தற்போதைய நிகழ்வு :
மனதைத் தொடும் ஒரு செயலாக, அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் பிறந்த யானைக்கன்றுக்கு, மறைந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் பிரபலமான பாடலான 'மாயாபினி' (Mayabini) நினைவாகப் பெயரிடப்பட்டது. இது அவரது இறுதிச் சடங்குகளின் போது அவரது ரசிகர்களுக்கான கீதமாக உருவெடுத்தது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை "மனதைக் கவரும் நிகழ்வாக" (heartwarming) குறிப்பிட்ட அசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி, "காடுகளில் புதிய வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கம்" ஆகியவற்றைக் குறிக்கும் புதிதாகப் பிறந்த யானைக் கன்றுக்கு "மாயாபினி" என்று பெயரிடுவதற்கான அமைச்சகத்தின் முடிவை சனிக்கிழமை அறிவித்தார்.
X-வலைதளத்தில் செய்தியைப் பகிர்ந்துகொண்டு, படோவரி குறிப்பிட்டதாவது, "உலக விலங்கு தினத்தன்று மகிழ்ச்சியான செய்தி - காசிரங்காவைச் சேர்ந்த குவாரி என்ற யானை ஆரோக்கியமான பெண் கன்றைப் பெற்றெடுத்ததாக அவர் அறிவித்தார். பொதுமக்களின் நல்லெண்ணத்துடனும், அந்தக் கன்றுக்கு “மாயாபினி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது காடுகளில் புதிய வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் காடுகளின் நல்லிணக்கத்தின் சின்னம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
முக்கிய அம்சங்கள்:
இந்த ஆண்டு செப்டம்பர் 19 அன்று, அஸ்ஸாமைச் சேர்ந்த மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜூபீன் கார்க், சிங்கப்பூரில் நீச்சல் விபத்தில் இறந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 52 ஆகும். மேலும், அவர் 40 வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 38,000 பாடல்களை எழுதி இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல இசைக்கருவிகளை வாசிக்கக்கூடியவர் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இசை காணொலிகளை இயக்கி நடித்துள்ளார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக அசாமில் ஒரு வழிபாட்டு நிகழ்வை உருவாக்கினார்.
2001-ல் வெளியிடப்பட்ட ‘மாயாபினி’ பாடலை ‘டாக்’ ஆல்பத்திற்காக ஜூபீன் கார்க் மற்றும் கல்பனா படோவரி இணைந்து பாடியுள்ளனர். மேலும், இது அசாமிய இசைத் துறையின் ஒரு வழிபாட்டு முறையின் வெற்றியாகப் பாராட்டப்படுகிறது.
ஜூபீனை அறிவது ஏன் முக்கியம்?
முர்ச்சனா கௌஷிக், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய ‘பிளவுபட்ட அசாமில் ஜூபீன் கார்க் ஒற்றுமையின் அடையாளமாக மாறியது எப்படி’ என்பதிலிருந்து ஒரு பகுதி இங்கே குறிப்பிட்டுள்ளது,
"வரலாற்று ரீதியாக அஸ்ஸாமானது தேசம் பற்றிய கருத்து வேறுபாடுகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் பல இயக்கங்கள் வெவ்வேறு அடையாளங்களை வலியுறுத்த வழிவகுத்தன. அசாம் இயக்கம், அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோற்றம், பல்வேறு பழங்குடி குழுக்களின் அடையாள வலியுறுத்தல்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை சமீபத்திய முக்கிய நிகழ்வுகளாகும். இப்பகுதி எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டது என்பதையும், வெவ்வேறு குழுக்கள் எவ்வாறு முரண்பட்ட நலன்களைக் கொண்டுள்ளன என்பதையும் காட்டுகின்றன. இந்தப் பிரச்சினைகள் சமூகம், அரசியல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை வடிவமைத்துள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தின் சமூக-அரசியல் யதார்த்தத்தை வகைப்படுத்தும் இந்த மோதல்கள் மற்றும் படிநிலைகளை ஜூபீன் புரிந்து கொண்டார் மற்றும் அவரது மனிதாபிமான அணுகுமுறையால் அவற்றிலிருந்து மேலே உயர முயன்றார். சாதி, மதம், இனம், மொழி, போன்ற சமூக கலாச்சார அடையாளங்களுக்கு கட்டுப்படாத ஒரு பொதுவுடைமையாக (socialist) அவர் தன்னைப் பார்த்தார். இந்தக் கண்ணோட்டம் அவரை ஜூபீன் டா என்று அறிய வைத்தது.
1990-களின் முற்பகுதியில், ஜூபீனின் அசாமிய இசையானது புதிய காற்றின் சுவாசம் (breath of fresh air) என்று பலர் நினைக்கிறார்கள். அவரின் இசையானது, அஸ்ஸாமின் சிக்கலான கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்கும், சிறந்த முறையில் எதிர்காலத்தை நோக்கி கனவு காண மக்களுக்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுவதற்கான ஒரு வழியாகவும் அமைகிறது. ஜூபீனின் ராக் மற்றும் பாப் இசையின் பாணி (rock and pop style) அசாமிய இசைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்ததாக இளைஞர்கள் அடையாளம் கண்டதாக குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இன்னும் சிலர், அவரது நேரடியான இயல்பையும் இசையின் கருவி என்று அழைக்கும் திறனையும் எடுத்துக்காட்டுகின்றனர்.
இந்த குணம் அனைவருக்கும் விருப்பமுள்ள, குறிப்பாக இளைஞர்களிடையே அவரை அச்சமற்ற, துணிச்சலான மற்றும் சரியான காரணத்திற்காகப் பேசுபவர் என்று பார்த்தார்கள். பிஹு விழாக்களில் இந்திப் பாடல்களை பாடுவதற்கு உல்ஃபா தடை விதித்ததற்கு (ULFA’s ban) எதிரான அவரது நிலைப்பாடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான அவரது குரல் ஆகியவை அவரது எதிர்ப்பின் எடுத்துக்காட்டுகளில் அடங்கும். அவரது தாராள மனப்பான்மை, ஏழைகளுக்கு உதவ பல முன்முயற்சிகளால் எடுத்துக்காட்டுகிறது. அவரது மரணத்திற்குப் பிறகு பலரால் முன்னிலைப்படுத்தப்பட்டது.
காசிரங்கா தேசிய பூங்கா (Kaziranga National Park) : இது அசாமின் கோலாகாட், நாகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது 1985-ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த தேசிய பூங்கா அதன் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு பிரபலமானது மற்றும் பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்பி (மிகிர்) மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா யானைகள், காட்டு நீர் எருமைகள், கங்கை நதி டால்பின் மற்றும் சதுப்பு மான்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. காசிரங்கா 2006-ல் புலிகள் காப்பகமாக (Tiger Reserve) அறிவிக்கப்பட்டது. இந்த பூங்கா புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான பகுதியாகும்.
உலக விலங்கு தினம் (World Animal Day) : மாயாபினி உலக விலங்குகள் தினத்தில் பிறந்தது. இது உலகம் முழுவதும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்படுகிறது, இது விலங்குகளின் நிலையை உயர்த்தி, உலகளவில் நலவாழ்வு தரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சமூகப் பணியாகும். அக்டோபர் 4 ஆனது விலங்குகளின் புரவலர் புனிதரான அசிசியின் புனித பிரான்சிஸின் விழா நாளுடன் ஒத்துப்போகிறது. 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் “விலங்குகளைக் காப்போம், பூமியைக் காப்போம்!” ஆகும், இது அந்நாளின் 100வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.
பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (Mutual Legal Assistance Treaty (MLAT))
சிங்கப்பூரில் சூப்பர் ஸ்டார் ஜூபீன் கார்க்கின் (superstar Zubeen Garg) மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவ, சிங்கப்பூருடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை (Mutual Legal Assistance Treaty (MLAT)) செயல்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்திடம் அசாம் அரசு கோரியுள்ளது.
ஒரு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (MLAT) என்பது பொதுச் சட்டங்கள் அல்லது குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சியில் தகவல்களைச் சேகரித்து பரிமாறிக்கொள்ளும் நோக்கத்திற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாகும்.
சாட்சி அறிக்கைகள் அல்லது ஆவணங்களின் சேவை போன்ற சான்றுகள் அல்லது பிற வகையான சட்ட உதவிகள், ஒரு வெளிநாட்டு இறையாண்மையிடமிருந்து தேவைப்படும்போது, மாநிலங்கள் அந்தந்த காவல் முகமைகள் (police agencies) மூலம் முறைசாரா முறையில் ஒத்துழைக்க முயற்சி செய்யலாம் அல்லது அதற்கு மாற்றாக, பொதுவாக 'பரஸ்பர சட்ட உதவி' (mutual legal assistance) கோரிக்கைகள் என குறிப்பிடப்படுவதை நாடலாம்.