சர் சையத் அகமது கானை நினைவுகூர்தல் : அவர் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை ஆதரித்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இந்த மதிப்பீடுகளை முன்னெடுக்கிறது. -தாரிக் மன்சூர்

 ஒரு கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, கலாச்சாரப் பாதுகாவலர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், அரசியல் சித்தாந்தவாதி மற்றும் நிறுவனக் கட்டமைப்பாளர் என அவரது பரிமாணம் 1857 சுதந்திரப் போருக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தின் மீட்பராக இருப்பதைத் தாண்டி அவரை அழைத்துச் செல்கின்றன.


அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை (Aligarh Muslim University (AMU)) நிறுவியதற்காக மட்டுமே அறியப்பட்ட சர் சையத் அகமது கான் (1817-1898), இந்திய சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பன்முக ஆளுமை ஆவார். ஒரு கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, கலாச்சார பாதுகாவலர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், அரசியல் சித்தாந்தவாதி மற்றும் நிறுவன கட்டமைப்பாளர் என அவரது பரிமாணம் 1857 சுதந்திரப் போருக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தின் மீட்பராக இருப்பதைத் தாண்டி அவரை அடையாளப்படுத்துகிறது.


ஒருவரின் உரையை அவர்கள் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் மதிப்பிட வேண்டும். சர் சையதை இந்தியாவில் முஸ்லிம் பிரிவினைவாதத்தின் ஆதரவாளர் என்று பலர் விவரிக்கிறார்கள். அவரது சில எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் இது புரியும். சர் சையத் இரு தேசக் கோட்பாட்டிற்கு ஏதேனும் கருத்தியல் பகுத்தறிவை வழங்கினாரா? இந்த பொருத்தமான கேள்விக்கான பதில் அவரது தேசம் பற்றிய கருத்தில் உள்ளது. சர் சையத் "குவாம்" (Quam) என்ற வார்த்தையை தேசம் மற்றும் சமூகம் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தினார். அவர் அதை பெரும்பாலும் நாடு மற்றும் சமூகத்தின் கலவையாக, மதம் மற்றும் அதற்கு அப்பால் இணைக்கப்பட்டதாக விவரித்தார்.


கல்வி சீர்திருத்தத்தின் மிகவும் தேவையான திட்டத்தைத் தொடங்கி வைத்து, நவீன கல்வியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அறியாமையை ஒழிக்க இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுமாறு அவர் அழைத்தார். இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது முதல் முயற்சி 1875-ல் ஒரு பள்ளியை நிறுவுவதாகும். ஆரம்பத்தில், அவர் தேசம் பற்றிய தனது கருத்தை விளக்கினார். இதில், "மதரஸ்துல் உலூம் (1920-ல் ஒரு பல்கலைக்கழகமாக வளர்ந்த பள்ளி) 'தேசிய' முன்னேற்றத்திற்கான ஒரு வழிமுறையாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இங்கே 'தேசம்' என்ற வார்த்தையால், நான் முஸ்லிம்களை மட்டும் குறிக்கவில்லை, ஆனால் இந்துக்களையும் முஸ்லிம்களையும் குறிக்கிறேன்..." என்று அவர் குறிப்பிடுகிறார்.


இந்து-முஸ்லிம் உறவு அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு முக்கிய கொள்கையாகவே இருந்தது. அவர் துணை ஆட்சிக்குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். லாகூர் இந்திய சங்கம் (Indian Association of Lahore) அவருக்கு வரவேற்பு அளித்தது. உரைக்கு பதிலளித்த சர் சையத், குறுகிய அல்லது பிரிவினைவாத அணுகுமுறையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக விளக்கினார். “என் தேசத்திற்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பமாக இருந்தது. நாம் அனைவரும், இந்துக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, ஒரே மண்ணில் வாழ்கிறோம், ஒரே விதியால் ஆளப்படுகிறோம், நமது நன்மையின் அதே வளங்களைக் கொண்டுள்ளோம். பஞ்சத்தின் கஷ்டங்களை சமமாகப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவில் வசிக்கும் இரு சமூகங்களையும் தேசமாக நான் குறிப்பிடுவதற்கான பல்வேறு காரணங்கள் இவைதான் என்று அவர் கூறினார். உண்மையில், சர் சையத்தின் உள்ளடக்கம் மீதான கவனம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை வலியுறுத்தும் நமது தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy (NEP)) நெருக்கமாக ஒத்திருக்கிறது.


1877-ம் ஆண்டு முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் (Mohammedan Anglo-Oriental (MAO)) கல்லூரி தொடங்கப்பட்டதிலிருந்து இரு சமூகங்களுக்கிடையேயான அன்பான உறவு இருந்து வருகிறது. பின்னர் அது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக (Aligarh Muslim University (AMU)) மாறியது. பிரிட்டிஷ் ஆட்சி சமூகங்களிடையே வெறுப்பைப் பரப்ப முயன்றதால் இந்த நல்லிணக்கத்தைப் பேணுவது எளிதானது அல்ல. இருப்பினும், சர் சையத்தின் செயல்களும் வார்த்தைகளும் இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. உதாரணமாக, ராஜா ஜெய் கிஷன் தாஸ், பிஸ்மில்லா விழாவின்போது சர் சையத்தின் பேரன் ரோஸ் மசூத்தை தனது மடியில் வைத்துக் கொண்டார், இது கல்வியில் ஒரு பாரம்பரிய துவக்கமாகும். சர் சையத் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் (MAO) கல்லூரியில் ஒப்பீட்டு மதப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தினார். மேலும், பைபிளுக்கு விளக்கவுரை எழுதிய முதல் முஸ்லிம் இவர் ஆவார்.


கடினமான காலங்களில்கூட, அனைவரையும் வரவேற்பதன் மூலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) அதன் உள்ளடக்கிய தன்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 31 மாநிலங்கள் மற்றும் 26 வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் வருகிறார்கள், இதனால் பல்கலைக்கழகம் பல கலாச்சாரங்கள் செழித்து வளரும் இடமாக மாறியுள்ளது. முஸ்லிம் உலகத்துடன் நட்புறவை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.


சர் சையதின் மரபுக்கு மிகவும் பொருத்தமான அஞ்சலிகளில் ஒன்றை அளித்து, பிரதமர் நரேந்திர மோடி 2020ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றுகையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை “குறு இந்தியா (mini India)” என்று வர்ணித்தார். நாடு முதலில், பாகுபாடு இன்றி வளர்ச்சி என்ற கொள்கைகளை வலியுறுத்தி சர் சையதை நினைவுகூர்ந்த பிரதமர், “சர் சையத் கூறிய ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார், ‘தன் நாட்டைப் பற்றி அக்கறை கொண்டவனின் முதன்மையான கடமை, சாதி, மதம் அல்லது சமயம் பாராப்பற்று அனைவரின் நலனுக்காகவும் உழைப்பதாகும்.’ சர் சையத், ‘உடலின் ஒவ்வொரு உறுப்பும் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமானது போல, அனைவரின் வளர்ச்சியும் நாட்டின் செழிப்புக்கு இன்றியமையாதது.’ என்று கூறினார். இன்றுவரை, சர் சையதின் ஒளிவிளக்கு ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.


எழுத்தாளர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உத்தரபிரதேச சட்டமன்றத்தின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.



Original article:

Share: