விவேகமான கொள்கை.

 மத்திய அரசின் செயற்கை நுண்ணறிவிற்கான (artificial intelligence (AI)) தகவமைப்பு ஒழுங்குமுறை மாதிரி சரியானது.

இந்தியாவின் புதிதாக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுகை கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவின் விரைவான எழுச்சியை கையாள்வதில் வரவேற்கத்தக்க நடைமுறை அணுகுமுறையை காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை விரைந்து உருவாக்குவதற்குப் பதிலாக, மத்திய அரசு அதிகரித்துவரும் அபாயங்களை எதிர்கொள்ள தற்போதுள்ள சட்டங்களை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் தகவமைப்பு ஒழுங்குமுறை மாதிரியை (adaptive regulatory model) தேர்ந்தெடுத்துள்ளது. தொழில்நுட்பம் சட்டம் செய்யப்படும் வேகத்தைவிட வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும், அதிக ஒழுங்குமுறைகளைவிட நெகிழ்வுத்தன்மையே புதுமை மற்றும் உள்ளடக்கத்திற்கு சிறப்பாக உதவும் என்பதையும் இந்த அணுகுமுறை அங்கீகரிக்கிறது.


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கட்டமைப்பு, தன்னாட்சி அல்லது உருவாக்கும் அமைப்புகள் தோன்றுவதற்கு முந்தைய தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ல் "இடைத்தரகர்" என்ற வரையறை போன்ற தேவையற்ற பகுதிகளை சரியாக அடையாளம் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவால்-உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் தீங்கு விளைவிக்கும்போது யார் பொறுப்பேற்கிறார்கள் அல்லது நெறிமுறைகளைப் (algorithms) பயிற்றுவிக்க தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act), 2023-ன் கீழ் நோக்க வரம்பு மற்றும் சேமிப்பகக் குறைப்பு ஆகியவற்றின் தரவு-பாதுகாப்புக் கொள்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தரவைப் பயன்படுத்தி பின்னர் அதை நீக்குவது போன்ற பாரம்பரிய தரவு விதிகள், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதோடு முரண்படுகின்றன. செயற்கை நுண்ணறிவிற்கு அதிக, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தரவுத்தொகுப்புகள் தேவைப்படுகின்றன. மேலும், செயல்திறனை மீண்டும் பயிற்சி செய்து பராமரிக்க பெரும்பாலும் தரவை நீண்ட நேரம் வைத்திருக்கும். அசல் தரவு நீக்கப்பட்டாலும் கூட, செயற்கை நுண்ணறிவு மாதிரி பயிற்சி தரவிலிருந்து வடிவங்கள் அல்லது தடயங்களை இன்னும் "நினைவில்" வைத்திருக்க முடியும்.


தெளிவான வழிகாட்டுதல் அல்லது விலக்குகள் இல்லாவிட்டால், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் உருவாக்குநர்களும் பயன்படுத்துபவர்களும் சட்ட நிச்சயமின்மையில் செயல்படுவார்கள். எனவே, இந்த கட்டமைப்பு இந்தியாவின் சட்டக் கட்டமைப்பை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோருகிறது. இது போன்ற காரணிகளால் இத்தகைய ஒழுங்குமுறை இடைவெளிகள் விரிவடையாமல் தடுக்கலாம். இருப்பினும், இந்த மறுஆய்வு தரவு பாதுகாப்பு சட்டம் போல மற்றொரு மெதுவான செயல்முறையாக மாறாமல் இருக்க அரசு உறுதி செய்ய வேண்டும். அது ஆறு ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொண்டு இயற்றப்பட்டது மற்றும் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நிர்வாகம் முதல் வேலைவாய்ப்பு மற்றும் ஊடகம் வரை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவால் விரைவாக மாற்றி வருவதால், தெளிவான சட்டங்களில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.


இந்த கட்டமைப்பை போட்டி மற்றும் சந்தை குவிப்பு என்ற கோணத்திலும் பார்க்கப்பட வேண்டும். இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India), சமீபத்திய சந்தை ஆய்வில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் புதுவிதமான கூட்டு வழிமுறை சதிகளை (algorithmic collusion) செயல்படுத்தலாம் மற்றும் போட்டிக்கு புதிய தடைகளை உருவாக்கலாம் என்று எச்சரித்துள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழல் ஏற்கனவே முக்கிய "செயற்கை நுண்ணறிவு அடுக்கை" (AI stack) கட்டுப்படுத்தும் மேகக்கணினி உள்கட்டமைப்பு, உயர்தர தரவுத்தொகுப்புகள், மற்றும் பெரிய அடிப்படை மாதிரிகள் ஆகிய சில பெரிய நிறுவனங்களின் கைகளில் குவிந்துள்ளது. இந்த ஆதிக்கம், இந்தியாவில் இலவச செயற்கை நுண்ணறிவு கருவிகளை வழங்குவது போன்ற சேவைகளை மானியமாக வழங்கும் திறனுடன் இணைந்து, சிறிய புத்தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, புதுமைகளைத் தடுக்கக்கூடும்.


ஒட்டுமொத்தமாக, ஐரோப்பிய ஒன்றியம் விதிகள் நிறைந்த மாதிரியைத் (rules-heavy model) தேர்ந்தெடுத்துள்ளது மற்றும் அமெரிக்கா சந்தை சக்திகளையும் தன்னார்வ கட்டமைப்புகளையும் துறையை வடிவமைக்க அனுமதிக்கும் கைகளை விட்டு விலகிய நிலைப்பாட்டை (hands-off stance) எடுத்துள்ளது ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நடுநிலை அணுகுமுறை தனித்து நிற்கிறது.



Original article:

Share: