இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டம், மாசுபாடு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மீண்டும் வெளிக் கொண்டுவருகிறது. -கண்ணன் கே

 இந்தியா போன்ற நாட்டில், நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் பயனுள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. ஆனால், அரசாங்கம் பொதுப் போக்குவரத்தை எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் ஊக்குவிக்கிறது? சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பை (sustainable transit system) அளவிடுவதில் என்ன சவால்கள் உள்ளன மற்றும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம்?


நமது நாட்டின் தலைநகரில் மோசமடைந்துவரும் காற்றின் தரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தினர். இது நகரத்தின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு புதுப்பிக்கப்பட்ட கவனத்தை ஈர்த்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன உமிழ்வு உள்ளிட்ட பல காரணிகளால் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிக்கிறது வருகிறது.


இந்தியா போன்ற நாட்டில், நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் பயனுள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. இந்த அவசரம் உலக பொதுப் போக்குவரத்து நாளின் கருப்பொருளான "சமூகங்களை இணைத்தல், உமிழ்வுகளை குறைத்தல்" (Connecting Communities, Reducing Emissions) என்ற கருப்பொருளில் எதிரொலிக்கிறது. இது தனியார் வாகனங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க, கூட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.


சர்வதேச பொதுப் போக்குவரத்து சங்கத்தின் (International Association of Public Transport (UITP)) தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று உலக பொதுப் போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது. உலக பொதுப் போக்குவரத்து தினம், அனைவருக்கும் நிலையான, திறமையான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்புகளின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நாளில், இந்தியாவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு, அதனை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான பரந்த தாக்கங்கள் ஆகியவற்றை ஆராய்வது முக்கியமானதாக இருக்கும்.


விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதன் தாக்கம்


இந்தியா உலகில் வேகமாக நகரமயமாகி வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 60 கோடி பேர்) 2036-க்குள் நகரங்கள் மற்றும் நகரப்புறங்களில் வாழ்வார்கள் என்று உலகவங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தகைய விரைவான நகரமயமாக்கல் உள்கட்டமைப்பு, நீர்வளங்கள் மற்றும் காற்றின் தரம் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒரு முக்கிய கவலையாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நகர்ப்புற மாற்றத்தை திறம்பட கையாள்வது 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை அடைவதற்கு முக்கியமானதாக இருக்கும்.


பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal) 11-ஐ அடைவதற்கும் வலுவான பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது முக்கியம். குறிப்பாக இலக்கு 11.2, அனைவருக்கும் பாதுகாப்பான, குறைவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நிலைத்த போக்குவரத்து அமைப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.


எனவே, பொதுப் போக்குவரத்தை ஒரு சேவையாக மட்டும் கருதாமல், நகர்ப்புற மாற்றத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சாத்தியமாக்கும் கொள்கைக் கருவியாகப் பார்க்க வேண்டும்.


பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் முக்கியத்துவம்


நன்கு திட்டமிடப்பட்ட, அணுகக்கூடிய மற்றும் குறைவான நகர்ப்புற பொதுப் போக்குவரத்து வலையமைப்பை நிறுவுவது பல சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டுள்ளது:


சமூக-பொருளாதார நன்மைகள்: முதலாவதாக, பொதுப் போக்குவரத்து, குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வேலை வாய்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை குறைவானதாகவும், எளிதாகவும் அணுக உதவுவதன் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க உதவுகிறது.


இரண்டாவதாக, இது தனியார் வாகனங்களின் மீதான சார்புநிலையை குறைக்க உதவுகிறது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, எரிபொருள், நேரம், காற்று மற்றும் ஒலி மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் சுகாதாரச் செலவுகளில் கணிசமான சேமிப்பிற்கு வழிவகுக்கிறது.


மூன்றாவதாக, இது பொதுப் போக்குவரத்து மையங்களைச் சுற்றி வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளை ஒன்றிணைப்பதை ஆதரிக்கும் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக் கொள்கையை (Transit-Oriented Development (TOD)) எளிதாக்குகிறது.


