்சியான நிதிச் சிக்கல்களைக் காட்டுகிறது.
மகாராஷ்டிராவைப் போல விரிந்திருந்தாலும் அல்லது மேகாலயாவைப் போல சிறியதாக இருந்தாலும், மாநிலங்கள் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றன: அவர்களின் நலன் சார்ந்த லட்சியங்கள் தொடர்ந்து அவர்களின் நிதி வழிகளைவிட அதிகமாக உள்ளன. கடன் வாங்கும் முறைகள் அளவு மற்றும் அளவுகளில் வேறுபடலாம். ஆனால், அடிப்படை முரண்பாடு ஒன்றுதான்: அரசாங்க நலத்திட்டங்கள் விரிவடைந்து வருவதால், நிதிப் பற்றாக்குறையும் (Fiscal fragility) வலுவாக உள்ளது.
காகிதத்தில், பல மாநிலங்கள் சமநிலையான அல்லது உபரி நிலைகளைக் காட்டுகின்றன. உண்மையில், இந்த மாநிலங்கள் ஒன்றிய அரசிடமிருந்து வரும் பணம், மறைக்கப்பட்ட கடன்கள் மற்றும் தாமதமான திருப்பிச் செலுத்துதல்களையே அதிகம் நம்பியுள்ளன. பஞ்சாபில் அதிக கடன்களுடன் நீண்டகால பணப் பிரச்சினைகள் உள்ளன. கேரளா லாட்டரி விற்பனையையே அதிகம் சார்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை பெரிய விவசாயக் கடன் தள்ளுபடிகள் மற்றும் இலவச மின்சாரத்திற்கு சிறப்பு முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துகின்றன. அவை, உண்மையான செலவுகளை தங்கள் பட்ஜெட்டிலிருந்து மறைக்கின்றன.
இந்தியா, உலகின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், அதன் நிதி நிலைமை மிகவும் பலவீனமாக உள்ளது. அரசுக்கு பெரிய லட்சியங்கள் உள்ளன. நிறைய செய்ய முயற்சிக்கின்றன. இதன் விளைவாக, பலருக்கு உதவ முயற்சிக்கும் போதுமான வளங்கள் இல்லாத ஒரு அரசாங்கம் உருவாகிறது. எனவே, மக்களைப் பராமரிப்பதற்கும் பணப் பற்றாக்குறைக்கும் இடையில் ஒரு கவனமான சமநிலையை இது உருவாக்குகிறது.
மோகன், பொருளாதாரப் பேராசிரியராகவும், OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் டீனாகவும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வருகைதரு பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AMES என்ற ஆராய்ச்சிக் கூட்டாளராகவும் உள்ளார். லாசரஸ் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோர் OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வு மையத்தின் (Centre for New Economics Studies (CNES)) ஆராய்ச்சி ஆய்வாளர்கள்.