திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயல்முறை பல நிலைகளாக நடைபெறுகிறது. ஒரு ஆய்வுக் குழு திரைப்படத்தைப் பார்த்து பரிந்துரை செய்கிறது. அதன் பிறகு திரைப்படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்படலாம். சில நேரங்களில் கட்டாயத் திருத்தங்களுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கேரள உயர்நீதிமன்றம் தற்போது Haal திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வருகிறது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் (Central Board of Film Certification (CBFC)) “A” சான்றிதழை கட்டாயமான தணிக்கைகளுடன் வழங்க முடிவு செய்ததால் இந்த சவால் எழுந்துள்ளது.
"திரைப்படத்தின் கதையானது சமூக-கலாச்சார இயக்கவியலைக் கையாளுகிறது மற்றும் மத உணர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மறுஆய்வுக் குழு ஒருமனதாக திரைப்படத்திற்கு மாற்றங்களுடன் “A” சான்றிதழை வழங்க பரிந்துரைத்ததாக வாரியம் தெரிவித்தது. வாரியத்தின் வழிகாட்டுதல்கள் திரைப்படத்தை முழுமையாக சிதைப்பதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் காவல்துறை, மதங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் சமூகத் தொடர்புகள் போன்ற பிரச்சனைகளை பற்றி பேசுகிறது. கிறிஸ்தவக் கல்லூரியின் பெயரை மாற்றுவது மதம் அடையாளம் பற்றிய காட்சிகளை மாற்றுவது போன்ற வாரியத்தால், திரைப்படத்தின் முக்கியமான அர்த்தத்தை சிதைப்பதாக மனுதாரர் வாதிடுகிறார்.
மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் (Central Board of Film Certification (CBFC)) என்றால் என்ன?
ஒளிப்பதிவுச் சட்டம், 1952 (Cinematograph Act), மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தை உருவாக்கி, திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன் திரைப்படங்களை ஆய்வு செய்ய அதற்கு அதிகாரம் அளித்தது. கொள்கையளவில், வாரியம் வெவ்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தை வகைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தடையற்ற (U) பார்வைக்கு, பெற்றோரின் வழிகாட்டுதலுடன் தடையற்ற பார்வைக்கு (UA), பெரியவர்களுக்கு மட்டும் (A) அல்லது குறிப்பிட்ட தொழில்முறை குழுக்களுக்கு மட்டும் (S) என திரைப்படங்களுக்கு சான்றளிக்கிறது.
இந்த கட்டமைப்பு இந்த ஆண்டு விரிவடைந்தது. அப்போது வயது அடிப்படையிலான "UA" குறிகள் — UA 7+, UA 13+, மற்றும் UA 16+ — அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த குறிப்பான்கள் குழந்தைகள் பார்ப்பதைத் தடுக்காது; எது பொருத்தமானது என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்கச் சொல்கின்றன. இன்றைய காலத்தின் பழக்கங்களுக்கு ஏற்றவாறு (streaming-era realities) இந்த யோசனை உள்ளது.
திரைப்படச் சான்றிதழ் எவ்வாறு செயல்படுகிறது?
இந்தச் சட்டம், ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு மாற்றங்களைக் பரிந்துரைக்க வாரியத்திற்கு அனுமதி வழங்குகிறது. வழிகாட்டும் தரநிலை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான அரசியலமைப்பு வரம்புகளின் பட்டியல் ஆகும். பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதால், இந்த உரிமைகளில் எந்தவொரு தலையீடும் மிகக் குறுகிய அரசியலமைப்புச் சட்டக் காரணங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்த அடிப்படைகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்பு உறவுகள், பொது ஒழுங்கு, அல்லது குற்றம் செய்வதற்கு தூண்டுதலைத் தடுத்தல் ஆகியவை அரசியலமைப்பின் 19(2) பிரிவின்கீழ் “நியாயமான கட்டுப்பாடுகள்” (reasonable restrictions) என பட்டியலிடப்பட்டுள்ளன. சட்டத்தின் பிரிவு 5B(1) பொதுமக்களுக்கு திரைப்படங்களைக் காண்பிக்கும்போது அதே விதிகள் பொருந்தும் என்று கூறுகிறது. திரைப்படங்கள் பொதுக் காட்சிக்கு அனுமதிக்கப்படுவதற்கு, இது போன்ற நியாயமான கட்டுப்பாடுகளை அந்த திரைப்படங்கள் பின்பற்ற வேண்டும்.