சுற்றுச்சூழல் நன்மைகள்: தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஒவ்வொரு நபரால் உற்பத்தி செய்யும் பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gas) வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், பொதுப் போக்குவரத்தை நம்பியிருப்பது காற்றின் தரத்தை மேம்படுத்தும் துகள் பொருள் (PM 2.5) மற்றும் புகைமூட்டத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.


பொதுப் போக்குவரத்து, வரையறுக்கப்பட்ட நகர்ப்புற இடத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. விரிவான வாகன நிறுத்துமிடங்களுக்கான தேவையைக் குறைக்கிறது மற்றும் சாலை விரிவாக்கத்தையும் குறைக்கிறது. அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு வலுவான போக்குவரத்து அமைப்பை விரைவாக மாற்றியமைக்க முடியும். எடுத்துக்காட்டாக, மாசுக் கட்டுப்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதல் பயணங்களைச் சேர்க்க டெல்லி மெட்ரோவின் சமீபத்திய முடிவு, பொதுப் போக்குவரத்து எவ்வாறு ஒரு பயனுள்ள எதிர்வினை வழிமுறையாகச் செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.


இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள முயற்சிகளை மீண்டும் வெளிக்கொண்டு வருகிறது.


நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சிகள்


பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பின்வருவன அடங்கும்:


ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)): 2005-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், முதல் நகர்ப்புற நவீனமயமாக்கலுக்கான (urban modernisation) பெரிய அளவிலான தேசிய முயற்சியாகும். இந்தத்திட்டத்தில் தூய்மையான நகர்ப்புற போக்குவரத்து ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இது நகரங்கள் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நிதி வழங்கியது. அவற்றில் கணிசமான பகுதி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவால் (Compressed Natural Gas-powered) இயக்கப்படும் பேருந்துகளாகவும், ஹைப்ரிட்-மின்சார மற்றும் முழு மின்சார பேருந்துகளாகவும் இருந்தன.


தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை (National Urban Transport Policy (NUTP)): 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பில்லியன் கணக்கான மணிநேரங்களை இழப்பதன் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது மற்றும் வாகனத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறுவதையும், பொதுப் போக்குவரத்திற்கும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற வாகனம் அல்லாத போக்குவரத்திற்கும் (Non-Motorised Transport (NMT)) முன்னுரிமை அளிப்பதையும் ஆதரிக்கிறது. இந்தத் திட்டம் 'பாதுகாப்பான, மலிவு, விரைவான, வசதியான, நம்பகமான மற்றும் நிலையான  நகர்ப்புற பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


FAME I மற்றும் II (மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல்): இந்தத் திட்டங்கள், டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளால் மாற்றுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவதன்மூலம் பொதுப் போக்குவரத்தின் கார்பன் நீக்கத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நகர்ப்புற உமிழ்வு மற்றும் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய உதவுகிறன. இந்தத் திட்டங்கள் மின்னேற்ற உள்கட்டமைப்பை (charging infrastructure) அளவிடுவதன் மூலம் பொது போக்குவரத்து இயக்குநர்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க உதவின.


பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission): 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை ஆதரிக்கிறது. இதில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (Intelligent Transport Management Systems (ITMS)) மற்றும் 'ஒரே நாடு, ஒரே அட்டை' அமைப்பு ஆகியவை அடங்கும். இது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை (National Common Mobility Card (NCMC)) எனப்படும் ஒற்றை அட்டை மூலம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்திற்கு பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.


மீதமுள்ள சவால்கள் என்ன?


இருப்பினும், இந்தியாவில் தூய்மையான பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது தனித்துவமான சவால்களுடன் வருகிறது. முதலாவதாக, மெட்ரோ வலையமைப்புகள் மற்றும் விரிவான பேருந்துக் குழுக்கள் போன்ற பெரிய அளவிலான பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க மூலதன முதலீடு தேவைப்படுகிறது.


மேலும், பல மாநில சாலை போக்குவரத்து கழகங்கள் (State Road Transport Undertakings (SRTUs)) தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும், அவற்றின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகளை நம்பியிருப்பதாலும், இத்தகைய திட்டங்களின் நிதி நிலைத்தன்மை நிச்சயமற்றதாகவே உள்ளன.

இரண்டாவதாக, மெட்ரோ நிர்வாகம், மாநகராட்சிகள் மற்றும் சாலை போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், தொடர்ச்சியின்மை மற்றும் கடைசி-மைல் இணைப்பு இடைவெளிகள் ஏற்படுகின்றன.


இறுதியாக, கொள்கைகளில் உள்கட்டமைப்பு சார்பு தெளிவாக உள்ளது. இவை பெரும்பாலும் மேம்பாலங்கள், உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சாலை-அகலப்படுத்தும் திட்டங்கள் மூலம் தனியார் வாகனங்களை இடமளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. இது பெரும்பாலும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், பேருந்துகளுக்கான சிறப்புப் பாதைகள் உள்கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திறமையான பொதுப் போக்குவரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது.


இதன் விளைவாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பது காற்று மாசுபாட்டின் மோசமடைந்து வரும் பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தலைநகருக்குள் BS-III மற்றும் BS-IV வாகனங்கள் நுழைவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை இது அவசியமாக்கியுள்ளது.


முன்னோக்கிச் செல்லும் வழி


மலிவான, அணுகக்கூடிய மற்றும் நன்கு இணைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த கொள்கை தலையீடுகள் தேவைப்படும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தில் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) கற்பனை செய்யப்பட்டபடி அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையங்களை (Unified Metropolitan Transport Authorities (UMTAs) அமைப்பது, அனைத்து நகர போக்குவரத்தையும் ஒன்றிணைத்து, பல்வேறு வகையான போக்குவரத்தில் சிறந்த திட்டமிடலை உறுதி செய்யும்.


குறிப்பாக, வாகனம் அல்லாத போக்குவரத்திற்கும் (Non-Motorised Transport (NMT)) முறைகள் வழியாக முதல் மற்றும் கடைசி-மைல் இணைப்பில் உள்ள இடைவெளிகளை நீக்குவதில் கவனம் செலுத்தும் கொள்கைகள் தடையற்ற பயண அனுபவத்தை உறுதிப்படுத்த உதவும். மேலும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த, சிங்கப்பூர், மிலன் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்புகளைக் கொண்ட நகரங்களில் காணப்படுவது போல் வரி அல்லது நெரிசல் வரிகளின் (congestion taxes) வகைகளை விதித்தல் போன்ற புதுமையான பொறிமுறைகள் பொதுப் போக்குவரத்து வளர்ச்சிக்கு நேரடியாக நிதியளிக்க கருத்தில் கொள்ளப்படலாம்.


மேலும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கருவிகளின் பயன்பாடு மாறும் வழித்தட திட்டமிடல் மற்றும் நிகழ்நேர வாகனக் கண்காணிப்பை செயல்படுத்த முடியும். இது பொதுப் போக்குவரத்தை மிகவும் திறமையாகவும் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் மாற்ற உதவும்.


குறைவான விலையில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் நுட்பத்தை தாண்டி, நடத்தை மாற்றங்களைக் கொண்டுவர நீடித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிகவும் முக்கியமானவை. பொதுப் போக்குவரத்து மற்றும் வாகனம் அல்லாத போக்குவரத்து முறைகளுக்கு மாறுவதால் கிடைக்கும் பொருளாதார, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து குடிமக்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.


உதாரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க்கில் இலவச பேருந்து பயணச்சீட்டுகளுக்காக பிரச்சாரம் செய்தார். இது வாக்காளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. பணக்கார நாடுகளில்கூட குறைவான விலையில் பொதுப் போக்குவரத்து தேவைப்படுவதை இது காட்டுகிறது.


இந்தியாவின் வேகமாக வளரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டுடன், நன்கு திட்டமிடப்பட்ட, திறமையான பொது போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இல்லை. அது மாறாக ஏதேனும் வெற்றிகரமான இந்திய நகரத்திற்கு பேச்சுவார்த்தைக்குட்படாத முன்நிபந்தனையாகவும், இந்தியாவின் நிலையான, சமநீதியான மற்றும் திறமையான நகரமயமாக்கலுக்கான முன்னேற்றத்தின் முக்கிய தீர்மானகரமாகவும் இருக்கும்.



Original article:

Share: