தேர்தல்கள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ்

 ஹரியானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய "வாக்கு திருட்டு” குறித்த குற்றச்சாட்டுக்குப் பின், இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த தேர்தல் ஆணையத்தின் முக்கியமான கருவியான, வாக்காளர் பட்டியலில் போலி மற்றும் புகைப்படம்  ஒத்தப் பதிவுகளை அடையாளம் கண்டு பிரதியை நீக்கும் மென்பொருள் (deduplication software) இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது. 


முக்கிய அம்சங்கள்:


— ஆணையத்தின்  ஆதாரங்களின்படி, மத்திய மேம்பாடு மற்றும் மேம்பட்ட கணினி மையத்தால் (Centre for Development of Advanced Computing (CDAC)) உருவாக்கப்பட்ட இந்தக் கருவியானது, கடைசியாக 2022-ஆம் ஆண்டு வருடாந்திர சிறப்புச் சுருக்க திருத்தத்தின்போது (Special Summary Revision (SSR)) பயன்படுத்தப்பட்டது. அந்தப் பணி, நாட்டின் மொத்தப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஓர் அபூர்வமான சுருக்கத்திற்கு வழிவகுத்ததுடன், சுமார் 3 கோடி போலியான அல்லது செல்லாத வாக்காளர்களை நீக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

— இருப்பினும், அதற்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான அல்லது பிழைகள் நிறைந்த பதிவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும், இந்த மென்பொருள் பயன்படுத்தப்படவில்லை. கடந்த புதன்கிழமை அன்று, ராகுல் காந்தி அவர்கள், 2024-ஆம் ஆண்டு ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் "திருடப்பட்டதாக" குற்றம் சாட்டினார். அதில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள் அடங்குவர். அவற்றில், வெவ்வேறு பெயர்களைக் கொண்ட, ஆனால் ஒரே மாதிரியான புகைப்படங்களைக் கொண்ட பல பதிவுகளும் அடங்கும் என்றும், அதில் ஒன்று பிரேசிலிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின்  புகைப்படமும்  இடம்பெற்றது  என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


— போலி மற்றும் ஒரே மாதிரிப் புகைப்படங்களைக் கொண்ட பதிவுகள்  புதிதல்ல. ஆனால், ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புச் சுருக்க திருத்தத்தின்போது (Special Summary Revision (SSR)) அத்தகைய பதிவுகளைக் கண்டறிந்து நீக்குமாறு பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் மாநிலங்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. உண்மையில், தற்போது நடைபெற்றுவரும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான (Special Intensive Revision - SIR) ஜூன் 24-ஆம் தேதி உத்தரவும் இந்தப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதுதான்.


— ஆனால், சிக்கல் தொடர்கிறது. தற்போதைய மற்றும் முன்னாள் தேர்தல் ஆணைய  அதிகாரிகள் இதற்கு ஒரு காரணமாகச் சொல்வது என்னவென்றால், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான முயற்சிகளில் ஒரு காலத்தில் முக்கியப் பங்காற்றிய மென்பொருளின் பயன்பாடு குறைவாக இருப்பதுதான் என்கின்றனர்.


— மத்திய மேம்பாடு மற்றும் மேம்பட்ட கணினி மையத்தால் (Centre for Development of Advanced Computing (CDAC)) உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள், “ஒரேமாதிரியான புகைப்படப் பதிவுகள்” (Photo Similar Entries (PSE)) மற்றும் “மக்கள்தொகை ரீதியாக ஒத்தப் பதிவுகள்” (Demographically Similar Entries (DSE)), ஒரே நபருக்குரிய பல பதிவுககள் போன்றவற்றை கண்டறிய வடிவமைக்கப்பட்டது.


— 2008 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான தேர்தல் ஆணையத் தரவுகளின் பகுப்பாய்வு, 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி ஜனவரி 2023-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறப்புச் சுருக்க திருத்தத்தைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் வாக்காளர் பட்டியல்களில்  இரண்டு முறை  (2011 மற்றும் 2023-ஆம் ஆண்டில்) மட்டுமே திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது. 2022-23-ஆம் ஆண்டு சுருக்கம் பெரும்பாலும் போலிகளை நீக்கும் பயிற்சியால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 3 கோடி போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட போதிலும், பட்டியலில் நிகரக் குறைவு (net fall) 18.26 லட்சம் மட்டுமே.


— கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், அந்த மென்பொருளின் தற்போதைய நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், வீடுகள்தோறும் சரிபார்ப்பு நடைபெறாதபோது மட்டுமே தொழில்நுட்பரீதியாக போலி நீக்கம் பயன்படுத்தப்படுகிறது என்று பதிலளித்தார். இந்தச் சரிபார்ப்பு இப்போது சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.


— போலி வாக்காளர் நீக்கக் கருவி, வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு, ஒரே மாதிரியான புகைப்படங்களுடன் கொண்ட பதிவுகளைச் சரிபார்க்க உதவியது. இருப்பினும், வாக்காளர் புகைப்படங்களின் சீரற்ற தரம் காரணமாக அந்தக் கருவியின் துல்லியமும், செயல்திறனும் குறைந்தது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


— எதிர்கால திருத்தங்களில் கருவியை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. ஆனால், வாக்காளர் பட்டியலின் துல்லியம் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் போன்ற விவகாரங்கள் மீண்டும் பொது விவாதத்திற்கு வந்துள்ள நிலையிலும், மற்றும் பீகார் போன்று ஏற்கனவே சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் உள்ள மாநிலங்கள், ஒரே மாதிரியான புகைப்படங்கள் கொண்ட மற்றும் போலிப் பதிவுகள் போன்ற இந்த விவகாரங்கள், அளவு, தொழில்நுட்பம் மற்றும் நம்பகத்தன்மைக்கு இடையிலான தேர்தல் ஆணையத்தின் சமநிலைச் செயலை மீண்டும் சோதிக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.




உங்களுக்குத் தெரியுமா:


— அரசியலமைப்பின் பிரிவு 324(1), நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கான "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு" அதிகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.


— இந்திய தேர்தல் ஆணையம் என்பது யூனியன் மற்றும் இந்திய மாநிலங்களில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்குப் பொறுப்பான ஒரு நிரந்தர, சுதந்திரமான மற்றும் அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.


— பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது. நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற மாநில அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் மேற்பார்வையிடாததால், அந்தந்த மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையங்கள் உள்ளன.


— தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கும், அதன் சாத்தியமான  செயல்பாடுகள் பற்றிய புரிதலை வழங்குவதற்கும், அரசியலமைப்பில் பின்வரும் சட்டப்பிரிவுகள் (பிரிவுகள் 324–329) உள்ளன.


— பிரிவு 324: ஒவ்வொரு மாநிலத்தின் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான அனைத்து தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் நடத்துதல் ஆகியவற்றின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு.


— பிரிவு 325: மதம், இனம், சாதி, பாலினம் அல்லது அவற்றில் ஏதேனும் அடிப்படையில் எந்தவொரு நபரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படக்கூடாது.


— பிரிவு 326: மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் நடைபெறும் தேர்தல்களுக்கு வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையாக இருக்கும்.


— பிரிவு 327: இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் அவ்வப்போது சட்டங்களை இயற்றலாம்.


— ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், சட்டமன்றத்தின் அவை அல்லது இரண்டு அவைகளுக்கும் உரிய தேர்தல்கள் தொடர்பான அல்லது அவற்றுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்கள் குறித்தும் அவ்வப்போது சட்டம் மூலம் விதிமுறைகளை உருவாக்கலாம்.


— பிரிவு 329: தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை இந்தப் பிரிவு தடை செய்கிறது.



Original article:

Share: