இந்தியாவில் தளவாடச் செலவுகளைக் (logistics costs) குறைப்பதற்கான ஆரம்பப் படி துல்லியமான தரவுகளைக் கொண்டிருக்கிறது -பிபேக் டெப்ராய்

 தளவாடங்கள் (Logistics) நீண்ட காலமாக விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா தனது செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இப்போது, அளவீடு மற்றும் அளவீட்டிற்கான மிகவும் துல்லியமான தரவைப்  பெறுகிறோம், இது நன்மை பயக்கும்.


உலக வங்கியானது வர்த்தக தளவாடங்களில் கவனம் செலுத்தும் தளவாட செயல்திறன் குறியீட்டை (Logistics Performance Index (LPI)) கொண்டுள்ளது. இது சுங்கம், உள்கட்டமைப்பு, சர்வதேச ஏற்றுமதி, தளவாடத் திறன், கண்காணிப்பு, நேரம் மற்றும் தடமறிதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். 2023 தளவாட செயல்திறன் குறியீட்டில்,  139 நாடுகளில் இந்தியா 38-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2014 இல் இருந்த 54-வது தரவரிசையிலிருந்து சில படிகள் முன்னேற்றமாகும். 2022 ஆம் ஆண்டில், இந்தியா சில குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்துள்ளது: (i) 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய செயல்திறன்களுடன் பொருந்தக்கூடிய தளவாடச் செலவுகளைக் குறைத்தல், (ii) 2030 ஆம் ஆண்டில் முதல் 25 நாடுகளில் தளவாட செயல்திறன் குறியீடு (LPI) தரவரிசையை மேம்படுத்துதல் மற்றும் (iii) திறமையான தளவாடங்களுக்கான தரவு சார்ந்த ஆதரவை உருவாக்குதல். 2021 இல் தொடங்கப்பட்ட PM கதி சக்தி (PM Gati Shakti) முயற்சி, தளவாட செயல்திறன் குறியீடு 2023 இல் இன்னும் பிரதிபலிக்காமல் இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தும்.


தளவாடங்களின் செயல்திறனைப் பார்க்க வெவ்வேறு வழிகள் உள்ளன. 2022-23 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் தளவாடச் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14-18% ஆகவும், உலகளாவிய மதிப்பீட்டின் படி 8% ஆகவும் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட் அறிக்கையின்படி(Dun and Bradstreet (D&B) report), கடல் துறைமுகங்களில் வணிகம் செய்வதற்கான செலவு சரக்கு மதிப்பில் சுமார் 15-16 சதவீதம் என்று கண்டறிந்தது. துறைமுகங்கள் முழுவதும் பரவலான மாறுபாடுகள் உள்ளன. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் விநியோகச் சங்கிலியில் (supply chain) தளவாடச் செலவுகள் கிட்டத்தட்ட 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் ஆர்தர் (CII-Arthur D)  ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. ஒப்பீட்டளவில், தளவாடச் செலவுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8-10%, சீனாவில் 9% மற்றும் உலகளவில் 8% ஆகும். இது இந்தியாவிற்கு 180 பில்லியன் அமெரிக்க டாலர் போட்டித்திறன் இடைவெளியைக் குறிக்கிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற பிற தெற்காசிய நாடுகளும் அதிக தளவாடச் செலவுகளைக் கொண்டிருந்தன. அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% மற்றும் 16-17% ஐ எட்டியுள்ளன. டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட் (Dun and Bradstreet (D&B)) அறிக்கை தெளிவான வழிமுறையைக் கொண்டிருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக தளவாடச் செலவுகள் தொடர்பான சில எண்கள் தெளிவாக இல்லை, ஏனெனில் விதிமுறை தெளிவாக விளக்கப்படவில்லை. 