கோட்பாட்டளவில், இது தணிக்கைகளுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் (Central Board of Film Certification (CBFC)) மத்திய அரசு வெளியிட்ட நிர்வாக வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இது மத உணர்வுகள், சட்டம் மற்றும் ஒழுங்கு அபாயங்கள் அல்லது காவல்துறை போன்ற அமைப்புகளின் சித்தரிப்பு தொடர்பான கவலைகள் மூலம் விளக்கப்படும் ஒரு பரந்த பொது நலன் சார்ந்த பார்வைக்கு இடமளிக்கிறது. Haal திரைப்படத் தயாரிப்பாளர்கள், சட்டம் அனுமதிக்கும் அதிகாரத்தைவிட அதிகமாக வாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.
திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயல்முறை நிலைகளாக நடைபெறுகிறது. ஒரு ஆய்வுக் குழு (examining committee) திரைப்படத்தைப் பார்த்து பரிந்துரை செய்கிறது. அதன்பிறகு திரைப்படம் மறுஆய்வுக் குழுவுக்கு (revising committee) அனுப்பப்படலாம். சில நேரங்களில் கட்டாயத் திருத்தங்களுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் உடன்படவில்லை என்றால், உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம். முன்பு, ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இருந்தது. ஆனால், அது 2021-ஆம் ஆண்டில் அந்த தீர்ப்பாயம் ஒழிக்கப்பட்டது. மேல்முறையீட்டு அமைப்பு நீக்கப்பட்டதிலிருந்து, Haal போன்ற வழக்குகள் இப்போது நடைமுறை மற்றும் உள்ளடக்க சிக்கல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேரடியாக உயர் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன. மனுதாரர்கள் தங்களுக்கு சரியான நேரத்தில் எழுத்துப்பூர்வ காரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், திருத்தக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது விளக்கப்படவில்லை என்றும், இதனால் படத்தின் வெளியீட்டைத் திட்டமிடுவதில் நிச்சயமற்றத் தன்மை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
நீதிமன்றங்கள் எப்போது தலையிட முடியும்?
அக்டோபர் 2025-ல், டெல்லி உயர் நீதிமன்றம் "The Taj Story” வெளியீட்டில் தலையிட மறுத்துவிட்டது. திரைப்படம் சான்றிதழைப் பெறுவதில் சவாலை எதிர்கொண்டது. அதே, நேரத்தில் மனுதாரர்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், நீதிமன்றம் அதை செய்ய மறுத்துவிட்டது. நீதிமன்றங்கள் "கூடுதல் தணிக்கை வாரியமாக" (super censor board) செயல்படுவதில்லை என்று குறிப்பிட்டது.
சட்டம் மத்திய அரசுக்கு சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் மறுபரிசீலனை அதிகாரங்களை வழங்குவதால், அந்த தீர்வு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மூன்றாம் தரப்பினரின் கோரிக்கையின் பேரில் தனது சொந்த சான்றிதழை மீண்டும் வெளியிட அல்லது மறு ஆய்வு செய்ய மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரியத்திற்கு (Central Board of Film Certification (CBFC)) சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் பதிவு செய்தது.
நீதிமன்ற மறுஆய்வு மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரிய சட்டத்தைப் பின்பற்றியதா என்பதில் கவனம் செலுத்துகிறது. நீதிமன்றங்கள் பொதுவாக திரைப்படத்தின் படைப்பாற்றல் தேர்வுகளை (creative choices) மதிப்பீடு செய்வதில்லை. அதற்குப் பதிலாக, வாரியம் சட்டப்பூர்வ அடிப்படைகளை நம்பியதா, காரணங்களை வழங்கியதா மற்றும் நியாயமான நடைமுறையைப் பின்பற்றியதா என்பதை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்கின்றன. அந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், நீதிமன்றங்கள் தலையிடலாம். மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் வாரிய சட்டம் மற்றும் அதன் விதிகளைப் பின்பற்றும்போது, நீதிமன்றங்கள் பொதுவாக வாரியத்தின் முடிவுகளுடன் உடன்படுகின்றன.
சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், ஒரு திரைப்படம் ஒப்புதலுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டாலோ அல்லது கண்காட்சி பொது ஒழுங்கு கவலைகளை ஏற்படுத்தினாலே, மத்திய அரசு சான்றிதழை நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். சில சூழ்நிலைகளில், முன் விசாரணை இல்லாமல் திரையிடல்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம். இந்தச் சட்டவிதிகளை மீறுவது குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரிகள் திரையரங்குகளுக்குள் நுழைந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் சட்டம் கூறுகிறது. இந்த விதிகள் சட்டத்தை அமல்படுத்துவதற்காகவே உள்ளன. ஆனால், சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும் அரசாங்கம் திரைப்படங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த சட்ட விதிகள் காட்டுகின்றன.