தமிழ்நாடு இந்த ஆண்டு நான்கு புதிய பல்லுயிர் பாரம்பரிய தளங்களை (Biodiversity Heritage Sites) பெறலாம் -பி. அரவிந்த் குமார்

 தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் (Tamil Nadu Biodiversity Board (TNBB)) திண்டுக்கல், கடலூர், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள புதிய இடங்களை பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அறிவிக்கும் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. சுமார் 10 திட்டங்களுக்கான கருத்துருக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.   


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மேலும் 4 இடங்கள் இந்த ஆண்டு பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்படலாம். 


தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் (Tamil Nadu Biodiversity Board (TNBB)) குறிப்பிடத்தக்க முக்கிய பகுதிகளைப் பல்லுயிர் பாரம்பரிய தளங்களாகக் கண்டறிந்து, அங்கீகரித்து, அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம் (Arittapatti Biodiversity Heritage Site) (மதுரை மாவட்டம்) தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக (Biodiversity Heritage Site) நவம்பர் 2022 இல் அறிவிக்கப்பட்டது.


இப்போது, காசம்பட்டி (திண்டுக்கல்), செந்திரக்கிளை புனித தோப்பு (கடலூர்), இடையப்பட்டி (மதுரை) மற்றும் குரியனப்பள்ளி வனத் தொகுதி (கிருஷ்ணகிரி) ஆகியவற்றை பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக (Biodiversity Heritage Site (BHS)) அங்கீகரித்து அறிவிக்கும் திட்டத்தை தமிழ்நாடு பல்லுயிர் வாரியம்  சமர்ப்பித்துள்ளது.


தமிழ்நாடு பல்லுயிர் வாரியம், 2024-ம் ஆண்டு புதிய பல்லுயிர் பாரம்பரிய தளங்களுக்கான ஐந்து முதல் 10 கூடுதல் முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது என்று தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தின் முன்னாள் செயலாளர் சேகர் குமார் நிராஜ் கூறினார். 


செந்திரக்கிளை புனித தோப்பு பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக முன்மொழிவு கடலூர் வனப் பிரிவில் இருந்து பெறப்பட்டது. மேலும் பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக (Biodiversity Heritage Site (BHS)) அறிவிக்கப்படுவதற்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தின்  குழுவால் டிசம்பர் 6, 2022 அன்று மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர், எல்லை விவரங்கள் மற்றும் அதன் சூழலியல் மற்றும் சமூக-பொருளாதார அம்சங்கள் குறித்த தேவையான அனைத்து விவரங்களுடன் மார்ச் 9, 2023 அன்று கோரிக்கைகளை முன்மொழிவாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுவரை 11 மாவட்டங்களில் 20 முன்மொழியப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய தளங்களில் கள மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் கடற்கரைக்கு அருகில் உள்ள பொம்மையபாளையம் கிராமத்தில் உள்ள இடங்களை, பல்லுயிர் பாரம்பரிய தளமாக  அறிவிக்கக் கூடும். இந்த பகுதி ஒரு குறிப்பிட்ட வகை காட்டு எள் தாவரத்தின் இயற்கையான வளர்ச்சிக்காக அறியப்படுகிறது.   "காட்டு எள்" (wild sesame), எள் ப்ரோஸ்ட்ராட்டம் (Sesamum prostratum) வகையைச் சார்ந்தது.. இருப்பினும், அதன் வளர்ச்சி முக்கியமாக மாசுபாட்டின் காரணமாக குறைந்துள்ளது. அங்கு மரபணு ஆய்வு செய்ய வாரியம் திட்டமிட்டுள்ளது. அவர்களின் குறிக்கோள், மேலும் சேதத்திலிருந்து தளத்தைப் பாதுகாப்பதும் ஆகும். இந்த பகுதி பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்படுவதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

 

தமிழ்நாடு மாவட்டங்களிலிருந்து 25 முன்மொழிவுகள்  


வாரியம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 25 பல்லுயிர் பாரம்பரிய தளங்களுக்குத் (Biodiversity Heritage Site (BHS)) திட்டங்களை பெற்றுள்ளது. மேலும் அரசாங்கத்திடம் அதன் ஒப்புதலுக்காகவும் அதைத் தொடர்ந்து அறிவிப்புக்காகவும் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுகளை முடிக்க தேவையான விவரங்களைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 


மாநிலத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளங்களின் வலையமைப்பை (network of Biodiversity Heritage Sites) உருவாக்குவது தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். இது உள்ளூர் சமூகங்களையும் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுத்தலாம். இந்த அணுகுமுறை இந்த பகுதிகளின் நிலையான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். நன்மைகள் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளப்படுவதை இது உறுதி செய்கிறது. எதிர்காலத்தில், உள்ளூர் பிராந்தியங்களில் நிலையான வளர்ச்சிக்கு இந்த முயற்சி முக்கியமானதாக இருக்கும்.

 

தமிழ்நாடு பல்லுயிர் வாரியமானது தமிழ்நாட்டின் உயிரியல் வளங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவற்றின் அங்கீகாரத்தின் செயல்முறையின் மூலம் அவற்றின் நிலையான பயன்பாட்டை எளிதாக்குவதன் மூலம் கட்டுப்படுத்துகிறது என திரு. நிராஜ் கூறினார்.   




Original article:

Share: