இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தப்பட்ட இந்தியா-மாலத்தீவு நாடுகள், தங்களது உறவுகளின் பரஸ்பர நன்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் வேகமாக விரிசலைடைந்து வருகின்றன. மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸுவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இது நடபெற்றது. இது கவலையளிக்கும் நிகழ்வாகும். மூன்று மாலத்தீவு அமைச்சர்களின் ட்வீட்களில் இருந்து பிரச்சனை தொடங்கியது. அவர்கள் திரு. மோடியின் லட்சத் தீவுகளில் அவர் செய்த மேம்பட்டு பனிகளை விமர்சித்தார்கள். அவரின் இந்த நடவடிக்கைகள் மாலத்தீவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் கூறினர். இஸ்ரேலுடனான அவரது வலுவான உறவையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய ட்வீட்கள் நீக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாலத்தீவு அரசாங்கம் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து தன்னைப் பிரித்துக்கொண்டது. இருப்பினும், நிலைமை ஏற்கனவே மோசமாக உள்ளது. பல இந்தியர்களிடம் இது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவர்கள் மாலத்தீவின் பொருளாதாரப் புறக்கணிக்கக் கோரி சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். கோவிட்-19க்குப் பிறகு மாலத்தீவுக்கு வருகை தரும் மிகப்பெரிய சுற்றுலாகுழு இந்திய சுற்றுலாப் பயணிகளே. ஆனால் இந்த நிகழ்வுகளை விட மிகவும் சிக்கலானவை இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவை பெரிதும் பாதிக்கும். மாலத்தீவின் தலைநகரான மாலேயில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் இதில் பங்கு வகிக்கிறது.
மாலத்தீவுகளின் முற்போக்குக் கட்சி (Progressive Party of Maldives (PPM)) இன் "இந்தியாவை வெளியேற்றுவது" (India Out) என்ற பிரச்சாரத்தின் உதவியுடன் திரு. முய்ஸு (Muizzu) ஜனாதிபதியானார். அவரது வெற்றியால் இந்தியா ஏமாற்றம் அடைந்தது. முன்னால் ஜனாதிபதியான இப்ராகிம் சோலியுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம். இருந்தாலும், இந்திய அரசாங்கம் திரு.முய்சுவின் பதவியேற்பு விழாவிற்கு ஒரு அமைச்சரை அனுப்பியது. COP28 காலநிலை மாநாடு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திரு.முய்சுவை சந்தித்தார். ஆனால் திரு. முய்ஸு தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்திற்கு துருக்கியைத் தேர்ந்தெடுத்தார். தற்போது அவர் சீனா சென்றுள்ளார். இந்தியாவுக்கு முதலில் செல்ல முன்னுரிமை அளிக்காத மாலத்தீவின் முதல் ஜனாதிபதி இவர்தான். "இந்தியாவை வெளியேற்றுவது" (India Out) இயக்கத்தைத் தொடங்கி, பெய்ஜிங்கிற்கு ஒத்துழைத்த ஜனாதிபதி யாமீன் கூட, 2014 இல் டெல்லிக்கு முதன்முதலில் விஜயம் செய்தார். திரு. முய்ஸு, மாலத்தீவில் இருந்து தனது ராணுவ வீரர்களை இந்தியாவை வெளியேற்றும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்.
புறக்கணிப்பு அழைப்புகள் மற்றும் அதிகரித்து வரும் தேசியவாதத்தால் நிலைமை பதட்டமாக உள்ளது. இந்தியா மற்றும் மாலத்தீவு நாடிகள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவிற்க்கு அருகில் மாலத்தீவு உள்ளது, இந்தியா பொருளாதார பலத்துடன் உள்ளது. இது இந்தியப் பெருங்கடலில் முக்கிய பாதுகாப்பு வழங்குநராகவும் இருந்து வருகிறது. மாலத்தீவு இந்த ஆதரவை நம்பியிருக்கிறது. எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், ஒரு சிறிய நாட்டை நோக்கி ஆக்ரோஷமாக இருப்பது தவறு என்பதை இந்தியா உணர வேண்டும்.
சமீப ஆண்டுகளில், சோலி அரசுக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவு பலனளித்தது. மாலத்தீவில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. அவர்கள் ஒரு வலுவான ராஜதந்திர கூட்டாண்மையையும் உருவாக்கியுள்ளனர். COVID-19 தொற்றுநோய் காலத்தில் இந்தியா மாலத்தீவுக்கு ஆதரவளித்தது. சர்வதேச அளவிலும் அவர்கள் ஒத்துழைத்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, நிலையான இருதரப்பு உறவுகளைப் பேணுவது மிகவும் முக்கியம். குறிப்பாக இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அண்டை நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் இருதரப்பு உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றாமலோ அல்லது பிராந்திய உறுதிதன்மையை பாதிக்காமலோ இருப்பதை உறுதிசெய்வது மிக முக்கியமானது.