டிசம்பர் 2023 இல் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (National Council of Applied Economic Research (NCAER)) அறிக்கை,  இந்தியாவில் தளவாடச் செலவுகள் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, தளவாடச் செலவுகளுக்கான அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் இந்தியாவில் இல்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த செலவுகளைக் கணக்கிட்டுள்ளன. வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து பல்வேறு மதிப்பீடுகள் அளவீட்டில் மாறுபாடுகளைக் காட்டுகின்றன. புதிய தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை, தளவாடச் செலவுகளை மதிப்பிடுவதற்கு வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளைப் (supply and use tables) பயன்படுத்துகிறது. 2021-22ல், இந்த செலவுகள் 7.8% முதல் 8.9% வரையிலும், 2014-15 ஆம் ஆண்டில், அவர்கள் 8.3 சதவிகிதம் மற்றும் 9.4 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது (2017-18 மற்றும் 2018-19 இல் தற்காலிக அதிகரிப்புடன்). தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) அறிக்கை இந்தத் தலைப்பில் இறுதி அறிக்கை எதுவும் வெளியிடவில்லையெனினும், இது ஒரு தெளிவான வழிமுறையுடன் ஒரு தொடக்கப் புள்ளியைக் குறிக்கிறது. மேலும், இரண்டு முக்கிய புள்ளிகள் வெளிப்படுகின்றன: தளவாடச் செலவுகள் அடிக்கடி சித்தரிக்கப்படுவது போல் கடுமையாக இருக்காது. மேலும் அவை காலப்போக்கில் கீழ்நோக்கிய போக்கைக் காட்டுகின்றன, இது தளவாட செயல்திறன் குறியீடு (Logistics Performance Index (LPI)) தரவுகளுடன் ஒத்துப்போகிறது.  


தளவாடங்கள் மாநிலங்களால் இயக்கப்படுகிறது மற்றும் வர்த்தக அமைச்சகம்  வெவ்வேறு மாநிலங்கள் முழுவதும் தளவாடங்கள் எளிதாக்குதல் பற்றிய அறிக்கையைக் (Logistics Ease Across Different States report) வெளியிடுகிறது. அவ்வறிக்கையின் 2023 பதிப்பு டிசம்பரில் வெளியிடப்பட்டது. மாநிலங்கள் நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: கடலோர, நிலப்பரப்பு, வடகிழக்கு மற்றும் யூனியன் பிரதேசங்கள். சிறப்பாக செயல்படுபவர்கள் சாதனையாளர்கள் (achievers) என்றும், நடுவில் இருப்பவர்கள் வேகமாக நகருபவர்கள் (fast movers) என்றும் அழைக்கப்படுகிறார்கள். குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் ஆர்வலர்கள் (aspirers) என்று குறிப்பிடப்படுகின்றன. கடலோர மாநிலங்களில் இருந்து 75 சதவீத ஏற்றுமதி சரக்குகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அவற்றை கவனம் செலுத்துவோம். 


கடலோர மாநிலங்களில் ஆந்திரா, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை சிறப்பாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் கோவா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை பின்தங்கியுள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த தளவாடங்களின் செயல்திறன் காலப்போக்கில் மேம்பட்டாலும், எல்லா மாநிலங்களும் முன்னேற்றம் காணவில்லை; இதை சிலர் மறுத்துள்ளனர். கோவா மற்றும் ஒடிசா உட்பட பெரும்பாலான மாநிலங்கள் அவற்றின் சொந்த மாநில அளவிலான தளவாடக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், கடலோர மாநிலங்களில் மிகக் குறைந்த இடத்தில் இருக்கும் மேற்கு வங்கத்தில் ஒன்றுகூட இல்லை. வெவ்வேறு மாநிலங்களில் தளவாடங்கள் எளிதாக்குதல் (Logistics Ease Across Different State (LEADS)) 2023 அறிக்கையின்படி,  செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தளவாடத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மாநிலத் தளவாடப் பெருந்திட்டம் State Logistics Master Plan) மற்றும் மாநிலத் தளவாடக் கொள்கையை (State Logistics Policy) உருவாக்குவதன் மூலம் மேற்கு வங்க மாநிலம் பயனடையலாம். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளைப் பற்றித் தெரிவிக்க தளவாடப் பங்குதாரர்களுடன் அவர்கள் ஈடுபட வேண்டும். மற்றும் தளவாடத் துறையை மேம்படுத்தவும் வேண்டும்.  


மக்கள் சிறிது காலமாக தளவாடங்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர். மேலும் இந்தியா அதை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இப்போது, அதை அளவிடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் நம்மிடம் மிகவும் துல்லியமான தரவு உள்ளது, இது நன்மை பயக்கும்.




Original article:

Share: